Sunday, May 13, 2018

காமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A


Image result for kamuki malayalam movie


இது ஒரு ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட். ஹீரோயின் ஒரு மிடில் கிளாஸ் ஃபெமிலி, அவரோட அக்கா ஒரு வெட்டாஃபீசரை லவ் மேரேஜ் பண்ணிட்டு ஓடிப்போனதல வீட்ல ஏகப்பட்ட கண்டிஷன், லவ் கிவ்னு வந்துடாதெ என எச்சரிக்கையோடு வளர்க்கப்படுபவர், டீன் ஏஜ் ல வராத லவ்வும், அரசியல் கட்சில ஏற்படாத கோஷ்டி சண்டையும் உலகில் கிடையாதே, ஹீரோயின் ஒரு சாரி இரு விழி ஒளி இழந்தவரை லவ்வறார். அவர் லவ் என்னாச்சு ? என்பதை ஜாலியான திரைக்கதைல சொல்ல முயற்சி பண்ணி இருக்காரு டைரக்டர்


மகேஷிண்டே பிரதிகாரம் பட நாயகி அபர்ணா தான் இந்தப்பட ஹீரோயின். பால் அல்வாவுல ரோஸ் மில்க் ஊற்றினா எப்டி இருக்கும் ? அது மாதிரி நேச்சுரல் பட்டு ரோஸ் கலர்ல அவர் உதடு., வாழைத்தண்டுல ரசகுல்லாவை வெச்ச மாதிரி அவர் பளிங்கு கன்னம் இந்த மாதிரி பிரமாதமான அழகி அமைஞ்ச பின் திரைக்கதையைப்பத்தி கவலை எதுக்கு ?


நாயகனா ஒரு அஸ்கர் அலி, நல்ல நடிப்பு , இவர் காதல் காட்சிகளில் நல்ல தேர்ச்சி
\
Image result for aparna balamurali photos

படத்தின் உண்மையான ஹீரோ திரைகதையும் வசனமும் தான். அங்கங்கே டபுள் மீனிங் , கில்மா வசனங்கள் எட்டிப்பார்த்தாலும் வல்காரிட்டி இல்லை


செயற்கையான திருப்பங்கள் பரபரப்பான காட்சிகள் என எதையும் வைக்காமல் மிக இயல்பான ஆற்றின் நீரோட்டம் போன்ற காட்சிகள் திரைக்கதை ரசிக்க வைக்குது


ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கு பிடிக்கும், தியேட்டரில் காலேஜ் கேர்ல்ஸ் கூட்டம் அதிகம், மிக ரசித்தார்கள்Image result for kamuki malayalam movie

நச் வசனங்கள்1 நீ ஜிம்முக்குப்போறியாடி?அடியே!அது PAD BRA (malaiyalam)

2 டாக்டர் ,எனக்கு 17 வயசு ஆகுது,வளர்ச்சியே இல்ல
என்னம்மா சொல்றே? 5 1/2 அடி உயரம் இருப்ப போல
சுத்தம்,நான் சொன்னது இந்த வளர்ச்சியை இல்ல (malaiyalam)3 உன்னோட ரோல் மாடல் யாரு?
தீபிகா படுகோன்
சுத்தம்,வாழ்க்கைல முன்னேறிடுவே (malaiyalam)
4 அந்தப்பொண்ணைப்பாத்தா என்ன தோணுது?
3,82,836 என்னடா உளர்றே?
சாரி,38,28,36 (malaiyalam)5 டேய்,இது ஒரு டைவர்ஸ் கேஸ் டா
டைவர்ஸ்னு சொல்லு,அதென்ன கேஸ்?உன் மேல கேஸ் போட்டுடப்போகுது (malaiyalam)

6 மிஸ்,உங்க கூட பிரண்ட்ஷிப் வெச்சுக்க ஆசப்படறன்
சாரி,எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்ல ஓ
ஆனா உன்னை இல்ல (malaiyalam)
டைரக்டா லவ் தான் ஐ ஜாலி7 ஒரு ஆபத்து வரும்போது தான் தப்பிச்சா போதும்னுதான் பொண்ணுங்க நினைப்பாங்க,தன்னை நம்புனவரை முதல்ல காப்பத்தனும்னு ஆம்பளை நினைப்பான்8 டியர்,எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கித்தர முடியுமா?
அதென்ன 1? ஒரு கிலோ வே வாங்கித்தர்றேன்
சுத்தம் ,ஆப்பிள் போன் கேட்டேன் (malaiyalam)9 மத்தவங்க சந்தோஷத்துக்கு எப்பவாவது நீங்க எதுனா செஞ்சிருக்கீங்களா?எல்லாரும் அவங்கவங்க மனசாட்சியை அடிக்கடி கேட்டுக்கனும் (malaiyalam)10 மகேசிண்ட பிரதிகாரம் நாயகி அபர்ணா பாலமுரளி நல்ல உதட்டழகிதான் ,அதுக்காக கேமராமேன் 12 ரீல்லயும் லிப்சுக்கு க்ளோசப் ஷாட் வெச்சுட்டே இருக்காரே? malaiyalam

Image result for aparna balamurali photos
இயக்குநரிடம் சில கேள்விகள்


1 லவ் மெரேஜையே ஒத்துக்காத நாயகியின் அப்பா க்ளைமேக்சில் ஒரு கண்டிஷனுடன் ஒத்துக்கொள்வது சினிமாத்தனம்2 விழி ஒளி இழந்த நாயகன் கூட்டத்தில் நாயகியை சரியாக அடையாளம் கண்டு அவர் கரம் பிடித்தால் மேரெஜுக்கு ஓக்கே என சொல்வது நகைக்க வைக்குது. பல நாட்கள் நாயகியுடம் பழகிய நாயகிக்கு அவர் உடல் வாசம் பழக்க மாகி இருக்குமே? அதை கண்டு பிடிப்பது பெரிய விஷயமா?


3 காலேஜ் படிக்கும் பெண்கள் யார் ஸ்பஞ்ச் ப்ரா எனும் பேடட் பிர போடறங்க? அது சினிமா நடிகைகள் , டி வி நடிகைகள் போடுவது . பிறகு கேன்சரால் ஒரு பக்க மார்பகம் ஆபரேசன் பண்ணி எடுக்கப்பட்டவர்கள் அதை மறைக்க போடுவது , அதை வெச்சு 2 கில்மா காமெடி டிராக் வேற4 படத்தின் முக்கியமான திருப்பம் ஆக நாயகியின் அக்கா மேரேஜ் , லவ் , லவ்வர் இதெல்லா ஏனோ தானோனு ஒரே ஒரு சீனில் முடிச்சடறாங்க்.


5 என்னதான் நாயகி அழகு ரதியாவே இருக்கட்டும் , கேமரா மென் எப்போ பாரு அவருக்கு க்ளோசப் ஷாட்டாவே வெச்சுட்டு இருக்கனுமா? நாயகியோட தோழியா வர்ற ஃபிகர் கூட வகை தொகையா தானே இருக்கு? அங்கே ஒரு 10 நிமிஷம் வெச்சிருக்கலாம்
காமுகி (மலையாளம்) @ செங்கணாச்சேரி அனு (இது ஒரு சாதா காதல் கதை,டைட்டிலைப்பாத்துட்டு கில்மாப்படம்னு யாராவது நினச்சா கம்பெனி பொறுப்பல்ல)
=================


Kamuki(malaiyalam) - விழி ஒளி இழந்தவரை நேசிக்கும் அழகு ரதியின் எளிமையான காதல் கதை.ஒளிப்பதிவு,நாயகி அபர்ணாவின் இதழ் அழகு +
செலவே இல்லாத லோ பட்ஜெட் பிலிம். ரேட்டிங் 2.5 / 5

0 comments: