Tuesday, May 08, 2018

நாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காசு செலவு பண்ணக்கூடாதுனு நினைக்கற கட்சி

10 லட்சம் ரூபா நோட்டு கொண்டு வந்து சாமிக்கு அலங்காரம் பண்ணி இருக்காம்,எப்பூடி?


வேண்டாத வேலை,எல்லாத்தையும் மறுபடி அடுக்கி பேங்க்ல கட்டனும்.இதுக்கு ஒரு செக் லீப் ல 10 லட்சம் னு எழுதி சிம்ப்பிளா பூஜை போட்டிருக்கலாம்
===========


2 டாக்டர் 2 மாசமா உடம்பு சர்யில்ல.. என்னன்னே புர்ல.மாசா மாசம் 5 கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்கு


அப்டியா?சாப்பாட்டை குறைக்கனும்

எப்டி?
டெய்லி 6 வேளை சாப்பிடறீங்க,அதை 3 வேளையா குறைக்கனும்.அன்லிமிடெட் மீல்ஸ் 2 சாப்பிடறீங்க.லிமிடெட் மீல்ஸ் ல பாதி சாப்ட்டா போதும்============3 மாப்ளை.95% மார்க் வாங்குன ஒரு"காலேஜ் பொண்ணோட ஜாதகம் இருக்கு,பேசி முடிச்சிடலாமா?


அய்யய்யோ வேணாங்க,இப்ப தான் சன் நியூஸ்ல அந்த பேராசிரியர் பேரம் பேசற க்ளிப்பிங்க் பாத்தேன்.நமக்கு 40% மார்க் வாங்குன பொண்ணே போதும்ங்க
===========

4 டியர்,உனக்காக நான் எழுதுன கவிதை பேப்பர் இது,இதையே கருங்கல்ல செதுக்கி இருக்கேன்,படிச்சுப்பாத்துட்டு கமெண்ட் பண்ணு


படிக்காமயே சொல்றேன்.மக்கும் குப்பை ,மக்காத குப்பை
===========5 டியர்,நான் சுட்ட ஆனியன் தோசை எப்டி இருந்துச்சு?


வெங்காயம் மாதிரி
============6 மாமா,பொண்ணு பாக்க வந்தப்ப உங்க பொண்ணுக்கு இட்லி ,தோசை,சப்பாத்தி எல்லாம் சுடத்தெரியும்னீங்க?1 ம் தெரியாது போல?


அதாவது கிச்சன் ல அவங்கம்மா சுட்டு வெச்சிருந்தா ஹாலுக்கு நைசா அதை சுட்டுட்டு வந்துடுவா===========7 குருவே!பெண் தன் கணவனை

ராஜாவாக்கி காலமெல்லாம்

ராணியாக வாழ்கிறாள்..என்பது உண்மையா?
ராஜா னு அவனை நம்ப வெச்சு வைலைக்காரன் ஆக்கி ராணி தேனி யா வாழ்கிறாள் என்று வேணா சொல்லலாம்===========


8 தலைவரே! நீங்க புரோட்டா வை விரும்பி"சாப்பிடறது ஆச்சரியமா இருக்கு.


ஏன்?

பொதுவா மைதா மாவுல கெமிக்கல் கலந்த புரோட்டா மாவு பெருச்சாளிக்கு பிடிக்காதாம்

ஓஹோ,அதுக்கும் ,எனக்கும் என்ன"சம்பந்தம்?
நீங்க தான் ஊழல் பெருச்சாளி ஆச்சே?
==============9 பழையபடி கவிதை எழுதலாம்னு"இருக்கேன்


இப்போ கரெக்ட் பண்ணப்போறது அன்னைக்கு கரெக்ட் பண்ண அதே ஆண்ட்டிகளையா?புதுசாவா?

=============10 மாமா,உங்க குடும்பத்துல பொண்ணெடுத்து ,பொண்ணு குடுக்கலாம்னு இருக்கோம்


ஓஹோ சந்தோஷம் மாப்ள,் ,என் பொண்ணை நீங்க கட்டிக்குவீங்க,என் பையன்"உங்க தங்கையை கட்டனும் ,அதானே?

ம்ஹூம்.உங்க பொண்ணை"கட்றது .6 மாசம் வாழ்ந்துட்டு சரிப்பட்டு வர்லைன்னா உங்க கிட்டயே பொண்ணை ரிட்டர்ன் பண்றது===============


11 தமிழ் மிஸ் தன்யா"− கலிப்பா ஒண்ணு எழுது பாப்போம்


வரையலாமா டீச்சர்

புரியலை
மியா கலிப்பா வை ஓவியமா வரைஞ்சிடவா?
==============12 இன்ஸ்பெக்டர்,ப்ரொபசர் நிர்மலாவை ஏன் இன்னும் கைது பண்ணலை?


வீட்டை உள் பக்கமா பூட்டிக்கிட்டாங்க சார்

யோவ்,கிரிமினல்னா அப்டித்தான்.ரிசப்ஷன் ல உக்கார வெச்சு டீ போட்டுத்தந்து சரண்டர் ஆவாங்களா?கதவை உடைச்ட்டு உள்ளே போறதுக்கென்ன?
=============13 தமிழ்நாட்டில் இரட்டை ஆட்சி நடக்கிறதோன்னு சந்தேகம் வருவது எனக்கு மட்டும்தானா ?


இல்லை.இரட்டை இலை ஆட்சி னு ஜனங்களை நம்ப வெச்ட்டு இருக்காங்க,நடப்பது தாமரை ஆட்சி.ஒத்தைப்படைதான்.ஒத்து"ஊதுவதுதான் டம்மிங்க வேலை
============14 மத்தவங்க எல்லாம் கவர்னரை எப்டி கூப்பிடனும்?


மேதகு ஆளுநர்

நிர்மலா தேவி?
இது நம்ம ஆளு நர்==========15 டியர்.சாப்பாடு பார்சலை கடையில் வாங்கி வந்தாலும் நீ தான் பரிமாற்ற வேண்டும் என சொல்வது ஆணியம்"தானே?


ஏம்மா!சமைக்கத்தான் முடை,பரிமாறவும் முடைப்பட்டா எப்டி?
============16 ரைட்டர் சார் ,நீங்க

் வெண்பா எழுதுறப்ப மின்னலடிக்கிற மாதிரி இருக்குமாமே?

ஆமா,என் சம்சாரம் நான்"எழுதறப்ப என்னை"அடிப்பாப்டி.வர்றம்மா மின்னல்ம்பேன்=============17 ரைட்டர்"ஊதா"மூங்கில்"ஒல்லியாதான் இருப்பாரா?எப்டி"சொல்றே?


குண்டா"இருந்தா,நல்லா ஊதுன"மூங்கில்னோ ,உப்புன"மூங்கில்னோ"பேர்,வெச்சிருப்பாங்கள்ல?
============


18 தலைவரே!இந்த பொம்மலாட்ட ஆட்சி கலைக்கப்பட்டு "நிர்மலாதேவி"ஆட்சி வரனும்கறீங்களே?அப்டினா?


கவர்னர் ஆட்சி னு அர்த்தம்யா.பூடகமா சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?
==============19 பாரதி ராஜா ₹10 கோடி

முத்தரசன் ₹10கோடி

வேல் முருகன்₹ 12கோடி
ஜாவகிருல்லா, திருமா ₹20கோடி போரட்டம் பண்ண திமுக ஒதுக்கீடு னு சொல்றாங்க நிஜமா?

ச்சே ச்சே இருக்காது
ஏன்?
நாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காசு செலவு பண்ணக்கூடாதுனு நினைக்கற கட்சி ஆச்சே?==========


20 கவிஞரே!நீங்க மொழி வல்லுனர்னு"சொல்றாங்களே?ஏகப்பட்ட மொழி கைவசம் இருக்கோ?


ஆமா,தமிழ்மொழி ,தேன் மொழி,கனிமொழி னு லிஸ்ட்"நீளும்
==============

0 comments: