Sunday, May 06, 2018

இருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம் 18+

முழு கில்மாக்காமெடி தமிழ் சினிமால பெரிய அளவில் இது வரை யாரும் எடுக்கலை, ஏன்னு தெரியல, ஆனா தெலுங்கில்,கன்னடத்தில்  ,மலையாளத்தில் பல படங்கள் வந்து ஹிட் அடிச்சிருக்கு, குறிப்பா முதல் இரவே வா வா எனும்  டப்பிங் படம் ஈரோடு பாரதியில் பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது, மலையாளத்தில் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட “வெடி விழா”  பக்கா டீசண்ட்டான கில்மா காமெடி. சூப்பர் ஹிட்.திருவனந்தபுரம் ல 40 நாள் ஓடுச்சு. ஆனா  தமிழ் சினிமா ல அப்டி எதும் டீசண்ட்டா வர்லை.


த்ரிஷா இல்லைன்னா நயன் தாரா ஓரளவு சி செண்ட்டர் ரசிகர்களை திருப்திப்படுத்துன ஏ வான மட்ட ரக  காமெடி படம்னு சொல்லலாம், அதுக்குப்பின் ஹர ஹர மகாதேவானு ஒரு  கேவலமான படம் வந்துச்சு.அந்த பட டைரக்டரோட 2 வது படம் தான் இது


ஹீரோ ஒரு ப்ளே பாய் , நம்ம ட்விட்டர் நண்பர்கள் ,பிரபலங்கள் மழைக்காதலன்,அருண் காந்த், ரிடில் ஃபிங்கர் மாதிரி  ஹீரோ கிடைச்ச ஃபிகரை மடக்கிப்போடறவர். இவருக்கு மேரேஜ்க்குப்பொண்ணு பார்க்கறாங்க, எதும் செட் ஆகலை.ஏன்னா எந்தப்பொண்ணைப்பார்த்தாலும் அந்தப்பொண்ணு கேட்கும் முத கேள்வி “ நீ என் தோழியோட லவ்வர் தானே?” 

கடைசியா ஹீரோயின் பொண்ணு பார்க்கறப்ப பொண்ணு போடும் கண்டிசனை சசிகலா புஷ்பா கேட்டாக்கூட ஜெர்க் ஆகிடும். அதாவது ஹீரோ கூட 10 நாட்கள் டேட்டிங் போய் அவர் கூட “வாழ்ந்து” பாக்கனும். பிரமாதமான குடும்பப்பொண்ணு போல. அதுவும் தனியா வர மாட்டேன், ஹீரோவோட நண்பர் யாராவது அவரோட ஆள் கூட வரனும். ஹீரோ, நண்பர் 2 பேரும் அவங்கவங்க ஜோடியோட  ஒரு பங்களாவுல தங்கறாங்க


 இந்த தான் டைரக்டர் தன்னோட திரைக்கதை அறிவைக்காட்றாரு ( ஹீரோயின்க 3 பேரு லோ கட் காட்றாங்க, அது தனி)அந்த பங்களால ஒரு பேய் வசிக்குது.அது ஒரு ஆக்சிடெண்ட்ல செத்த பொண்ணு. கில்மா நடக்காமயே இறந்த ஏக்கத்துல அந்தப்பேய் லட்சியம் என்னான்னா :பிரம்மச்சாரியான ஒரு ஆண் கூட கில்மா பண்ணனும். பாவம் 25 வருசமா எவனும் சிக்காம இருந்த அந்தப்பேய் கிட்டே இந்த 2 பேரும் மாட்டிக்கறாங்க, இந்தப்பேயை யார் திருப்திப்படுத்துனாங்க? என்பதே கதை


 ஹீரோ கவுதம் கார்த்திக். அப்பா பேரைக்கெடுக்கறதுக்குன்னே சில பசங்க இருப்பாங்க கலைஞருக்கு அழகிரி, கார்த்திக்கு இவரு. இதுவரை ஒரு உருப்படியான படம் கூட நடிச்சதில்ல என்ற பெருமை இவருக்கு உண்டு. இதிலும் பெருசா அவர் ஏதும் சாதிக்கல. டபுள் மீனிங் டயலாக் வேணா நல்லா பேசறாப்டி



ஹீரோயின்களா 3  உருப்படிங்க , இண்ட்டர்வ்யூ ல டேக் யுவர் சீட்னா எதிர்லயே பாய் போட்டு படுத்துடுங்க போல. தர லோக்கல் பார்ட்டிங்க.லோ கட் , லோ ஹிப் நு டைரக்டர் சொல்படி நவரச நடிப்பை வெளிப்படுத்தறாங்க


படம் முதல் பாதி  கில்மா காமெடியா ஓரளவு போகுது. பின் பாதி பேய்க்காமெடி வழக்கமா பல படங்கள்ல பார்த்ததுதான். இழு இழுனு இழுக்கறாங்க திரைக்கதையை


இயக்குநரிடம் சில கேள்விகள்


1   ஒரு பேய் கில்மா பண்ண நினைச்சா சத்தம் இல்லாம மேட்டரை முடிக்காம எந்த மட பேயாவது ? என் கூட யாராவது கில்மா பண்ணா அவங்க செத்துடுவாங்கனு உண்மையை சொல்லி லூஸ் மாதிரி சான்சை மிஸ் பண்ணூமா?


2  அவனவன் ஆளே சிக்காம காய்ஞ்சு போய்க்கிடக்கான். 25 வருசமா எபனும் சிக்கலை என்பது நம்ப முடியல. இதுல பேய்க்கு அழகான பெண் உருவம் எடுக்கும் சக்தி உண்டுனு பில்டப் வேற.


3  ஹீரோயின்கள் 2 பேரும் எதுக்கும் எல்லாத்துக்கும் துணீஞ்ச கட்டைங்கன்னு ஓப்பனிங்க்லயே சொல்லிடறாங்க, ஆனா அதுங்க 2ம் கிஸ் தரக்கூட  பிகு பண்றது நம்பற மாதிரி இல்ல 


4 பேயோட லட்சியம்   கில்மா தான் ஆனா எதுக்கு லூஸ் மாதிரி வெர்ஜின் பையன் தான் வேணும்னு தேடுது?


5  கடந்த 25 வருசமா ஒரு வெர்ஜின் பையனைக்கூட பாக்க முடியலனு பேய் புலம்பறது அபத்தம்., எத்தனையோ மொட்டைப்பசங்க 35+ ஆகியும் பொண்ணே சிக்காம லோ லோனு அலையறாங்க


6  பேய் மாறுவேஷத்துல அழகான பெண்ணா வருது. 2 பெரும் மயங்கி கில்மா பண்ண ரெடி ஆகும்போது அது லூஸ் மாதிரி நான் க்தான் அந்தப்பேய்னு அதுவா ஒத்துக்குது.  இது நம்பற மாதிரியா இருக்கு?> எந்தத்திருடனாவது சாட்சியோ , சட்டமோ நிரூபிக்கப்படாம தான் தான் குறவாளினு  ஒத்துக்குவானா? அவ்ளவ் ஏன்? நம்ம தானைத்தலைவர் தான் சம்பாதிச்ச கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் முறையற்ற சம்பாதிப்புன்னு ஒத்துக்குவாரா?


7  ஹோமோ மெட்டர் தமிழ்க்கலாச்சாரத்துக்கு இன்னும் ஜீரணிக்கப்படாத விஷயம், அதை வெச்சு அன் சகிக்கபிள் காமெடி எதுக்கு?


8 க்ளைமாக்ஸ் மகா சொதப்பல். படமே சொதப்பல்தான் என்பது வேற விஷயம்



நச் வசனங்கள்


என்ன சார் என்னை இப்டி பாக்கறீங்க?
இல்ல,மாப்ளைத்தம்பியே இவ்ளோ உயரம்தான்னா மாப்ளையோட தம்பி? 18+



2 ஜல்லிக்கட்டுல வர்ற மாடும் ,கட்டிக்கிட்ட சம்சாரமும் 1 எப்டி? வளர்த்தறவனுக்கு பிரச்சனை இல்லை,அடக்கறவனுக்குதான் பிரச்சன


3  எல்லாப்பொண்ணுங்களும் என் கிட்ட எதை மைனசாப்பாத்தாங்களோ அதை இவ பிளஸ்சாப்பாக்கறா



கூட்டிட்டு வந்தவன் பொண்டாட்டியை ஓட்டிட்டு போனவன் தள்ளிட்டுப்போன கதை ஆகிடுச்சு


பேய் எல்லாம் வாக்கிங் போகுமா?
என்னால நம்ப முடியல அட போம்மா,அங்கங்க பேய்ங்க கில்மா வேலையே பண்ணுது



பேய் = இப்ப என்ன செஞ்சே? மொட்டை ராஜேந்திரன் =காலிங்பெல் அமுத்துனேன் ,சவுண்டே வர்ல பேய் =இந்த வீட்ல எந்த "பெல்" தான் ஒழுங்கா வேலை செஞ்சுது? என்னம்மா?உள்குத்தாவே பேசற?




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்



பேய்ப்படம் னாலே வசூல் அள்ளிடும்,இது ஒரு கில்மா காமெடி பேய்ப்படம் போல.தர லோக்கலா இருந்தாலும் வசூலை வாரிக்குவிச்சிடும் போல

2  கண்ணியமான,பெண்களும் ரசிக்கும் இலை மறை காய் மறை கில்மா காமெடிக்கு கே பாக்யராஜ் பட்டவர்த்தனமான டபுள் மீனிங்க் காமெடி க்கு எஸ்ஜே சூர்யா தர லோக்கல் 18+ காமெடிக்கு எஸ்எஸ் சந்திரன் வெண்ணிற ஆடை மூர்த்தி ஜிவி பிரகாஷ் கவுதம் கார்த்திக்


பிக் பாஸ் லைவ் கமெண்ட்ரி ஐடியாவை சாமார்த்தியமாக "அட்லி"வேலை செய்து அட்டாச் பண்ணி இருக்காரு டைரக்டர்


பேய் =கில்மாவே நடக்காம ஒரு விபத்துல செத்துட்டேன்.உங்க 2 பேர்ல யாராவது ஒருத்தர் என்னை திருப்திப்படுத்தனும்.இதுல ட்விஸ்ட் என்னன்னா என்னை திருப்திப்படுத்தறவங்க செத்துடுவாங்க இடைவேளை பிளாக்



ஈரோடு ஆனூர் இ அ மு கு






========



சி.பி கமெண்ட் -  18+ = முதல் பாதி சி சென்ட்டர் தர லோக்கல் ஆடியன்சுக்கான அடல்ட் காமெடி ,பின் பாதி வழக்கமான பேய் காமெடி. விகடன் 39 ,ரேட்டிங் 2.25 / 5
குடும்பப்பெண்கள் தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்கவும் பி,சி சென்ட்டர்களில் வசூல் அள்ளிடும்

0 comments: