Wednesday, May 16, 2018

சசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்

பேஸ்புக்கில் இருக்கும் சிங்கிள்ஸ்களுக்காக டேட்டிங் வசதி கொண்டு வரும் மார்க்!
# ரிமார்க்கபிள்.இனி மா"மார்க்" என அழைக்கப்படுவீர்

==============


2 பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை: முதல்வர் # அப்டியே வாய்ப்பு கிடைச்சாலும் தமிழகத்துக்கு சாதகமா 1ம் நடக்கப்போறதில்ல,அப்றம் சந்திச்சா என்ன?சந்திக்காட்டி என்ன?


==============


3 மத்திய அரசின் விதவைகள் நல திட்டத்தை செயல்படுத்தாத..
ஆந்திரா
காஷ்மீர்
கர்நாடகா
ஆகிய மாநிலங்களுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தது சுப்ரீம் கோர்ட்.# சபாஷ்,கோர்ட் இப்டி கொட்டிட்டே இருந்தாலாவது ஒழுங்கா ஆட்சி பண்ணுவாங்களா பார்ப்போம்
ஒடிசா


================4 ஆண்டவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்..
- உயர்நீதிமன்ற நீதிபதி.
# அப்போ ஆல்ரெடி தமிழ் நாட்டை ஆண்டவர் கலைஞர்தான்,அவர் கேட்டா சொல்வீங்களா?
தமிழகத்தைப்பொறுத்தவரை "ஆண்டவர்" னா கமல் தான்,அவர் கேட்டா?
இது என்ன ஹை கோர்ட்டா?ஆன்மீகக்கார்ட்டா?


===============5 ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த தினகரனுக்கு எதிராக ரூ.20 நோட்டை காட்டி பொதுமக்கள் போராட்டம்.
# டோக்கன் கொடுத்தா போதுமா?அந்த பத்தாயிரத்துக்கு பதில் என்ன?னு கேட்கறாங்க போல
===============6 அம்மா அணி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். # அடுத்ததா சசிகலா வீட்டு வாட்ச்மேனும் ,தோட்டக்காரனும் ,சமையல்காரனும் தனித்தனியா ஒரு கட்சி தொடங்கப்போறாங்களாம்=============7 ஆட்சியை யாரும் கலைக்க முடியாது; நூறாண்டுகள் அதிமுக ஆட்சி தான்; − மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை # இதுக்கு ஏதாவது பரிகாரம் உண்டுங்களா?


==============8 சசிகலா குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் அதிமுகவில் சேர்க்கமாட்டோம்" - அமைச்சர் ஜெயக்குமார் # நல்லவரோ",கெட்டவரோ ஓனர்"சசிகலாவுக்கே"துரோகம் பண்ற நீங்க மக்களுக்கு துரோகம் பண்ண மாட்டீங்கனு"என்ன"நிச்சயம்?===============


9 எஸ்விசேகர் பேசும்போது கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார். அது ஓர் ஆணவ உடல் மொழி. ஆடிக்கொண்டே இருந்த கால்கள் காவல்துறைக்குப் பயந்து இப்போது ஓடிக்கொண்டே இருக்கின்றன. -சுபவீர பாண்டியன் # ஓடி ஆடி வேலை செய்யனும்,இப்டி போலீசுக்கு பயந்து ஆடிப்போய் ஓடக்கூடாது


=============10 துண்டு சீட்டு இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை ராகுல் காந்தி பேச முடியுமா - மோடி கேள்வி #
மதுரை முத்து ,ஈரோடு மகேஷ் கூட எந்த சீட்டும் இல்லாமல் 4 மணி நேரம் பேசுவாங்க,அவங்களை பிரதமர் ஆக்கிடுவோமா ?!===============

11 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்ப்போம் - திருமாவளவன்
# எங்கே காங் 2019 ல ஜெயிச்சிடுமோ?னு"பயந்துட்டு இருந்தேன்,இப்ப நிம்மதி
=============12 முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிபட்டுவரமாட்டார்; அடுத்ததாக உதயநிதி வந்துவிட்டார் - செல்லூர் ராஜூ # வரிசைப்படி.முதல்ல இரண்டாம் கலைஞர் முதல்வர் ஆகட்டும்,அடுத்ததா மூன்றாம் கலைஞர்,நல்ல ஜனநாயகக்கட்சி============13 எம்ஜிஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள் - செல்லூர் ராஜூ
# அப்போ சசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம் போட்டுக்காட்ட சொல்லுங்க===============14 தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்திக்க விரும்பவில்லை-EPS# விரும்பித்தான் பாருங்க,சந்திச்சுடறாரா?பாத்துடுவோம்


============

15 கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்
# இதைப்படிச்சுட்டு புதுசு புதுசா எத்தனை தொழில் அதிபருங்க ஏமாத்தப்போறாங்களோ"=================


16 தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிராகரித்தார் சித்தராமையா # கோர்ட் உத்தரவை மீறுனா ஆட்சி கலைக்கப்படும்னு சட்டம் வந்தா அவனவன் அரண்டு போய்டுவான்===============17 333 கோடி வரதட்சணை கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்த சவுதி இளவரசர் # பாங்கெழடா இருந்தா என்ன?குடிகாரனா இருந்தா என்ன?
பொம்பள பொறுக்கியா இருந்தா என்ன?பணம் இருந்தா போதும்
===============
18 ஆட்சியை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - திரிபுரா முதல்வர்
# அதுக்கு"பதிலா நெய்ல் கட்டர் வாங்கித்தந்துட்டா நாங்களே"வெட்டிக்குவோம்============19 விரைவில் தமிழக பாஜக பொறுப்பாளராக நிர்மலா சீத்தாராமன்? -செய்தி # இவரோட பாடிலேங்க்வேஜ்ல தெரியற தெனாவெட்டு பாஜக வாக்குவங்கிக்கு (அப்டி 1 இருந்தா) பெரும் பின்னடைவு


=============

20 டாஸ்மாக் மதுபான கடையை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி # யுவர் ஆனர்,காலைல எழுந்ததும் வெறும் வயித்துல 1 லிட்டர்"தண்ணி குடிச்சா உடம்புக்கு நல்லதுனு டாக்டர் சொல்லி இருக்காரு============

0 comments: