Wednesday, May 30, 2018

பிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன்

காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது..− பொன் ராதா # என்ன?இப்ப வெல்லாம் ஆளாளுக்கு பழமொழி சொல்ல ஆரம்பிச்ட்டாங்க?)தளபதி மைண்ட் வாய்ஸ்


==============


2 காவிரி ஆணையத்தின் தலைமையகம் டெல்லிக்கு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது - தமிழிசை
# தமிழ்நாடு சம்பந்தப்பட்ட எல்லாத்துக்குமே தலைமையகம் டெல்லிதானே?


=============


3 கர்நாடகாவில்
இளைஞர்களுக்கு இலவசமாக பசுமாடு வழங்கப்படும் ....எடியூரப்பா..
# அவன்"சைவமா?னு விசாரிச்ட்டு குடுங்க,அவன்"பாட்டுக்கு"வெட்டி சாப்டறப்போறான்


===========


4 சொத்து இருந்தும் காந்தி போல எளிமையாக வாழும் ரஜினி - ஏ.சி.சண்முகம்
# காந்தி எப்போங்க வாடகை பாக்கி வெச்சாரு?செக் ரிட்டர்ன் விட்டாரு?


============


5 நான் இன்னும் கட்சி தொடங்காததால், கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை - ரஜினி..
# அப்போ கமல் கூட்டத்துல பங்கேற்றவர்கள் எல்லாரும் கட்சி தொடங்குனவங்களா?============6 தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தினமும் ஊழல் நடக்கிறது - கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ

# வாக்கிங்க் போறது நல்லதுதான்,அதான் ஊழல் "தினமும் நடக்கிறது"னு செல்லூர் அறிக்கை விடுவாரோ?


===========


7 ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது
* ரஜினி" நம்பாதே"கண்களே பெண்களை நம்பாதே"பாட்டை இவர் கேட்டதில்லை போல
============8 காதல் திருமணம் செய்பவர்களை​​​
​​​யாரும் தடுக்க கூடாது :​ ​உச்சநீதி மன்றம்​ # யுவர் ஆனர் ,புருசன் கூட தடுக்கக்கூடாதா?பாதி பேரு இப்பவெல்லாம் அடுத்தவன் பொண்டாட்டியைதான் கரெக்ட் பண்றான்


============9 அரசு பங்களாவை காலி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டுமென உ.பி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை #2 நாள் போதாதா?எதுக்கு 2 வருசம்?அப்போ 2 வருசம் வாடகை வசூல் பண்ணிடனும்
==========10 தூத்துக்குடி கலவரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் - நடிகர் ரஜினிகாந்த்
* நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த்
# அலட்சியம் மட்டுமில்ல.ஆலை நிர்வாகம் தரும் கோடிக்கணக்கான பணம் சம்பாதிப்பது தான் லட்சியம்============


11 பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்! # நிஜமாவே யோக்கியமானவரா இருந்தா
1 கண்ணீர் புகை
2 தடியடி பிரயோகம்
3 தண்ணீர் பீய்ச்சி அடித்தல்
4 முழங்காலுக்கு கீழே சுட உத்தரவு
இதுல எதுனா பாலோ பண்ணி இருக்கனும்


===========


12 வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - மதுரை சரக டிஐஜி # எங்க சந்தேகமே போலீஸ் மேல தான்.இதை யார் கிட்ட தெரிவிக்கனும்?============13 அரசியல் ரீதியாக வாதம் செய்ய வேண்டாம், யாருக்கும் ஆதரவாக வாதாடாமல், தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவேண்டும், நாம் அனைவரும் மக்களுக்காகத்தான், எங்களுக்கு எதுமே தெரியாமல் இங்கு அமரவில்லை என அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம். கலைங்க முதல்ல


========14 கடந்த காலங்களில்
தலைவர்களின் பேச்சை
கேட்கவே இனிமையாக
அப்படி இல்லை
இருக்கும் தற்போது
# 2 வரி பழமொழி யை தப்பா சொல்லவே 4 தடவை துண்டு சீட்டை பாத்து பாத்து படிக்க வேண்டியதா இருக்கு ,பாவம்
-உயர்நீதிமன்ற நீதிபதிகள்


=========


15 தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்!
# இதுவும் நல்ல ஐடியாதான்.குடிகாரனுங்க குடிச்சே சாவட்டும்
===========16 ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு முடிவு
# இது ஏதோ கண்துடைப்பு மாதிரி இருந்தாலும் பெயரளவிற்காவது அறிவித்தது மகிழ்ச்சி=============17
'திமுக ஆட்சியில் இருந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்' - மு.க.ஸ்டாலினுக்கு பிரமலதா விஜயகாந்த் கேள்வி
# எதிர்க்கட்சியா இருக்கும்போது"மட்டும் எல்லாத்தையும் எதிர்ப்போம் ,ஆளுங்கட்சியா இருக்கும்போது"கை நீட்டி கமிஷன் வாங்கிக்குவோம்===========


18 இறைவன் கட்டளையிட்டால் விஜயகாந்துடன் கூட்டணி வைப்பேன் - சரத்குமார் #
# போன மாசம் தானே அவரை திட்டி அறிக்கை விட்டீங்க?
அது போன மாசம் ,இது இந்த"மாசம்


=============19 பிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன் - பாரதிராஜா #

// பாரதிராஜா வடிவில் செல்லூர் ராஜூவை பார்க்கிறோம்


===========20 கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு # விழாவுக்கு போனா "காவேரி பிரச்சனை பற்றி பேசுனீங்களா?"னு இங்கே கேப்பாங்க,போகலைன்னா காங் காவிச்சுக்கும்.தளபதி நவ் இருதலைக்கொள்ளி எறும்பு மொமெண்ட்===============

0 comments: