Sunday, May 20, 2018

காளி - சினிமா விமர்சனம்

Image result for kaali movie
இசை அமைப்பாளர் விஜய் ஆண்ட்டனி  முதன் முதலா ஹீரோவா 2012 ஆகஸ்ட் 15 க்கு நான்   படத்துல அறிமுகம் ஆனப்போ பலரும் கிண்டல் பண்ணாங்க , இவரெல்லாம் ஹீரோ ஆகிட்டாரா?னு. இதே மாதிரி பலரின் கிண்டலை சந்தித்து இப்போ செம ஃபார்ம்ல இருப்பவ்ங்களில் முக்கியமானவங்க நாளைய தீர்ப்பு விஜய் (  குமுதம் விமர்சனத்துல இதெல்லாம் ஒரு முகமா? என நக்கல் அடிச்சிருந்தாங்க , அதே குமுதம் பணம் வாங்கிட்டு இப்போ அவரை சூப்பர் ஸ்டார்னு கொண்டாடறங்க ) துள்ளுவதோ இளமை ல தனுஷ் பல கிண்டல்களை சந்தித்தார்.( தினமலரில் நாக்குப்பூச்சி நடிகர்னு கிசு கிசு வில் கிண்டல் பண்ணாங்க)


 அதே வரிசையில் விஜய் ஆண்ட்டனி தொடர்ந்து ஹிட் படங்கள், மீடியம் ஹிட் படங்கள் , தந்தார். 2014 ல் சலீம் ஒரு க்ரைம் த்ரில்லர் ஹிட் படம்.  2015 ல ரிலீஸ் ஆன இந்தியா பாகிஸ்தான் ஒரு காமெடி ஃபிலிம், மீடியம் ஹிட், 2016 ல் வந்த பிச்சைக்காரன் செம ஹிட் , அதாவது தியேட்டரில் ரிலீஸ் ஆனப்போ சாதா ஹிட் தான். பின் மோடி டிமாண்ட்டிசேசன் பேருல  500 ரூபா 100 ரூபா நோட்டுக்கள் செல்லாதுன்னு சொன்னப்போ தான் சன் டிவி பிச்சைக்காரன் படத்தை போட்டு டி ஆர்பி ல எங்கேயோ போய் செம காசு  பார்த்துச்சு


அதுக்குப்பின் மேஜிக் ரைட்டர் சுஜாதா நாவலின் தழுவலாக வந்த சைத்தான் சைக்காலஜிக்கல் த்ரில்லர் சுமாரா போச்சு ,  (2016)

2017 ல வந்த எமன் மீடியம் ஹிட். இவர் பட டைட்டில்களே நெகடிவாகவும் , பலரது கவனத்தை கவரும் வகையிலும் இருக்கும் . கோலிவுட்டே எதிர்த்தபோதும் பிச்சைக்காரன் , எமன் டைடில்களை போராடி வைத்தார். இதே போல் கோடம்பக்கம் செண்ட்டிமெண்ட்டை முதன்முதலாக உடைத்தவர் ஆபவாணன் , ஊமைவிழிகள் பட டைட்டிலுக்கு பலஎதிர்ப்புகளை சம்பாதித்தார்


இப்படி ஏறுமுகத்தில் இருந்த விஜய் ஆண்ட்டனி   3 ஹிட் படங்கள் 3 மீடியம் ஹிட் படங்கள் கொடுத்தாலும் எல்லா\ வெற்றியாளர்களுக்கும் ஒரு தோல்வி உண்டு என்ற நியதியின் படி  அண்ணாதுரை படம் ஃபிளாப் ஆச்சு, அடுத்ததா அவர் ஹீரோவா நடிச்ச காளி இப்பொ ரிலீஸ் ஆகி இருக்கு


இந்தப்படத்தோட கதை என்னான்னு பார்ப்போம்.4 வெவ்வேற ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாத தனித்தனி 4 குறும்படங்கள் அதை ஒரே கதையில் இணைக்க படாத பாடு பட்டிருக்காங்க, இந்தப்படம் ஹிட் ஆகாதுனு ஏன் உறுதியா நம்பறேன்னா இதுக்கு முன்னாடி இதெ மாதிரி கலெக்சன் ஆஃப் ஷார்ட் ஃபிலிம் மாதிரி 4 படங்கள் ரிலீஸ் ஆகி வந்த சுவடே தெரியாம காணமப்போய் இருக்கு.


 ஏன்னா தமிழன் ஃபுல் மீல்ஸ் சாப்பிட ஹோட்டலுக்கு வரும்போது  அவன் கிட்டே லெமன் சாதம் தான் இருக்குன்னா பக் கடைக்குப்போய்டுவான். அதே மாதிரி தான் 2 மணி நேரம் 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய முழு திரைக்கதை தான் அவன் தேவை


இந்தப்படத்துல ஒரே ஆறுதல் யோகிபாபுவோட ஒன்லைனர்கள் தான். இடைவேளை வரை 7 இடத்துல காமெடி பண்ணி இருக்கார்.


Image result for kaali movie amrutha
1   முதல் குறும்படத்துல ஹீரோவோட அம்மா அப்பா ஒரிஜினல் கிடையாது தத்து எடுத்து வளர்த்தவங்க.ஒரிஜினல் அம்மா அப்பாவை தேடி ஹீரோ ஃபாரீனில் இருந்து இந்தியா போறார், அவர் எப்ப்டி கண்டு பிடிக்கிறார் என்பதே கதை

2  இதுல ஒரு அவசரக்குடுக்கை ஹீரோயினை ஹீரோ லவ்வறாரு. ஊரை விட்டு  ஓடிப்போக பிளான் பண்ணுனபடி ஹீரோ வராததால அந்த கேனம் தற்கொலை பண்ணிக்குது

3   கலைஞர் மாதிரி வயசான வில்லன் 20  வயசுப்பொண்ணை கல்யாணம் பண்ணீக்கறாரு, அவர் கூட ஹீரோக்கு கள்ளக்காதல், அது நிறைவேறுச்சா இல்லையா? என்பது சஸ்பென்ஸ்

4  பாதிரியாரை லவ் பண்ற பொண்ணு தன்னால அந்த ஊருக்கு பிரச்சனை வரக்கூடாதுனு விலகுது



 சபாஷ்  டைரக்டர்


1  கிருத்திகா உதயநிதி தான் டைரக்டர் என சொல்லப்பட்டாலும் அவர் பெரிய இடம் என்பதால் சும்மா பேருக்கு டைரக்டர்னு போட்டுக்கிட்டு வேற யாரோ 2  பேரை வெச்சு படம் எடுத்தார்னு ஒரு பேச்சு இருக்கு , அதை மெய்ப்பிக்கும் விதமா நாயகி நாயகன் நெருக்க மான காட்சிகள் , லிப் கிஸ் சீன்  எல்லாம் வருது ( மீரா நாயர் டைரக்சன்ல கூடத்தான் கில்மா சீன் வந்ததேனு எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது , அவங்க தமிழ்ப்பொண்ணு இல்லையே?


2 அஞ்சலி , அம்ரிதா, சுனைனா, ஷில்பா என 4 ஹீரோயின்களையும் புக் பண்ணது , கிளாமர் காட்சிகளை கிளுகிளுப்பா புகுத்துனது

3  வில்லன் வேல ராமமூர்த்தி , யோகி பாபு , நாசர் என  சபாஷ் போட வைக்கும் நடிப்பை வர வைத்ததுக்கு


4  பிஜிஎம் குட் .  விஜய் ஆண்ட்டனியின் இசையில் அரும்பே பாட்டு குட்
Image result for sunaina hot

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1  ஹீரோவோட வளர்ப்புத்தந்தை “ உன் கிட்னி அம்மாவுக்கு மேட்ச் ஆகாது, அவர் பெற்ற அம்மா இல்ல , வளர்ப்பு அம்மானு சொல்றார் இதுல 2 மைனஸ். 1  அவர் அப்படி உளற வேண்டிய அவசியமெ இல்லை.  ஹீரோவா உண்மை தெரியும் வரை கமுக்கமா  இருந்திருக்கலம் 2  எதேச்சையா ஒரு வேளை மேட்ச் ஆக  வாய்ப்பு இருக்கே?


2 பேசுனபடி லவ்வர் வர்லைன்னா ஃபோன் பண்ணலாம், அவர் நெம்பர் நாட் ரீச்சபிள்னா அவர் நண்பர் ஃபோன் க்கு ட்ரை பண்ணலாம், இப்படி எத்தனையோ ஆப்சன் இருந்தாலும் எதுக்கு அந்த கேனம் தற்கொலை செய்யுது?


3 வேல ராமய்யா சின்ன வயசுப்பொண்ணை மேரேஜ் பண்றாரு, சரி அவரை பிடிக்காத இள வயது மனைவி கணவர் துங்கும்போது ம்கத்தியால குத்த வருது. அந்தப்பொண்ணு 40 கிலோ வெயிட் இருக்கற சின்னப்பொண்ணு, வில்லன் மலை மாடு மாதிரி 100 கிலோ இருக்கும் ஆளு, பொண்டாட்டி ஈசியா சப்பாட்டில் விஷம் வெச்சு கொல்லலாமே?( இப்ப பல பொண்டாட்டிங்க  அப்டித்தானே செய்யறாங்க?)

4  குளிர் காய்ச்சலில் அவதிப்படும் பாதிரியாருக்கு ஃபேனை ஆஃப் பண்ணி விட்டு ஒரு கம்பளிப்போர்வையை போர்த்தி விட்டா வேலை முடிஞ்சது அதை விட்டுடு அவரை சூடேத்தறேன்னுட்டு ஹீரோயின் கில்மா பண்ணிட்டு “ அடடா இப்டி ஆகிப்போச்சேனு வருத்தப்படறது  கேலிக்கூத்து


5 இந்த 4 குறும்படங்களீலும் ஏன் விஜய் ஆண்ட்டனியே ஹீரோவா  வர்றாரு? 4 கதையையும் இணைக்க ஏன் மெனக்கெடல? தனித்தனி கதையா அந்தரத்துல தொங்கிட்டு இருக்கே?






Image result for anjali hot




விஜய் ஆண்ட்டனி யின் ஹிட் படங்கள்

நான் ( 2012)
சலீம் ( 2014)
பிச்சைக்காரன் ( 2016)
மீடியம்



இந்தியா பாகிஸ்தான் ( 2015)
எமன் (2017)
சைத்தான் ( 2016)

flop



அண்ணாதுரை (2017)
காளி ( 2018)


காளி − ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத 3 வெவ்வேறு காதல் கதை(குறும்படங்கள்)களை 4வதாக ஒரு கதைக்குள் சாமார்த்தியமாக நுழைக்க முயற்சித்து தோற்றிருக்கிறார்கள்,வெற்றி பெற்றால் வித்தியாச முயற்சி,பெறாவிட்டால் வீண் முயற்சி,யோகி பாபுவின் ஒன் லைனர்கள் மட்டுமே ஆறுதல்,விகடன் 39 ரே−2.25 / 5



Image result for anjali hot

0 comments: