Tuesday, May 08, 2018

பெருமாள்"கோவில்ல சேர்த்தாலாவது"புண்ணியம் உண்டு

இந்தியா ராக்கெட் விடுகிறது
தமிழகம் பலூன் விடுகிறது
-தமிழிசை
# கோட்டை விடுவது யார்?னு பார்ப்போம்

===========


2 யூகோ வங்கி முன்னாள் தலைவர் அருண் கவுல் மீது சிபிஐ வழக்குப் பதிவு 670 கோடி மோசடி # ஒவ்வொரு பேங்க்கா முறை வாசல் வெச்சு கொள்ளை அடிப்பானுக போல


===========


3 பெண் குழந்தைகளை எப்போதும் அம்மா/அப்பா/தாத்தா/பாட்டி யாரோ ஒருவர் கண்காணிப்பில் ,பாதுகாப்பில் வைத்திருப்பதே நல்லது,வேறு யாரையும் நம்பாதீர்கள்


==============


4 சப்பாத்தியை கூட அளந்து பார்த்து கணவன் துன்புறுத்துவதாக விவாகரத்து கோரும் மனைவி# சப்பாத்தி சாப்பிட"வாட்டமா இருந்தா போதாதா?வட்டமா இருக்கனுமா?பாகைமானி வெச்சு அளந்து பார்ப்பான்"போல


============


5 சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை -@ திருநெல்வேலி # ஜெயிலர் ஜாக்கிரதை.அவரையும் ரேப்"பண்ணிடப்போறான்


===========6 காதலிக்காக ,மனைவிக்காக நாம் சம்பாதிப்பதில் 75% செலவு செய்யும் நாம் நம் பெற்றோருக்காக 5% ஆவது"செலவு செய்திருப்போமா?என்று நாம் சிந்திக்கும் நாளே புத்தாண்டுக்கு சமம்


============7 ஈரோடு அந்தியூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 20 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வாழைகள் சேதம்# வானிலை அறிக்கைல 4 நாள் முன்பே எச்சரிக்கை விட்டாங்களே?திருச்சி குளித்தலை ஏரியா பூரா முன்ஜாக்கரதையா இருந்தாங்களே


===========


8 அதிகாரிகளுக்கு ஒத்துழைத்தால் அதிக மதிப்பெண் மற்றும் பணம், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை
# அப்டி"சோரம் போய் மார்க்"வாங்குனா பிளாக்மார்க் விழுந்துடாதா?


========


9 தாமரையை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்ப்போம் -
# தாமரை வீட்டுக்கு",நாட்டுக்கு"ஆகாதாம்,பெருமாள்"கோவில்ல சேர்த்தாலாவது"புண்ணியம் உண்டு


===============


10 குட்கா ஊழலில் அனைவருக்கும் தொடர்பு உள்ளது - ஸ்டாலின் # அனைவருக்கும்னா,உங்களுக்கும்னும் ஒரு"அர்த்தம்"வந்துடுதே


============11 கன்னடரான ஈ.வே.ராவை ஆதரிப்பவன் தமிழனே இல்லை - எச்.ராஜா # நீங்க கூடத்தான் தமிழர் அல்லாத"மோடியை ஆதரிக்கறீங்க,அப்போ நீங்க"தமிழர் இல்லையா?


=============


12 எளிய மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் எரிசக்தி இருக்க வேண்டும் - மோடி
# சோனியா காந்தி ,ராகுல் காந்தி மாதிரி எதிர்க்கட்சித்தலைவர்,பேச வேண்டிய டயலாக்கை இவரே,பேசிட்டா அவங்க"என்ன பண்ணுவாங்க?பாவம்


=============


13 மோடி அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறது.−தமிழிசை 1 ந்தேதி விட வேண்டிய அறிக்கையை இப்போ ஏன் விட்டிருக்கீங்க?


=============14 மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கான பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்-மோடி
# மக்கள் தொகை"கட்டுப்பாட்டில் இருக்கு ஜி ஆனா காவேரி விஷயத்துல மக்கள் கட்டுப்பாட்டில் இல்ல.புரட்சி,போராட்டம்"பொங்கறாங்க


===========


15 புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம்..# முதல்ல,எல்லா பேங்க் மேனேஜர்"ரூம்லயும்"வைங்க.அங்கே தான் கோடிக்கணக்குல கொள்ளை போகு


==============


16 புதிய இந்தியா ராக்கெட் விடுகிறது, தமிழகத்தில் பலூன் விடுகிறார்கள்-தமிழிசை # நீங்க கூடத்தான் தமிழகத்தில் தாமரை"மலர்ந்தே தீரும்னு உதார்"விடறீங்க


============

17 ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கியதாக அவதூறு பரப்புகின்றனர் - வைகோ # செக் /டிடி தான் வாங்குனார் போல==============
18 ஸ்டெர்லைட்டை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் போராட வேண்டாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ # இவ்ளோ"பேர்,போராடுனதாலதானே மூட நடவடிக்கை எடுத்தீங்க?


=============19 காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும் − அமைச்சர் ஜெயக்குமார் ?2021 மே மாசத்துக்குப்பின்?


============20 காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம் # ஆனா அவர் உங்க கட்சில இருந்தார்னு ஆதாரம் இருக்கே?

இப்ப தான் நீக்கிட்டமே?


============

0 comments: