Sunday, May 20, 2018

ட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்குமூலம்

நான் சின்னப்பையனா இருக்கும்போது சீன் பாக்கனும்னா பசங்க,ஆம்பளைங்க எல்லாம் 11 மணி காட்சி மலையாளப்படமோ,F Tv யோ பாத்தாங்க.இப்ப டப்மாஸ்லயே மாடர்ன் பொண்ணுங்க ஷோ ஓட்டிடறாங்க.
=============
2 நான் பல கம்பெனி மீட்டிங்க்ல பங்கெடுத்தாச்சு.எல்லாரும் ஆவலா இருக்கறதென்னவோ மீட்டிங்க் பிரேக்ல தர்ற மிக்சரு ,பிஸ்கெட் சாப்பிடறதுலதான்

============
3 நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள காரணிகள்1 தராதரம் அறியாமல், லஞ்சம் வாங்கிக்கொண்டு பணக்காரர்களுக்கு லோன் தருவது,அவங்க ஓடிப்போவது
2 MLA ,MP களுக்கு தண்ட சம்பளம் போதாதுன்னு உபரி சலுகைகள் அள்ளி இரைப்பது
3 அரசு ஊழியர்களுக்கு 70% அரசாங்க கஜானா செலவாவது===========

4 மருதாணி /நெய்ல்"பாலீஸ் வைக்க ஆகும் செலவை கைச்செலவு னு சொல்லலாமா?============


5 இப்ப எல்லாம் பொண்ணுங்க பொட்டிக்கடைல போய் எட்டணாக்கு ஊறுகாய் வாங்கப்போறதா இருந்தாக்கூட ஷாப்பிங் போறேன் னு FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டுதான் போறாங்க.============


6 நல்ல மார்க்கெட், வசதி வந்ததும் ஒருவர் உடல்கட்டு எப்டி இருக்கக்கூடாது என்பதற்கு உதா விஜய் சேதுபதி ,சிவ கார்த்திகேயன்
எப்படி மெயின்ட்டெயின் பண்ணனும் என்பதற்கு உதா விஜய் ,சூர்யா============7 கர்நாடகாவில் காங் தான் ஜெயிக்கும் கற கருத்துக்கணிப்பு பலவற்றை கண்டேன்.கணித்தவர்கள் அனைவரும் மெத்தப்படித்தவர்கள்.ஏ சென்ட்டர் ஆடியன்ஸ்.எனவே பிக் பாங் தியரிப்படி பாஜக தான் ஜெயிக்கும்


=============


8 பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைப்பதெல்லாம் ஒரு பெருமைக்காகத்தான்.படிக்க மட்டும் போதும்னா லைப்ரரி போதுமே!


===========


9 நாலு நாளுக்கு

முன்னால் வாங்கி
காய்ச்சி பிரிட்ஜ்ல் வச்சிட்டு போன பால்
இப்போ டீ வச்சி குடிச்சா
ப்ரிட்ஜ் வாங்கறதே சேதாரம் தான்.அதுல வைத்து பின் சாப்பிடுவது எல்லாமே ஆரோக்யக்கேடுதான் (ஐஸ் ,ஐஸ் வாட்டர் விதிவிலக்கு ஓரளவு)
உயிருக்கு எதுவும் சேதாரம் வருமோ?
==============


10 இந்தக்காலத்து சமையல் அறைகள் பெரும்பாலும் நின்று கொண்டே சமைப்பதற்கு ஏதுவாகவே கட்டப்படுகிறது.அவசரம் ,பதட்டம்,விரைவு என சமையலில் பல கலவை.அந்தக்கால சமையல் கட்டு அமர்நது சமைப்பது போல்.பொறுமையாக,நிதானமாக செய்த சமையலில் ருசி அதிகம்


=============11 கிராமத்து சமையலில்

விறகு அடுப்பு
சட்டித்தயிர்
அலுமினிய ,மண்பாண்ட பாத்திரங்களில் சாம்பார்,ரசம்
செம்புக்குடத்தில் குடிதண்ணீர்
சிறப்பு=================


12 ராகுல் காந்திக்கு எல்லாம் மோடியை எதிர்த்து ஜெயிக்கற அளவு கரிஷ்மா பத்தாது.ப்ரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளரா களம் இறக்குனா 2019 தேர்தல் களை கட்டும்=============


13 நான் ஏதாவது"ட்வீட் போட்டா உடனே ஓடி வந்து "இது ரொம்ப மொக்கையா இருக்கு"என கமெண்ட் போடுவோர் கவனத்துக்கு,அது எனக்கு தெரியாதா?நாம எழுதறது பூரா மொக்கை தான்.இது எப்டி இருக்குதுன்னா கலைஞர் கிட்டே பேட்டி எடுக்கற நிருபர் "உங்க ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி"னு சொல்ற மாதிரி ,அவருக்கு தெரியாதா அது===============


14 சொந்த டிபி வைக்கற பொண்ணுங்க""ஒற்றைக்கண் மாயாவி"யாக காட்டிக்கொள்வதன்"மர்மம் என்னவோ?============


15 நான் ஏதாவது"ட்வீட் போட்டா உடனே ஓடி வந்து "இது ரொம்ப மொக்கையா இருக்கு"என கமெண்ட் போடுவோர் கவனத்துக்கு,அது எனக்கு தெரியாதா?நாம எழுதறது பூரா மொக்கை தான்.இது எப்டி இருக்குதுன்னா கலைஞர் கிட்டே பேட்டி எடுக்கற நிருபர் "உங்க ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி"னு சொல்ற மாதிரி ,அவருக்கு தெரியாதா அது


=============


16 ஒரு ஆபத்து வரும்போது தான் தப்பிச்சா போதும்னுதான் பொண்ணுங்க நினைப்பாங்க,தன்னை நம்புனவரை முதல்ல காப்பத்தனும்னு ஆம்பளை நினைப்பான்============


17 சிறந்த மையல் சமையல் என்பது முருங்கைக்கீரை
அகத்திக்கீரை யை
தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதே!


============


18 நெட் தமிழன் புதுசா ஒரு
டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்,பொண்ணுங்களை பாட்டுக்குப்பாட்டு கேம் விளையாடலாம்னு சொல்லி ஓரம் கட்டி நைசா தன் வர்ணனை எல்லாம் ஏத்தி விட்டுடறான்


==========19 பெயரின் பின்னால் தந்தை பெயருடன் உலவும் பெண்களிடத்து எப்பவுமே ஒரு தனி மரியாதை வருகிறது னு நெட் தமிழன் அக்கறையா சொன்னா அக்கரைல ஒரு பெண்குட்டிக்கு ரூட் போடறாப்டினு அர்த்தம்


==========


20 என் ட்வீட்டை RT பண்ணுங்க PLS
என் யூ ட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க pls னு எல்லாம் எதுக்கு பிரபலங்கள் கூட கெஞ்சிட்டு இருக்காங்கனு தெரியல.பிடிச்சிருந்தா பண்ணட்டும்,இல்லாட்டி போகட்டும்


==========

0 comments: