Wednesday, May 23, 2018

கோலமாவு கோகிலா 38+

சார்,கைபேசி மின்கலம் 1 வேணும்

அதெல்லாம் இங்க கிடையாதுபா
அட.செல்போன் பேட்டரிங்க
அப்டி தமிழ்ல கேளு=========


2 நான் 12 வது படிக்கும்போது எங்க தெருவுலயே நான் தான் நெ1

ஓஹோ,உங்க தெருவுல மொத்தமா எத்தனை வீடுங்க?
எங்க வீடு 1 தான்.மத்ததெல்லாம் கட்டிட வேலை ஆகிட்டு இருக்கு


=============3 மாமா,உங்க பையன் பலருக்கும் வழிகாட்டியா இருக்கார்னீங்க,?ஆனா அவர் ஆபீசுக்கே போகாம எப்போ பாரு டீக்கடைலயே உக்காந்திருக்காரு?

அதாம்மா,வெளியூர் ,உள்ளூர் ஆளுங்க எதுனா அட்ரஸ் கேட்டா வழி காட்டுவாரு,டீ யோ பன்னோ குடுக்கறதை வாங்கிக்குவாரு


===========4 "உன்ன விட அழகா
எத்தனையோ பொண்ணுங்க
இருக்கலாம்.. ஆனா..
அது எல்லாத்தையும் தாண்டுன
ஏதோ ஒரு அழகு.. அது என்னனு சொல்லத் தெரில..
இப்படிலாம் பேச அவன் எங்க தான் படிச்சானோ..
ஏதோ ஒரு ஈர்ப்பு உன்ட்ட இருக்கு
உங்க ஆளு வைரமுத்து பாட்டுல இருந்து அட்லி வேலை பாத்திருக்காரு
எந்தப்பெண்ணிடமும் இல்லாத


============5 ஜூவாலஜி மிஸ் ஜூலி =
ஆண் கொசுதான் கடிக்காது நோய் பரப்பாது,பெண் கொசு தான் கடிக்கும் ,நோய் பரப்பும்.இதுல இருந்து என்ன தெரியுது?
டீச்சர்,பெண் இனம் எந்த ரூபத்துல இருந்தாலும் ஆண்களுக்கு நட்டம்தான்னு தெரியுது==============6 தலைவரே!சாணக்கியத்தனம் ,அயோக்கியத்தனம் இரண்டுக்கும் என்ன வித்யாசம்?குழப்பமா இருக்கு

உடன்பிறப்பே!பதவிக்காக,பணத்துக்காக நாம குறுக்குவழி ல போய் ஜெயிச்சா அது சாணக்கியத்தனம்,நம்ம எதிரி அதை செஞ்சா அது அயோக்கியத்தனம்,இப்டி சொல்லிதான் ஊரை ஏமாத்தனும்
==============7 எடியூரப்பா சார்,நீங்க ஆட்சி அமைச்சுக்கலாம்,கவர்னர் ஆர்டர் போட்டுட்டாரு.10 நாள் டைம் ,அதுக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்கனும்

ஓஹோ,நிரூபிக்க முடியலைன்னா?
மறுபடி ஒரு 20 நாள் தருவோம்.யாராவது கேள்வி கேட்டா தேசதுரோகினு சொல்லிடலாம்===========


8 கவர்னரை"நம்பக்கூடாது,நாம கோர்ட்"போயிடலாமா தலைவரே?

அதும் போய் பாத்தாச்சு,ஜட்ஜ் ஐயா வைப்பாக்க வீட்டுக்குப்போனோம்",அவரு -
`தாமரை`க்கன்னங்கள்",தேன்மலர்க்கிண்ணங்கள் பாட்டு கேட்டுட்டு இருந்தாரு,சத்தமில்லாம"திரும்பட்டோம்


=============9 மாப்ளை,சொந்தமா ஒரு வீடு உங்க"பேர்ல இருந்தா"பொண்ணு தர்றோம்

அப்டியா,முதல்ல பொண்ணு குடுங்க.15 நாள் டைம் குடுங்க,வீடு ரெடி பண்ணிடறேன்,இப்ப அதான் ட்ரெண்ட்=================10 விஷால் படம் பாரீன்லயும் ஹிட்"ஆகி வசூல் அள்ளுதாம்;

;ஓஹோ, இரும்புத்"திரை கடல் ஓடியும் திரவியம் தேடுது"னு சொல்லுங்க
=============
11 ஹலோ கவர்னரா?

ஆமா
நம்ம கைவசம்,113 MLA இருக்காக.நான் சிஎம் ஆக வாய்ப்பு இருக்கா?
நீங்க யாரு பேசறீங்க?
கர்நாடகா"ரிசார்ட் ஓனர்.இங்கே கர்நாடகா MLA பூரா பயலுகளும் நம்ம இடத்துலதான் தங்கி இருக்காங்க.ஒரு சான்ஸ் குடுத்தீங்கன்னா...
===========12 100 கோடி 150 கோடினு MLA க்கள் பேரம் பேசடறதப்பாத்துட்டு பொண்ணு"வீட்டுக்காரங்க மாப்ளை MLA வா இருந்தாதான்"பொண்ணு தருவோம்னு"சொல்லிடுவாங்களோ?
==============
13 சார்,உங்க"நகைக்கடைல ஒவ்வொரு ஹால்லயும் 80 மார்க்"ஹால் ,90 மார்க் ஹால்னு"மார்க் போட்டு வெச்சிருக்கீங்க?

ஹால் மார்க் நகை னு சொல்றமே,அது இது தான்
============
14 மேடம் ,கோலமாவு கோகிலா படத்துக்கு அவார்டு நிச்சயம்னு எப்டி சொல்றீங்க?ய

முதல் 5 ரீல்ல 5 கோலம் வெவ்வேற பேட்டர்ன்ல போட்டிருக்கேன்.ராதிகா,குஷ்பூ வை விட வயசுல ஜூனியரா இருந்தாலும் சாதனைல சீனியர்===========15 ரைட்டர் சார்,10 செகண்ட் கதைப்போட்டிக்கு நீங்க அனுப்பின கதை 1 கூட புரியல.எழுத்து கண்றாவியா இருக்கு

10 விநாடில எழுதும்போது அழகு பாத்து எழுத முடியுமா?எடிட்டர் சார்?
விளங்கிடும்.கதையைப்படிக்கறவங்க 10 நொடி ல படிக்கற மாதிரி கட்டமைப்பில் கதை இருக்கனும்.
===========16 என்னய்யா போண்டா இது?சுத்த கர்நாடகத்தனமா இருக்கு?

சார்,நீங்கதானே மைசூர் போண்டா கேட்டீங்க?============
17 டைரக்டர் சார்,நான் கதை எப்படி எழுதுவேன்னா அது அதுவா உருவாகினா் மட்டுமே. நானா எதையும் பெருசா யோசிக்க மாட்டேன்

ஓஹோ,நமீதா தான் ஹீரோயின்,இப்போ என்ன பண்ணப்போறீங்க?


===========
18 மேடம்,நீங்க ஒவ்வொரு கவிதை எழுதி முடிச்சதும் னு ஒரு டேக் போடறீங்களே!அதுக்கு என்ன அர்த்தம்?

என்னை என்ன சுகர் பேஷண்ட்னு நினைச்சீங்களா? அது என் ரைட்டிங் ஸ்டைலு==========19 சார்,ஒரு MLA க்கு 100 கோடி னு பேரம் பேசி இருக்கீங்களே?அவ்ளோ பணம் ஏது?

யோவ்!யார் எது சொன்னாலும் நம்பிடுவியா?இந்தியர்கள் ஒவ்வொருவர் அக்கவுண்ட்லயும் 15 லட்சம் போடறோம்னு கூடத்தான் சொன்னோம்,போட்டோமா?=============20 டியர்,இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து ரிட்டர்ன் வர்றப்ப ஒரு பொண்ணுக்கு பைக்ல லிப்ட் குடுத்தேன்

இது தப்பில்லையா?
இதுல என்ன"இருக்கு ?லிப்ட் கொடுக்குறது தப்பில்ல... லிப்டூ லிப் கொடுக்குறது தான் தப்பு.============

0 comments: