Saturday, May 12, 2018

குஷ்பூ க்கு"அடுத்து இவருதான்"வழக்குல"அதிக ஸ்கோ

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் ரூ.600 கோடி வரை வங்கிகளில் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு.
# இதே ஏர்செல்லில் மாறன் யோக்கியம்னா இவரும் யோக்கியராத்தானே இருக்கனும்?


=============


2 மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை - குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்..
# ஆதாரத்தை அழிச்சாச்சு ,சாட்சியை கலைச்சாச்சு என அர்த்தம் கொள்க============

3 நிர்மலா தேவி ஹாஸ்பிடலில் அனுமதி # சிசிடிவி கேமரா ரிப்பேர் ஆன ஹாஸ்பிடலாப்பாத்து அட்மிட் பண்ணுவாங்க பாருங்க,அப்பதான் ஈசி==========


4 உலக அரங்கில் இந்தியா மிளிர வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம்- அமித்ஷா
# இவருக்கு உலக அளவில் ட்ரெண்ட் ஆனது தெரியாது போல


==========
5 அமெரிக்காவுக்கு செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த் - செய்தி #
அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜினு யாராவது சொல்லிட்டாங்களா?===========6 செய்தியாளர்களை மோடி அரசு அடக்குகிறது, காங்கிரஸ் அவர்களை பாதுகாக்கும் - ராகுல் காந்தி # நம்மால "கை"யோட வாக்கு வங்கியையே பாதுகாக்க முடியலையே?கை விட்டுப்போயிடுச்சே?


============


7 ஸ்டாலினால் எப்போதும் முதல்வராக முடியாது - விஜயகாந்த் # ஆளாளுக்கு"இப்டீ கலாய்ச்சுக்கிட்டே இருங்க,திடீர்னு"ஒரு"காலேஜ்"கட்டி அதுக்கு"முதல்வர் ஆகி எல்லார் முகத்துலயும் கரியைப்பூசப்போறாரு============
8 எனக்கு இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எனது தொகுதிக்குள் செல்வதில்லை −கருணாஸ் எம்.எல்.ஏ. # எல்லா எம் எல் ஏ க்களும் நோட் பண்ணீக்குங்க.தொகுதிப்பக்கம் ஏன் வர்லைனு ஒரு பய இனி கேள்வி கேட்க முடியாது

ரிசைன் பண்ணி வேற ஒருவருக்கு வழி விடலாமே?


=========


9 எச்.ராஜா மீது கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 55 வழக்கறிஞர்கள் தனித்தனியே வழக்கு - செய்தி#
குஷ்பூ க்கு"அடுத்து இவருதான்"வழக்குல"அதிக ஸ்கோர் போல


========


10 ஸ்டாலினால் எப்போதும் முதல்வராக முடியாது - விஜயகாந்த் # ஒருத்தர் ரெண்டு பேர்னா தேவல,போறவங்க ,வர்றவங்க எல்லாரும் அவரை அடிச்சா பாவம் அவர்தான் என்ன செய்வாரு?============


11 முதல்வர் பழனிசாமிக்கு தமிழக நிலை தெரியும்; முதல்வர் மாநாட்டில் தமிழக நிலை குறித்து பேசுவார் - மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை # அவருக்கு சினிமா செய்தி விளம்பரப்படத்துல சாமி வேஷம்"போடத்தெரியும் ,பிரதமர்ட்ட தமிழக உரிமைகளுக்காக ஆவேசமா"சாமியாடத்தெரியாது,ஆமாம்சாமி"போடத்தெரியும்


===========


12 ஜெயலலிதா, சசிகலாவை ஏமாற்றியவர்' தினகரன் என சசிகலா சகோதரர் திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு
# வில்லனை/வில்லியை ஏமாத்தறவர் ஹீரோவாத்தானே இருக்கமுடியும்?னு ஜனங்க நினைச்சுடப்போறாங்க===========


13 நிர்மலா தேவி விவகாரத்தில் மௌனமாக இருந்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடும் என்பதாலேயே விளக்கம் அளித்தேன் - ஆளுநர் # விளக்கம்"குடுத்த பின்னும்"வில்லங்கம் விஸ்வரூபம் எடுக்குது போல?ஒரே மீம்சா குவியுது========
14 சிறைச்சாலை என்பது நாம் தமிழர் கட்சியினருக்கு கோவிலுக்கு செல்வது போன்றது- மன்சூர்அலிகான்
// கோவில்லயே குடி இருக்கலாமே?ஏன் ஜாமீன்ல வந்தீங்க?


==========15 கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்? - ஜெயக்குமார்
கூடத்தான் ஆட்சி அதிகாரம் இருந்தும் 18 MLA க்களை காப்பாத்த முடியலை,தினகரன் பக்கம் போய்ட்டாங்க==========


16 கமல் ஒரு பூனை" - அமைச்சர் ஜெயக்குமார்
கட்சி ஆரம்பிக்குமா?னு அசால்ட்டா இருந்துட்டீங்க போல=============
17 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது -ஐகோர்ட் உத்தரவு # பிரமாதம் யுவர் ஆனர் ,இந்தாங்க 2 கிலோ கோவில் பட்டி மிக்சர்=========
18 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

பாலும் பழமும் கிடைத்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சி- ஜெயக்குமார் # உங்களுக்கெல்லாம் கள்ளிப்பாலும் ,பலாப்ழம் தோலோடவும்தான்"தரனும்============


19 பெட்ரோல், டீசல் விலை கவலையளிக்கிறது. ஆனால், வரியைக் குறைக்க முடியாது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - படி ஏறி"ஓட்டுப்பிச்சை,எடுப்பதைப்பார்த்தால் பரிதாபமா இருக்கு,ஆனா"ஓட்டுப்போட"முடியாதுனு 2019 தேர்தல் ல ஜனங்க சொல்லீட்டா?


==============20 ஜெ. பட வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் - ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பாபு முருகவேல்
# ஜட்ஜ் னா விசாரிச்சு,ஒழுக்கமா தீர்ப்பு"சொல்றது"தானே வேலை?
=============

0 comments: