Saturday, May 12, 2018

பாலியல் ஜனதா பார்ட்டி?

1  கட்சி தொடங்குவது நிச்சயம்; ஆனால் எப்போது தொடங்குவேன் என்று கூற முடியாது- ரஜினி # சிக்னல் கிடைச்சா தான் ரயில் ஸ்டேஷனுக்கு வரும்


===========


2 கர்நாடகாவில் மோடிக்கு
43% பேர் ஆதரவு ராகுல்காந்தி 28% மட்டுமே -பரபர சர்வே # இதுவும் ஒரு டெக்னிக்தான்,ஜெயிக்கப்போற கட்சிக்கு ஓட்டு போடுவோம்னு எல்லா தொகுதிலயும் 10% வாக்காளன் இருப்பான்.அவங்களை கவர்"பண்ண இப்டி அடிச்சு விடறது


=============3 காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் # பீல்டுல இறங்கி வேலை பாத்தாதான் அந்த கஷ்டம் தெரியும்


===============


4 ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கில் கூடி மக்கள் போராடியதுபோல் காவிரிக்காகவும் போராட வேண்டும் - தம்பிதுரை
# நிம்மதியா இருக்க வேண்டிய மக்கள் எப்பவும் எதுக்காகவும் போராடிட்டே இருக்கனும்னா MLA M P க்களுக்கு என்ன வேலை?


===============5 கமலை அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ள முடியாது அவர் சிறந்த நடிகர்.
அரசியல்வாதிக்குரிய பண்பு கமலுக்கு கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார் # மக்கள்ட்ட நல்லவர்மாதிரி நடிச்சா போதுமே.அரசியல்வாதிக்கான மெயின் தகுதியே அதானே?


============6 பத்தாயிரம் அதிமுகவினர் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்
# அதுல 9500 பேர்"லஞ்ச் பிரேக்ல"வெளிநடப்பு பண்ணிட்டு பின்னே வந்தாங்களாமே?===============


7 ஹெச். ராஜா கருத்து, ஆளுநர் விவகாரம் மூலம் காவிரி பிரச்னையை திசை திருப்ப முயற்சி’
- மு.க.ஸ்டாலின் # இதையே இப்ப தான் கண்டுபிடிக்கறீங்களா?ரமணா யுகிசேது மொமெண்ட்===============8 பாலியல் வழக்குகளில் பாரதிய ஜனதாவுக்கு முதலிடம் பரபரப்பான புள்ளிவிவரம்
# பாலியல் ஜனதா பார்ட்டி?==========


9 பாஜக ஆட்சியில் பொருளாதாரம் இரட்டிப்பாகும்:அமித்ஷா.
# கஷ்டம்தான் இரட்டிப்பு ஆகுது. வாழ்வாதாரம் சேதாரம் அதலபாதாளம்=============


10 ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும் - கனிமொழி
# ஆட்சிக்கு வந்தா மத்த வருமானம் இருக்கும்,இந்த வருமானம் தேவையில்லை?


===============


11 பிரதமரைப் பாராட்ட தமிழகத்தில் ஆளே இல்லை: பொன். ராதா # ஆளே இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்தீட்டு இருக்கீங்க? நீங்களும் ,தமிழிசையும்?=============12 இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை - பிரதமர் மோடி# மாசம் ஒரு நாள் இந்தியாவுல இருக்கற உங்களுக்கே இப்டின்னா வருசம் பூரா இந்தியாவுல இருக்கற நாங்க?=============


13 வாக்காளர்களுக்கு ஒரு போதும் பணம் கொடுக்க மாட்டேன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.
# கவுதமிக்கே காஸ்ட்யூம் டிசைனர் சம்பள பாக்கி நீங்க தர்லையாமே?===============


14 ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும் - கனிமொழி
இப்போதைக்கு மதுபான ஆலைகள் மூடப்படாதுனு சொல்லுங்க,எதுக்கு சுத்தி வளைச்சுக்கிட்டு?


=============

15 என்னை ஏமாற்றிய அன்வர் ராஜா எம்.பி.யின் மகனை பற்றி கவர்னரிடம் முறையிடுவேன் - RJ ரொபினா # உங்க ஜாதகத்துல வரிசையா ஏமாற்றம்தான் போல=============16 தமிழக அரசின் இணையதளம் சர்வர் பிரச்சனையால் முடங்கியது - செய்தி # தமிழக அரசே ஒரு வருசமா முடங்கித்தான் இருக்கு,இதெல்லாம் ஜுஜூபி மேட்டரு


===============17 பா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம் கனிமொழி எம்.பி. ஆவேசம் # நாட்டிலிருந்தா?ஆட்சியிலிருந்தா?பாவம் ,அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு===============18 ஸ்மார்ட் போனில் அதிக நேரத்தை செலவிடும் இந்தியர்கள் - செய்தி
# இப்டி செஞ்சா"வெரி ஸ்மார்ட் னு பாராட்டு கிடைக்காதா?


===========19 அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளைக் கூறி, ஊடகங்களுக்கு மசாலா அளிக்க வேண்டாம் - பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் # ஆப்பாயில் னு அவரே தன் கட்சிக்காரங்களை திட்றாரே?========20 தமிழக அரசு இணையதளம் 2 வது நாளாக முடக்கம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.
# ஹேக்கர்ஸ் யாராவது முடக்கி இருப்பாங்க,அதை மீட்க போராடிட்டு இருக்காங்க போல===========

0 comments: