Tuesday, May 29, 2018

பெருமாள் பக்தர்களை நிபா வைரஸ் தாக்காதா?இது என்ன புது உருட்டா இருக்கு?

இதுவரைக்கும் எந்த தோழியிடமும் நானே போய் பேசுனது இல்லை என்ற ஆணவம் உண்டு

ஓஹோ,ஆனா டி எம் ல டெய்லி குட்மார்னிங்க் sms பண்றீங்களாமே?
அப்பக்கூட பேசலையே.டெக்ஸ்ட் மெசேஜ் தானே?அது கணக்கில்ல===========


2 குருவே!யோகா கத்துக்கிட்டா ஐம்புலன்களையும் அடக்கலாம்னீங்க?

ஆமா
ஆனா யோகா கிளாஸ் முடிஞ்சதும் ரஞ்சிதா ரூமுக்கு போய்டறீங்களே அது ஏன்?


============


3 குருவே!பொண்ணுங்களோட சேட்டிங்க் பண்றப்ப பசங்க மாங்கு மாங்குனு பக்கம் பக்கமா டைப்பறாங்க,ஆனா பொண்ணுங்க ம் ,ம்ஹூம்,k , s,no இப்டி மணிரத்ன சுருக்் ல ரிப்ளை பண்றாங்களே அது ஏன்?

சிஷ்யா,பசங்க நேர்மையா,சின்சியரா யாரோ ஒரு பொண்ணு கூட மட்டும் தான் சேட்டிங்.ஆனா பொண்ணுங்க மல்டிசேட்==============4 குருவே!2nd hand வண்டிய வாங்கலாமா?

சிஷ்யா! வண்டியா இருந்தாலும்",வாழ்க்கைக்குத்தேவையான எதா இருந்தாலும் செகண்ட்ஸ் வேணாம்.செலவு அதிகமானாலும் பரவால்ல,fresh தான் பெட்டர்===========


5 டாக்டர்.சாப்பிட்டுட்டு தூங்கலாமா???
தூங்கிட்டு சாப்பிடலாமா????
வாழ்வின் பெருங்குழப்பம்.
என்னம்மா எப்பப்பாரு"விதண்டாவாதமாவே கேள்வி கேட்டுட்டு.நைட்னா சாப்ட்டுட்டு 2 மணி நேரம் கழிச்சுதான் தூங்கனும்,காலைலன்னா எழுந்து 2 மணி நேரம் கழிச்சு சாப்டனும்===========6 சார்,திருப்பதி கோயில் வசூல்ல கை வெச்சீங்களாமே?இது தெய்வக்குத்தம் ஆகாதா?

ஆகாது,நான்தான் அமுக்குனதுல 10% உண்டியல்ல போட்டுடுவனே?
============


7 ஜெமினிகணேசன் க்கு ஏன் சாம்பார் ன்னு பெயர் வந்தது?

இட்லி,தோசை,பணியாரம்,சாதம்னு எல்லாவிதமான பதார்த்தத்துக்கும் சாம்பார் மேட்ச் ஆகும்.எந்த விதமான கேரக்டரா பொண்ணுங்க இருந்தாலும் அவங்களை சாமார்த்தியமா பேசி கரெக்ட் பண்ணிடுவார்.அதனால அந்த பட்டப்பேரு===========8 குருவே!பொண்ணுங்ங டபுள் மீனிங் ல பேச கூடாது னு சொல்றது சரியா?

சிங்கிள் மீனிங்க்ல பொண்ணு பேசுனாலே நம்மாளு டபுள்காட் ரூம் புக் பண்ணலாமா?னு பிட் போடறான்,இதுல டபுள் மீனிங்க்ல பேசுனா வேற வினையே வேணாம்
=================9 குருவே!10 வயது வரை குழந்தைகள் இரவில் கட்டிலில் இருந்து கீழே விழுவார்களாமே உண்மையா?

அவங்களா விழமாட்டாங்க.தம்பதிங்க தான் இடைஞ்சலா இருக்குனு இடமாற்றம் பண்ணி இருப்பாங்க===============10 600 ரூ கொடுத்து செம்பு வாட்டர் கேன் வாங்குனேன்.கெடுதல்னு சிலர் சொன்னதால தூக்கி போட்டுட்டேன்

20 ரூ குடுத்து வாங்குன மினரல் வாட்டர் கேனையே நம்மாளுங்க தண்ணி தீர்ந்தாலும் 25 வருசம் வெச்சு யூஸ் பண்றாங்க,நீங்க என்னடான்னா..============11 பெருமாள் பக்தர்களை நிபா வைரஸ் தாக்காதா?இது என்ன புது உருட்டா இருக்கு?

வவ்வால்கள் ,பன்றிகள் மூலமாதான் நிபா வைரஸ் பரவுது.பெருமாள் தான் பன்றி அவதாரம் எடுத்தவர் ஆச்சே?பக்தர்களை காப்பாத்த மாட்டாரா?===========12 டாக்டர் ,தம் டீ உடம்புக்கு நல்லதா?

தம் , டீ ரெண்டுமே உடல்நலனுக்கு கெடுதல் தான் .முன்னது கேன்சர் அபாயம் ,பின்னது பித்தம்=============13 தலைவரே!டாஸ்மாக் ல சேல்ஸ் குறைஞ்சா உடனே அதை மூடிடுவீங்களா?

நோ நோ டார்கெட் குடுத்து டார்ச்சர் பண்ணிடுவமில்ல?
ஆனா அரசுப்பள்ளிகள்ல மாணவர் சேர்க்கை குறைஞ்சா மட்டும் ஏன் ஸ்கூலை மூடறீங்க?ஒரு ஸ்கூல் திறக்க காமராஜர் எவ்ளோ கஷ்டப்பட்டாரு?==============14 டாக்டர், காலையில சாப்டதுமே தூக்கம் வருது😐😐

அப்டியா?என்ன மேடம் சாப்ட்டீங்க?வெண் பொங்கலா?
இல்ல,தூக்க மாத்திரை===========15 குருவே!கொசு கூட முதுகில் கடிப்பதில்லை..
மனிதன்தான் முதுகில் குத்தி விடுகிறான் !னு ஒரு தத்துவம் படிச்சேன்.அது உண்மையா?
தத்துவம் சொன்னவரை ஒரு நைட் பூரா குப்புறப்படுத்து தூங்கச்சொல்லு.மல்லாக்க படுத்தா எப்டிய்யா கொசு முதுகுல கடிக்கும்?


===========


16 மாமா,உங்க பொண்ணு வயசுக்கு வந்ததுக்கு குடிசை கட்ற விழா ஏன் நடத்தலை?

நான் பயங்கர"பணக்காரன்.பங்களாவா கட்டி விட்ரலாமா?னு"பாக்கேன்


=============


17 டாக்டர் ,நிபா வைரஸ் தமிழகம் ,கேரளா னு பரவிட்டே இருக்கே"?எதிர்காலத்துல இது ஒரு BIG problem ஆகிடுமோ?

அது மட்டுமில்ல,இது ஒரு"PIG problemம்"கூட============
18 நீங்க பாஜக வா?

இல்ல
அப்பறம் ஏன்"உங்க பொண்ணுக்கு""இந்து"மதி னு பேர்"வெச்சிரூக்கீங்க? முஸ்லீம்"மதி கிறிஸ்டியனைமதி"னு"வெச்சிருக்கலாமில்ல.மதநல்லிணக்கக்குடும்பமா ஆகி இருக்கும்


=============


19 தலைவரே! தூத்துக்குடி ஆலை ல உங்க கட்சி ஆளுக்கு 70% பங்கு இருக்குனு சொன்னதும் ஆளாளுக்கு அவ்ளோ பங்கு இருக்காதேனு தான் சொல்றாங்களே தவிர 1% கூட இருக்க வாய்ப்பில்லை ,நாங்க யோக்யம்னு ஒரு பயலும் சொல்லலையே?

ஆஹாங்க்,இப்டி மாட்டி விட்டுட்டாங்களா?


==========20 தலைவரே!தூத்துக்குடி கலெக்டர,எஸ் பி யை புத்திசாலித்தனமா ட்ரான்ஸ்பர் பண்ணீட்டிங்க போல?

ஆமா,நடவடிக்கை எடுத்த மாதிரி கணக்கு காட்டலாமே?
சரி,போலீஸ் இலாகா யாரோட கண்ட்ரோல் ல வருது?
அப்ப அவரை ட்ரான்ஸ்பர் பண்ணுங்க முதல்ல
முதல்வர் தான்


================

0 comments: