Friday, May 18, 2018

கூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல

1   : சென்னை ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடை


பேராசிரியை அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்ற சொன்னது போலீஸ்
# நல்ல வேளை,கூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல
===========


2 நீட்; தமிழக மாணவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளன: தமிழிசை விளக்கம்

# என்ன என்ன ஆப்சன் வெச்சீங்க?
கேரளா ஆந்திரா ராஜஸ்தான்
அப்ப சரி அப்ப சரி===========


3 சிறைத் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களை ஏவல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது: பாதுகாப்பு பணிக்கு மட்டுமே அனுப்ப ஏடிஜிபி உத்தரவு # கொஞ்ச நாள் கழிச்சு பயன்படுத்திக்கலாம் போல னு நினைச்சுக்கப்போறாங்க============
4 21-வயதுக்கு முன்னதாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்..! - உச்ச நீதிமன்றம் # இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுய்யா,எங்களுக்கெல்லாம் 29 வயசுல தான் பொண்ணையே கண்ல காட்டுனாங்க

================
5 அரசு வருமானத்தில் 70 விழுகாடு அரசு ஊழியர்களுக்கு செலவு ஆகி விடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார். # அரசு ஊழியர்களுக்கு 25% சம்பளத்துல குறைச்சுட்டு தனியாருக்கு 10% கூட்டி விட்ருங்க.டேலி ஆகிடும்

===============

6 வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வதில் தவறில்லை - உச்சநீதிமன்றம் # தவறான தீர்ப்பு.குழந்தை பிறந்த பின் ஆம்பள விட்டுட்டுப்போய்ட்டா சட்ட ரீதியான பாதுகாப்பு பெண்ணுக்கு இருக்காது
=============
7 பாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம் வலைத்தளங்கள்ல உங்க 2 கட்சிகளையும் கழுவிக்கழுவி ஊத்தறாங்க
===

8 கர்நாடகாவில் பாஜக ஆட்சி வந்தால் விவசாயிகள் ஹெலிகாப்டரில் பூச்சிமருந்து அடிக்கலாம் - மோடி.
# ஆனா இப்போ விவசாயிகள் பூச்சி மருந்து அடிக்கற நிலைமைல இல்ல.குடிக்கற நிலைமைலதான் இருக்காங்க


==========


9 கமல் முதல்வரானால் காவிரி வரும் - ஸ்ரீப்ரியா #

மகாநதி பட ஹீரோ என்பதாலா?=============10 ஸ்டாலினுக்கு தலைமையேற்கும் முதிர்ச்சி வந்துள்ளது: வைகோ # தலை"மை" ஏற்கும் முதிர்ச்சி ன்னா ரொம்ப வயசாகிடுச்சுனு சொல்ல வர்றாரா?


=============


11 இந்துக்களாய் இருந்தால் பிஜேபிக்கு வாக்களியுங்கள் - மோடி ஆதரிக்கறவங்க காங் க்கு வாக்களிக்கனுமா?ரைட்டு==============


12 சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிக்க வேண்டாம்’ மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
,அங்கே போனா அரசியல்வாதிங்க வண்டவாளம் எல்லாம்"தண்டவாளம்"ஏறுதாம்.அப்டியே கிணத்துத்தவளையாவே இருக்கனும்


==============

13

தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களுக்கு ஜெயலலிதாவுக்கு நான் ஐடியா கொடுத்தேன்: திவாகரன்
# இந்த ஐடியா குடுத்த விஷயம் ஜெ வையும் உங்களையும் தவிர யாருக்கும் தெரியாது,கரெக்டா?


============14 சசிகலா சிறைக்குச் செல்லும்போதே அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டார்: ஓ.பன்னீர்செல்வம் # அப்போ இவரை(OPS) ஏதோ ஒரு கேஸ்ல உள்ளே போட்டா ரிசைன் பண்ணிடுவாரோ?============15 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நடிகர் நாசர்
// அவர் பதவியே இன்னும் 1 வாரம்தான் தாங்குமாம்


===========


16 முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் நீக்கம் # எல்லாத்தையும் மேல இருக்கறவர் பாத்துட்டு அப்பப்ப கன்ட்ரோல் பண்ணீட்டுதான் இருக்கார் போல


=====================17 தந்தை பேச்சை பின்பற்றுங்கள் ஸ்டாலின்! # உதயநிதி சார்,உங்களைத்தான் சொல்றாரு,கேளுங்க


================18 துண்டுச்சீட்டை பார்க்காமல் ராகுலால் 15 நிமிடங்கள் பேச முடியுமா? - மோடி சவால்
வேளை,பழமொழி புகழ் தளபதி பத்தி ஏதும் சொல்லல==============


19 ஓட்டு போடாதவர்களை கை, காலை கட்டி கூட்டிச் சென்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போட வையுங்கள் - எடியூரப்பா #
# அதான் "கை"யை கட்டிப்போட்டுட்டீங்களே ?எப்டி வாக்களிப்பாங்க?
கை"யை ஜெயிக்க வேற வழி இல்ல போல===============


20 தலித் வீடுகளில் தலைவர்கள் சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமை ஒழிந்து விடாது - மத்திய மந்திரி
# அவங்க வீட்ல மிச்சம் மீதி இருக்கற சாப்பாடு வேணா ஒழியும்=================0 comments: