Friday, May 11, 2018

125% சம்பள உயர்வு!!!இன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உயர்வு

மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தமிழர்களிடம் உண்டு.முறைப்படி கற்கா விட்டாலும் தெலுங்கு ,மலையாளம்"மொழி உரையாடல்களை ஓரளவு புரிந்து கொள்வது


===============



2 ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள FAN களெல்லாம் செம சூப்பரா இருக்கே?டேபிள் பேனா யூஸ் பண்ணிக்கலாம்னு எவனும் கழட்டிட்டுப்போகல இதுவரை,செம ஸ்ட்ராங்க்னு நினைக்கேன்


============



3 லஞ்ச் பாக்ஸ் ல சொந்த சம்சாரம் போட்டுத்தர்ற சாதம் காக்கா க்கு வைக்கற மாதிரி"கம்மி"யா இருக்கும்.அம்மா"ன்னா அமுத்தி அமுத்தி வைக்கறாங்க,2 ஆள்"சாப்பாடு தேறும் போல

============



4 மாங்கா தொக்கு ,பூண்டு ஊறுகாய் செய்வதில் விற்பன்னர்கள் காரைக்குடி செட்டியார் இனப்பெண்கள்.புளி"சாதம் ,லெமன் சாதம் செய்வதில் கும்பகோணம் பிராமணர்கள் நெ1


=============



5 அழகான கவிதை எழுதுறாங்க... தேவையில்லாம ஒரு ஃபோட்டாவ ஏன் அதோட சேர்க்குறாங்க தெரில 🚶🚶

அழகுக்கு அழகு சேர்க்க.பொண்ணுங்க கூந்தல்ல பூச்சரம் வைக்கற மாதிரி


============



6 ஒவ்வொரு நிறு"வன"த்திலும் ஒரு வன யட்சி உண்டு −ரிசப்ஷனிஸ்ட்


============


7 சமையல் கற்றுக் கொண்டாலும் என் அம்மா அளவுக்கு எனக்கு"சமைக்க வராது என நழுவுவதே பெண்களின் சிறந்த தற்காப்புக் கலை.!



===========



8 வீட்ல எடை பார்க்கும் மிஷின் இருந்தா பேட்டரி சார்ஜ் போடும் முன் செல்போன்"என்ன"எடை? சார்ஜ் ஏறிய பின் என்ன எடை?னு கூட பாத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க"போல



==============



9 ஏசி"என்பார் ,ஏர்கூலர் என்பார்
தென்னந்தோப்பில் கயிற்றுக்கட்டிலில் படுத்து"காற்று வாங்கும் வாய்ப்பு கிட்டாதார்


=============


10 பஞ்சு மிட்டாய் விற்கறவங்க ,சோன்பப்டி விற்கறவங்க ,குல்பி"ஐஸ்காரங்க இப்பவெல்லாம் அதிகம் தட்டுப்படறதில்லையே?ஜிஎஸ்டி பிரச்சனையா?


=============


11 அரசியல் விழாக்களில் எல்லாம் சிறப்பு விருந்தினரை மேடைக்கு அழைத்து வருவது, விளக்கேற்ற மெழுகுவர்த்தியை எடுத்துக் கொடுப்பது எல்லாம் எப்போதும் ஒரு பெண்தான் செய்யவேண்டுமா?
ஆண் செய்தால் வழி தெரியாதா இல்லை விளக்கு தான் எரியாதா?
பெண்தான் வீட்டின் குடும்ப விளக்கு.வீட்டுயர்வே நாட்டுயர்வு


=============



12 கோடை வெய்யில் கொடுமையிலிருந்து தப்பிக்க"வேப்ப மர நிழல் அருகே நிற்பது யாருக்கும் கசப்பதில்லை



==============



13 வெளிநாட்டில் ,வெளியூரில் இருப்பதை ஒரு கவுரவமாக சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.அவரவர் பிறந்து வாழ்ந்த ஊரில் வசிப்பதே கொடுப்பினை


===========


14 சம்சாரம் சமையல்கட்டில் பாத்திரத்தை நொங் னு வைப்பதும் ,கடல் 1 கிமீ உள் வாங்குவதும் ஒன்று"தான் .2 மே ஆபத்துக்கு அறிகுறி.எதற்கும் தயாராக நாம இருந்துக்கனும்


==============



15 சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவர்கள்
பின் சீட்டில் தன் குழந்தையுடன் பயணிப்பவர்கள்
ஒரு போதும் வாகனத்தை அதிவேகமாக இயக்க மாட்டார்கள்


=============


16 கரும்பு தின்ன கூலியா என்பது
ஆசிரம வாட்ச்மேன்
பணக்காரர்கள் வீட்டு கார்"டிரைவர்
லேடீஸ்ஹாஸ்டல் செக்யூரிட்டி
இவர்களுக்கு பொருந்தும்



========


17 ரயில்களில் பர்த் ஒதுக்குதல்"முறைப்படுத்தப்பட"வேண்டும் ,பெண்கள் ,60+ வயதானோர்",மாற்றுத்திறனாளிகளுக்கு லோயர் பர்த் ,இளைஞர்களுக்கு அப்பர்"பர்த் ,மிடில் ஏஜ் 40−59 மிடில் பர்த்;
பயணிகளுக்குள்"மாற்றித்தரும்படி"கெஞ்சுவதை தவிர்க்க


============



18 சோழமண்டலம் DBS பேங்க்,சுந்தரம்"பைனான்ஸ் ,HDFC பேங்க் இவற்றில் ஆப் ரோல் ஸ்டாபாக இருந்து ஆன் ரோல் STAFF ஆகிறவங்களுக்கு 125% சம்பள உயர்வு!!!இன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உயர்வு



==========



19 டார்கெட் அச்சீவ் பண்ணினால் கம்பெனி செலவில் அழைத்து"செல்லப்படும் பாரீன்"டூர்களுக்கு பெரும்பாலானோர்"தங்கள் பெற்றோரை உடன் அழைத்து வருவதை தவிர்க்கின்றனர்.தோழி ,காதலி ,மனைவி ,நண்பர் இப்டித்தான் தேர்வு செய்கின்றனர். சிலர்"பெற்றோரை அறிமுகப்படுத்தலையே கவுரவக்குறைச்சலா நினைக்கறாங்க


===========


20 பஸ் கட்டணத்தை விட ரயில்"கட்டணம் மிகக்குறைவு.ஆனால் மக்கள் கூட்டம் அதிகம்.இதை பேலன்ஸ்"பண்ண அதிக கூட்டம் வரும் தடங்களில் அதிக ரயில் விட வேண்டும்.லாபத்தில் இயங்கும் ரயில்கள் அதீத லாபத்தில் இயங்கும்.பேசஞ்சர் ,மெமோ ,மெயில் ,எக்ஸ்பிரஸ் எல்லாமே



============

0 comments: