Monday, May 07, 2018

ஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகசியம்

அமைதியான சூழ்நிலை வரட்டும் அப்போ"பாத்துக்கலாம்

தலைவா! போர் வரும்போது பாத்துக்கலாம்னு அப்போ"சொன்னீங்க.எந்த போர் அமைதியா வரும்? ஆர்ப்பாட்டமா வந்தாதான் போர்


===========


2 தலைவரே!உங்களுக்கு பூனையால ,யானையால கண்டமாம்

அய்யய்யோ,எப்டி சொல்றே?

நல்லா யோசிச்சுப்பாருங்க,இதுவரை நீங்க மேடை ல பழமொழி சொல்லி ஸ்லிப் ஆகி மீம்ஸ் ஆனதெல்லாமே பூனை/யானை தான்


=============


3 மாப்ளை,கவலையே படாதீங்க,என் பொண்ணு வாய்லயே வடை சுடுவா

அய்யய்யோ மாமா,எண்ணெய் தெறிச்சு உதடெல்லாம் காயமாகிடுமே,எப்டி லிப் கிஸ் அடிப்பேன்?==============


4 தலைவரே!தமிழர்களுக்கு நீங்க எதுவுமே செய்யறதில்லையாம்,காவேரி பிரச்சனை பற்றி பேசவே மாட்டேங்கறீங்களாம்,அவங்களுக்கு எதுனா செய்ங்க

அதான் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டனே?


=============5 தலைவரே!குஷ்பூ வை மீண்டும் நம்ம கட்சிலயே சேர்த்துக்கனும்,அதுக்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்குனு இன்னைக்கு கூட நிரூபிச்ட்டாரு

எப்டி?

அம்பேத்கார் பிறந்தநாளை அம்பேத்கர் நினைவு நாள் னு உங்களை மாதிரியே ஸ்லிப்"ஆகிடுச்சு


================6 Dr.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை சாப்பிடக்கூடாது என்பதுதான் மாத்திரையை விட கசப்பான மாத்திரை னு சொல்றாங்களே? நிஜமா?

அஸ்கா சர்க்கரை தான் கூடாது.200 பாய்ண்ட்டுக்கு கீழே இருக்கற ஆரம்ப கட்ட சுகர் பேஷண்ட்ஸ்"முறையான உணவுக்கட்டுப்பாடு ,உடற் பயிற்சி எடுத்துக்கிட்டா நாட்டுசக்கரைOk================7 சார்,வாட்சப்ல பரவுறதுல 50% புரளி தானாமே?இது நிஜமா?

இது கூட புரளி தான் 90% டுபாக்கூர்தான்


===============8 தலைவரே!உங்களுக்கு கராத்தே தெரியும்னு"உங்க ஆளுங்க பெருமை பேசறாங்களே?எந்த ஸ்கூல்ல கராத்தே"கத்துக்கிட்டீங்க?

மத்தவங்க பைட் போடும்போது பாத்தா இது கராத்தே ,இது குங்பூ னு தெரியும் ,அவ்ளோதான்================9 சார்,உங்க ரசிகர்கள் கற்றவை பற்றவை னு டேக் போட்டு கீச்சறாங்களே?என்ன அர்த்தம்?

ஸ்டைலா தம் பற்ற வை,அதுதான் நான் கற்றவை னு அர்த்தம்


==============10 குருவே!அழகா இருந்தா தான் பொண்ணுங்களுக்கு மதிப்பு கிடைக்குமாமே?

அழகா இருந்தா கமெண்ட்ஸ் தான் கிடைக்கும்.அடக்கமான,கண்ணியமான பொண்ணுங்களுக்கு மதிப்பு தானா கிடைக்கும்=================


11 மேடம் ,24 மணி நேரமும் பேஸ்புக்லயே குடி இருக்கறதா உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு

இதை மறுக்கறேன்.சாட்சி ஹவுஸ் ஓனர்,கேளுங்க

என்ன னு?
FB ல எப்பவும் குடி இருந்தா வீட்டு வாடகை எப்டி தந்திருப்பேன்?


===============


12 டாக்டர் ,ப்ளம்ஸ் பழத்துல இருந்துதான் ப்ளம் கேக் தயாரிக்கறாங்களா?

நல்ல வேளை,ஆப்பிள் பழத்துல இருந்துதான் ஆப்பிள் கேக் தயாரிக்கறாங்களா?னு கேட்கல


===========13 குருவே!சிவன் சொத்து குல நாசம்கறாங்களே?நிஜமா?

எதுக்கு வம்பு?நாம பார்வதி சொத்து ,பார்வதி மேனன் ,பார்வதி"ஓமனக்குட்டன் இப்டிக்கா போவோம்


===============14 குருவே!இமயமலை ஒரு தடவை போய்ட்டு வந்தா நம்ம இன்னல் நீங்கிடுமாமே?

ஆமா,போகும்போது சம்சாரத்தோட போய்ட்டு ரிட்டர்ன் தனியா வந்துடனும்==============15 கொள்ளை அடிக்கப் படு்கின்ற கோவில் சொத்துக்்களை பற்றி தந்தி Tvல இன்று முதல் ஒளிபரப்பாகும் 'சிவன் சொத்து' நிகழ்ச்சி.க்கு"பிராண்ட்"அம்பாசிடரா நயன்தாரா வை புக் பண்ணிடலாமா?

அவங்க எதுக்கு?

அவங்களும் இன்னைய தேதிக்கு (விக்னேஷ்)சிவன் சொத்து"தானே?


===============16 ஆர்ட்ஸ்"காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் முன்சன்டேவும் அதுவுமா ஏன் பசங்க நின்னுட்டு இருக்காங்க?

"விஷயம்"தெரியாதா?இன்னைக்கு
   15/4/18

=============17  கலர்ஸ் டி வி ல வர்ற "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சி மாதிரி கேவலமான புரோக்ராம் வேற இருக்க முடியாது

ஏன்?சன் டிவி ல "கிராமத்தில் ஒரு நாள்" கில்மா ப்ரோக்ராம் பார்க்கறதில்லையா?25 வருச சர்வீஸ்.சும்மா இல்ல


================18 அட்சய திருதியை அன்றைக்கு நகை வாங்கும் பழக்கம் இருக்குதா?

ஆமா ,வாங்குவேன்

ஆனா நகைக்கடைல உங்களைப்பாத்ததே இல்லையே மேடம்
அம்மா வீட்டுக்குப்போய் அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வருவேன்


==============19 ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட வேண்டும்.
அதற்காகவாவது கொஞ்சம் காதலித்துப் பார்க்க வேண்டும்

ஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகசியம் இதான் போல.ஒவ்வொரு புக்குக்கும் ஒரு காதலி=============


20 டாக்டர் , கண்ணுக்குள்ல போன சீயக்காய் எவ்வளவு கண்ணு வலிய உண்டாக்கும் தெரியுமா?செம வலி

சும்மா அடிச்சு விடாதீங்க.சோப்போ ,சிகைக்காயோ ,ஷாம்பு வோ கண்ல பட்டா கண் எரியும்,எப்டி வலிக்கும்.எரியுதேனு சும்மா கை வெச்சு தேய்ச்சிருப்பீங்க.விளக்கெண்ணெயோ நல்லெண்ணெய்யோ கண் ல விட்டா சரி ஆகிடும்


==========

0 comments: