Monday, May 28, 2018

ஏன் சேவை மட்டும்?இட்லி ,உப்புமா,இடியாப்பம் செய்யலாமே?

எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராக பதவி ஏற்பதாக வரும் செய்தி வதந்தியே!மே 27 தான் முடிவு தெரியும்=========

2 நான் தினகரனை🦁 பார்த்ததே இல்லை - ஓபிஸ்🐕# கால்லயே விழுந்து கிடந்தா முகம்"எப்டி தெரியும்?பாதம் தான் தெரியும்============
3 தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி ரஜினி, கமலால் அரசியல் செய்ய முடியாது

- சத்ருகன் சின்ஹா எம்.பி. # அப்டியா?மக்கள் செல்வாக்கே மகேசன் செல்வாக்கு −இந்த பழமொழியை கரெக்டா மேடை ல பேசச்சொல்லிடுங்க பாப்போம்==========4 உடல் எடையை குறைக்க முடியாததால் மனமுடைந்து, கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி!

ஆழமில்லாத பகுதியில் குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்!
கத்துக்கிட்டு அதே ஆத்துல டெய்லி 30 நிமிஷம் நீந்துனாலே போதும்.எடை குறையும்.ஸ்விம் ப்ண்ணினா ஸ்லிம் ஆகலாம்===========


5 உதகையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட பல் மருத்துவர் சரவணன் கைது # கோர்ட்ல "அந்தப்பொண்ணு தாங்க முதல்ல என்கிட்ட பல்லைக்காட்டீட்டு வந்தது"னு வாதாடுவாரோ?


=======


6 அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு லஞ்சம்; ஊழலில் தமிழ்நாடு முதலிடம், 2-வது தெலங்கானா- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் # இதுக்கு "உடன்பிறப்பு"களும் "ரத்தத்தின் ரத்தங்களும்" பெருமைப்பட்டுக்கலாம்.மாத்தி மாத்தி கொள்ளை அடிச்சது,லஞ்சம்,ஊழலை வளர்த்து விட்டதுல பங்கு இருக்குல்ல============7 நான் தொடங்கவிருக்கும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - ரஜினி −தனுஷ்


==========


8 ரமலான் நோன்பிற்காக அரேபிய நாடுகளில் கூட இலவச அரிசி வழங்குவது கிடையாது, தமிழகத்தில் மட்டும்தான் அரசு சார்பில் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ
# இப்டி எல்லாம் சொல்லிக்காட்டுவது கேவலம்னு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா


==========9 காங்கிரஸ் ஜெயித்தால் நானே பிரதமர் என்று ராகுல் சொல்வது..திமிர்த்தணம். காங்கிரஸ் கட்சியில் மூத்தவர்களே இல்லையா?- மோடி கட்சில கூடத்தான் அத்வானி இருக்காரு


==============10 காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் "−அமைச்சர் ஜெயக்குமார் # அத சொல்றது நேத்து பெய்த மழைல இன்று முளைத்த காளான்கள்=============


11 ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிதான்'' - ஆடிட்டர் குருமூர்த்தி ஆருடம் # வெட்டி தான் னு படிச்ட்டேன்===============


12 திவாகரன் எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது: சசிகலா
# முதல்ல உங்க ஆளுங்க ,நீங்க எல்லாம் MGR ,இரட்டை இலை பயன்படுத்த தடை விதிக்கனும்
===============


13 பா.ஜ.கவில் சேர்ந்து சேவை செய்யப் போகிறேன் - ஜூலி// # கிச்சன் கேபினெட்"மினிஸ்டர் ஆகிடுவாரோ?

ஏன் சேவை மட்டும்?இட்லி ,உப்புமா,இடியாப்பம் செய்யலாமே?


=============14 ஜெயலலிதாவை விட எடப்பாடி ஆட்சியே சூப்பர்- திண்டுக்கல் சீனிவாசன் சர்டிபிகேட் # நல்ல வேளை,காமராஜர்,எம்ஜி ஆர் ஆட்சியை விட சிறந்ததுனு ஒரேயடியா"அடிச்சு விடல


===============15 தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதே என் நோக்கம்-திருநாவுக்கரசர்
# முதல்ல கோஷ்டிகள் இல்லா காங் கட்சியை உருவாக்குங்க================16 கட்சி தொடங்குவதற்கு முன்பே 20% வாக்குகளை வைத்திருப்பவர் ரஜினி - தமிழருவி மணியன்
# 100% பொய்.7 கோடி மக்கள் தொகைல 20% = 1.4 கோடி ரசிகர்கள் இருக்காங்கன்னா இதுவரை ரஜினி மன்ற உறுப்பினர் சேர்க்கைல 70 லட்சம் கூட வர்லையே?


=============


17 மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது ஆதாய திருமணம் போன்றது : பிரகாஷ் ஜவடேகர் # நாம பண்றது மட்டும் ஆதாய டைவர்ஸ்"போன்றதா?=============


18 பாஜக என்னை விலைக்கு வாங்க பார்த்தது; பணம், பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியது - காங்கிரஸ் எம்.எல்.ஏ லிங்கன கவுடா # பத்தாதுனு பேரம் பேசிட்டு இருக்கார் போல

தாமரை கிட்ட கேட்க வேண்டீய கேள்வி =என்ன?"கை"யைப்பிடிச்சு இழுத்தியா?===============
19 கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்?
-ப.சிதம்பரம் # வரவேற்றாத்தான் ரெய்டு பயம் இல்ல ,பதவி நீடிக்கும்னு சொன்னாங்களாம்===============


20 தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை: செய்தி - தமிழக அரசுக்கு "சுத்தமா"துடைச்சு எடுக்கவே நேரம் சரியா இருக்கு


===========

0 comments: