Wednesday, May 16, 2018

இணையப்பெண்கள் vs பிக்பாஸ்"சினேகன்

அறிமுகம் இல்லாதவர்க்கு உதவி செய்தல் மருதாணி வைத்து விடுவதற்கு சமம்.யாருக்கு நீங்கள் மருதாணி வைத்து விட்டாலும் முதலில் சிவப்பது உங்கள் விரல்கள்தான்.பிறருக்கு உதவி செய்வதால் புண்ணிய பலன் பெறுவது முதலில் நீங்கள்தான்=============
2 பூமாதேவிக்கும்,அன்னலட்சுமிக்கும் ஒரே சமயத்தில் மரியாதை செலுத்த எளிய வழி தரையில் அமர்ந்து சாப்பிடுவதே!

===========
3 கோடை கொதிக்கும்வரை ஜனங்கள் தவிர்க்க வேண்டியது ஏசி ,பிரிட்ஜ்,ஐஸ்,கூலிங்க் வாட்டர்,கூல் ட்ரிங்க்ஸ்நாட வேண்டியது
மர நிழல்
பானைத்தண்ணீர்
நீர்நீலைகள் நுங்கு
கோஷாப்பழம் (தர்பூசணி)
மோர் வெள்ளரி கம்மங்கூழ்
வீட்டில் தயாரித்த ஐஸ் போடாத லெமன் ஜூஸ்
ராகிக்கூழ்
கரும்புச்சாறு


=============

4 நட்சத்திர ஹோட்டலில் விழா வைத்தால் எத்தனை இலை /தட்டு என எண்ண நெருங்கிய நண்பர்/உறவினர் ஒருவரை நியமித்து விடுங்கள்.நீங்கள் விழா பிசியில் இருப்பதை தெரிந்து கொண்டு ஹோட்டல்காரன் பொய்க்கணக்கு எழுதி கொள்ளை அடிப்பதை தடுக்க
============5 கிரிக்கெட் சீசன் முடியும் வரை நாம் எழுதுவது எடுபடாது என பலரும் நினைப்பதாக அறிந்தேன்.எல்லாரும் கிரிக்கெட் பற்றியே எழுதும் இந்த தருணம்தான் நீங்கள் புதிதாய் எழுத உகந்த தருணம்=============6 அரசியல்வாதிகள் போல் கேவலமாக ஊர் சொத்தை திருடி வாழாமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து வாழ்கின்ற விவசாயிகளுக்கும்,உழைப்பாளிகளுக்கும் மே தின தொழிலாளர்/உழைப்பாளர் தின வாழ்த்துகள்


=============


7 இணையப்பெண்கள் நல்ல சினேகிதனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள்,ஆனால் அவர்களுக்கு அமைவதெல்லாம் பிக்பாஸ்"சினேகன் கள் தான்


==========

 
8 ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வெடுக்காமல் உழைப்பது அம்மாக்கள்தான்.உழைப்பாளர்களில் அவரே முதன்மை============

9 நெட் ல (FB & Twitter) பிரமாதமா சமையல் குறிப்பு எழுதி அட்டகாசமான போட்டோஸ் எல்லாம் அப்டேட்டும் பெண்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று உங்க வீட்டுக்கு வந்து நிஜமாவே நீங்கதான் சமைக்கறீங்களா?னு செக் பண்ணி அறிக்கை விடப்போறாங்களாம்.மாட்னீங்க


===========


10 2018 ல பொண்ணுங்க நல்லா முன்னேறிட்டாங்க.நான் சொல்ற எடுபுடி வேலைகளை எல்லாம் செய்ய எனக்கு ஒரு தோழன் இல்லையே னு FB ல புலம்ப ஆரம்பிச்ட்டாங்க.நம்மாளு அசரலையே ,அதுக்கும் போய் உள்ளேன் அய்யா/ஆன்ட்டி னு அட்டெண்டன்ஸ் போட்டுடறான்


============


11 நெட் தமிழன் ஒரு பொண்ணுகிட்ட "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"னு நலம் விசாரிக்கறாப்டி,ஆகிடுச்சுன்னு சொன்னா கடலை போட மாட்டாப்டியோ?================


12 பொண்ணுங்க எல்லாம் இப்போ ஒரு"கவுரவத்துக்காகவும் ,விளம்பரத்துக்காகவும் ஹாங்க்காங்க் ,சிங்கப்பூர் ,மலேசியா,நைஜீரியா னு கோபால் பல்பொடி கணக்கா இன்ட்டர்நேஷனல் லெவல்ல கடலை போடறாங்க.அவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ,இந்தியப்பிரஜையாக இரு,இந்தியனிடமே ஏமாறு


=============


13 ஏப்ரல் மாத GST வசூல் 1 லட்சம் கோடி என அமைச்சர் பெருமிதப்பட்டு அறிவித்திருப்பது ஒரு பின்னடைவு.ஒழுங்காக கட்டுபவர்கள் கூட அடேங்கப்பா,இவ்ளோ வருமானமா?50% கணக்குல காட்டாத நெ 2 வியாபாரமா பண்ணலாம் என நினைக்க வாய்ப்புள்ளது


=========


14 SBI (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) ல் சேமிப்புக்கணக்கோ,வரவு செலவோ வைத்துக்கொள்வது சிக்கனத்துக்கு ,வீட்டுக்கு ,நாட்டுக்கு கேடு தரும்=================


15 நெட் தழிழன்"வீட்டு மொட்டை மாடில பறவைகளுக்கு தண்ணி வைக்கறதா ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாப்டி.வலை விரிச்சிருக்கறது எந்தப்பறவைக்குனுதான்"தெரியல


==================


16 பாஜக காரர்கள் தமிழர்கள் இல்லை,கழிச்சு விட்ரலாம்,ஆனால் கூழைக்கும்பிடு குருசாமிகள் EPS&OPS இருவரும் தமிழர்கள் எனும் பதத்துக்கே அவமானம் தேடித்தந்த அடிமைகள்.கேவலம் பதவிக்காக ,பணத்துக்காக ஈனப்பிழைப்புடா சாமி============


17 உங்கள் சேமிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க,அதிகப்படுத்த எளிய வழி,உங்கள் வீட்டின் அருகே,பணி புரியும் இடம் அருகே இப்படி 4,5 வங்கிகளில் சேமிப்புக்கணக்கு துவங்குவதே
(எச்சரிக்கை −SBI வங்கி அருகே"சென்று விடாதீர்.வங்கிக்குள் இருக்கும் தண்ணீர் கேனில் ஒரு டம்ளர் தண்ணீர்"குடித்தாலும் அபராதம்)


=============


18 கேவலமான கட்சிகள் தர(ங்கெட்ட)வரிசைப்படி

1 திமுக (செமயா சம்பாதிச்சு ஈழத்தமிழருக்கு துரோகம்)
2 அதிமுக ( மன்னார்குடி மாபியா ஆதிக்கம்)
4 பாஜக ( தமிழர்களை வஞ்சிக்கிறது)
3 காங் (ஈழத்தமிழரை பழி வாங்கியது)


=========19 21 வயசு நெட் தமிழன் நேத்து நைட் 19 வயசுப்பொண்ணுகிட்ட உருகி உருகி 2 மணிநேரம் கடலை போட்டாப்டி.இன்னைக்கு 36 வயசு ஆண்ட்டி கிட்ட கடலை.நாளை கணக்குப்படி 53?


=============


20 மெயின் கட்சிகளை மடார்னு தலைல கொட்ட ஒரே வழி 234 தொகுதிகளிலும் நல்ல சுயேட்சைகளை ஜெயிக்க வைப்பதே!சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் 1 MLA முதல்வர்


===============

0 comments: