Thursday, May 17, 2018

ராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்கு.....

பாஜக காரர்கள் தமிழர்கள் இல்லை,கழிச்சு விட்ரலாம்,ஆனால் கூழைக்கும்பிடு குருசாமிகள் EPS&OPS இருவரும் தமிழர்கள் எனும் பதத்துக்கே அவமானம் தேடித்தந்த அடிமைகள்.கேவலம் பதவிக்காக ,பணத்துக்காக ஈனப்பிழைப்புடா சாமி


============


2 உங்கள் சேமிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க,அதிகப்படுத்த எளிய வழி,உங்கள் வீட்டின் அருகே,பணி புரியும் இடம் அருகே இப்படி 4,5 வங்கிகளில் சேமிப்புக்கணக்கு துவங்குவதே
(எச்சரிக்கை −SBI வங்கி அருகே"சென்று விடாதீர்.வங்கிக்குள் இருக்கும் தண்ணீர் கேனில் ஒரு டம்ளர் தண்ணீர்"குடித்தாலும் அபராதம்)


============


3 கேவலமான கட்சிகள் தர(ங்கெட்ட)வரிசைப்படி
1 திமுக (செமயா சம்பாதிச்சு ஈழத்தமிழருக்கு துரோகம்) 2 அதிமுக ( மன்னார்குடி மாபியா ஆதிக்கம்) 3 காங் (ஈழத்தமிழரை பழி வாங்கியது) 4 பாஜக ( தமிழர்களை வஞ்சிக்கிறது)=============

4 21 வயசு நெட் தமிழன் நேத்து நைட் 19 வயசுப்பொண்ணுகிட்ட உருகி உருகி 2 மணிநேரம் கடலை போட்டாப்டி.இன்னைக்கு 36 வயசு ஆண்ட்டி கிட்ட கடலை.நாளை கணக்குப்படி 53?


============5 மெயின் கட்சிகளை மடார்னு தலைல கொட்ட ஒரே வழி 234 தொகுதிகளிலும் நல்ல சுயேட்சைகளை ஜெயிக்க வைப்பதே!சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் 1 MLA முதல்வர்


============6 நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு வெளி மாநிலம் செல்ல பல தனியார் நிறுவனங்கள் தனி நபர்கள் உதவ முன் வருவது நல்ல விஷயம்.இது மத்திய,மாநில அரசுக்கு செம செருப்படி=================7 அரசியல்வாதிகள்தான் உழைத்து சாப்பிட வக்கில்லாம மக்கள்ட்ட ஓட்டு பிச்சை எடுத்து பொழப்பை ஓட்டறாங்க.பதவிக்கு வந்தா மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கறாங்க.அவங்களுக்கு சொம்பு தூக்கவும் ஒரு கூட்டம்.மானம் கெட்ட பொழப்பு


=============

8 உங்கள் கைவசம் வாட்டர்கேன் இருக்கும்"வரை உங்களுக்கு தாகம் எடுக்காது,இது இயற்கையின் நியதி===========9 விஷாலுக்கு ஒரு ஐடியா.அவர் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுது.
வெள்ளித்திரையில் காண வேண்டிய "இரும்புத்திரை"யை உங்கள் அலை பேசி தொடுதிரையில் பார்த்து வசூலுக்கு திரை இட்டு விடாதீர்!============


10 மெடிக்கல்ஷாப்ல"நேரடியா மருந்து மாத்திரை வாங்கிட்டா டாக்டர்"கன்சல்டேஷன்"fees மிச்சம்னு நினைக்கறவங்க நம்ம ஊருலதான் அதிகம். கை வைத்யமே"போதும்னு பாட்டி வைத்தியம் பாத்துக்கறது கிராமங்கள்ல அதிகம்============11 தேர்வு அறையில் சிசிடிவி கேமரா வைத்து விட்டால் நீட் தேர்வு விதிமுறைகளான டிரஸ்"கோடு,கம்மலைக்கழட்டு,கொலுசை கழட்டு,துப்பட்டா /ஷால்"அணியக்கூடாது போன்ற மடத்தனங்கள் தேவை இல்லை


============

12 மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியதற்கான பழிவாங்கல் தான் இந்த நீட் தேர்வு மைய குழப்படிகள் எனில் தாமரைக்கு தமிழ்நாட்டில் மிச்சம் மீதி இருக்கும் வாக்கு வங்கியும் சின்னாபின்னம் ஆகும்=============


13 நயன்தாரா வின் முன்னாள் 3 வது காதலரான பிரபு தேவாவின் இந்நாள் நான்காவது காதலி நடிகை இந்துஜா னு ஒரு நியூஸ் வருதே!அது உண்மைதானா?


===========


14 நீங்க ஆரம்பித்து பாடுபட்டு வளர்த்த ஒரு அமைப்பு இப்ப தலைமை வேறொருவரிடம், தலைமை உங்களை மதிப்பதில்லை. அந்நிலைமையில் என்ன செய்வீர்கள்? அமைப்பு நல்லாருக்கனும்னு நினைக்கறவன் அமைதியா இருப்பான்.சுயநலவாதி ரிசைன் பண்ணுவான்

=============15 பூப்பு நன்னீராட்டு விழா /திரட்டி களுக்கு செல்லும்போது பலரும் அஸ்கா சர்க்கரை,பலகாரங்கள்,பழ வகைகள் பரிசாக கொண்டுபோகிறார்கள்.மருதாணி இலைகள் கூட நல்ல பரிசுதான்.நகரப்பெண் எனில் கிராம உறவினர் அளிக்க எளிய பரிசு


===========


16 கலைஞர்,எம்ஜிஆர்,ஜெ ,சசிகலா நால்வரின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கி மக்கள் நலனுக்கு செலவழித்தால் தமிழகத்தில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.


==============


17 பெண்களை ஆண்கள் போகப்பொருளாதான் பாக்கறாங்கனு கோபமா FB ல ஒரு பொண்ணு பதிவு போட்டிருக்கு.சாட்டையடிப்பதிவு தோழி னு 52 பேரும் ,உங்க போன் நெம்பர் சொல்லுங்க தோழினு 693 பேரும் கமெண்ட் போட்டிருக்கானுங்க.திருந்தவே மாட்டீங்களாடா?


===============


18 EPS ம் OPS ம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?மாலை போட்டு ஜோடியா உக்காந்திருக்காங்க


================19 மீன ராசி அன்பர்களே! தங்கம் வாங்க உகந்த நாள் இன்று.யாராவது கைமாத்தா பணம் கேட்டா அடமானமா தங்க நகை வாங்கிட்டு அதுக்கு ஈடான 75% மதிப்பு பணம் தந்திடுங்க.அவங்க திருப்ப மாட்டாங்க,25% லாபம்


==============


20 ராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் தாம் படித்ததில்"பிடித்தது என படைப்பை மட்டும் பகிராமல் படைப்பாளியையும் அறிமுகப்படுத்தினால் படைப்பாளி மகிழ்வான்.இலக்கிய ரசிகர்களும் அதை விரும்புவர்


=================


0 comments: