Saturday, May 12, 2018

ஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்

பா.ஜ.க-வை ஹெச்.ராஜாவே அழித்துவிடுவார்' - திருநாவுக்கரசர்
# தனி ஒருவரா அவரு கஷ்டப்படக்கூடாதுனு SV சேகரும் உதவிக்கு களத்துல இறங்கிட்டாரு போல


=============


2 பிரதமரைப் பாராட்ட
தமிழகத்தில் ஆளே இல்லை//
பொன். ராதா # இல்லியே?டெய்லி ஒரு வாட்டி தமிழிசை பாராட்றாங்களே?அவங்க தமிழ்நாடு தானே?


==============3 ஊழலில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறையில் இருப்பார்கள் - மு.க.ஸ்டாலின்
# அப்போ அதுக்குள்ள அவங்களுக்கு வயசாகிடுமே?வேற ஏதாவது உடனடி ஆக்சனுக்கு வழி உண்டா?


============4 அடுத்த 50 ஆண்டுகள்
நாட்டை ஆள்வதே பாஜகவின்
இலக்கு-அமித்ஷா
# சுத்தம் ,அப்போ 50 தடவை புதிய இந்தியா பொறக்குதுனு ஏடிஎம் வாசல்ல நிக்க வெச்சுடுவாங்களோ?


============5 குற்றம் நிரூபணமானால், பேராசிரியை நிர்மலா தேவிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - ரஜினி.
# சட்டப்படி வழங்கனும்.ராம்குமாருக்கு தந்தது மாதிரி கரண்ட் ஷாக் குடுக்காம இருந்தா சரி
நிரூபணம் ஆனா பல பெரிய தலைங்க மாட்டும்,இதெல்லாம்"நடக்கற காரியமா?


==============6 டெல்லியில் கொடூரம் - தலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்
# டாக்டர் ஆனதும் தலை கால்"புரியல போல


=============7 ஜோத்பூர் சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
தீர்ப்பை முன்னிட்டு குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு # இப்ப தெரிஞ்சிடும் பாஜக தலையீடு தீர்ப்புல இருக்கா?இல்லையா?ன்னு


===========8 பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால்
உதகை இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு
இன்று முதல் பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவுறுத்தல் # ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கன்னா இதை மூடிட்டாங்களே?=============

9 : பல்லாவரம்: நள்ளிரவில் டாஸ்மாக் அடித்து நொறுக்கிய பெண்கள்
# சபாஷ்,இதே போல் எல்லா ஏரியாவிலும் புரட்சி வெடிக்கட்டும்.முடிஞ்சா குடிகார புருசன் மப்புல தூங்கறப்ப எதுனா"செஞ்சு விடவும்=============10 எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு # குற்றவாளி என நிரூபணம் ஆகும்"முன் அடைக்கலம்"தந்ததால் இந்த கேஸ் நிற்காது.===========11 சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம்பாபு குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு # 5 வருசம் கழிச்சு தீர்ப்பு வந்தாலும்"சரியான தீர்ப்பு============

12 சென்னையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று கணவன் கைது @சென்னை # தெளிவா இருக்கும்போதே பிளான் பண்ணி மப்பு ஏத்திட்டு வந்து போட்டுத்தள்ளி இருப்பான்===========13 பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - # ரேப் பண்ணாலே மரணதண்டனை தரனும்,இதுல கொலை வேற ,தண்டனை இன்னும் கடுமையா இருந்திருக்க வேணாமா?


==============14 ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது-பிரதமர் அலுவலகம் # அட்லீஸ்ட் வருசத்தையாவது சொல்லுங்க

தேர்தல் கிட்டே வந்துடுச்சு பராக் பராக்
"கர்நாடகத்தனமான" அறிக்கை ,ஒரு வேளை கர்நாடகா தேர்தலுக்காக வா?


=============15
15 அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாது: ரஜினிகாந்த் # வருவேன் ,ஆனா எப்போ வருவேன்னு தெரியாதுனு நழுவறதையும் தவிர்க்க முடியாதா தலைவா?===========


16 பெற்றோர்கள், ஆண் பிள்ளைகளை மிகவும் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.- மோடி.
# ஆமா ,தாலி கட்டிய மனைவியை கடைசி வரை கூடவே வெச்சிருக்கற"நற்குணத்தையும் கத்துத்தரனும்=========


17 ஆக்செல் சன்ஷைன் நிறுவனம் சிவசங்கரன் மீது ரூ600 கோடி வங்கி மோசடி
ஐடிபிஐ வங்கியில் ரூ600 கோடி கடன் மோசடி
# SUN என்றாலே SIN தானே
நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு


========


18 கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் -மு.க. அழகிரி # எதுக்கு?கட்சி ல மறுபடி குழப்பம் பண்ணறதுக்கா?ஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்


===========


19 ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு # CCT கேமரா இருக்கா?

இல்லைங்க
பேஷண்ட்டோட ரத்த மாதிரி இருக்கா?
அதுவும் இல்லீங்க
ஹாஸ்பிடலை பூட்டீடுங்க
திண்டுக்கல் பூட்டு இருக்கா?


=============


20
"சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்" - அமைச்சர் ஜெயக்குமார்
# சசிகலா கால்ல தொப் தொப் னு எல்லாரும் விழுந்தீங்களே ,அந்த வீடியோ க்ளிப்"பையாவது தடை பண்ணுங்க.மிச்சமீதி 1% மானம் மரியாதையாவது கப்பல் ஏறாம இருக்கும்


==========

0 comments: