Saturday, May 12, 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

Image result for iravukku aayiram kangal

ஹீரோ ஒரு கால் டாக்சி டிரைவர், ஹீரோயின் ஒரு நர்ஸ் . 2 பேரும் ஆல்ரெடி லவ்வர்ஸ் ( இப்டி காட்டிட்டா க்ரைம் கதைல காதல் எப்பிசோடை காட்டி டைம் வேஸ்ட் பண்ணத்தேவை இல்லை). நாயகியோட தோழியை நிர்வாணமா வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்றான் வில்லன். வில்லனைப்பார்க்க  அவன் வீட்டுக்குப்போகும் ஹீரோ அங்கே ஒரு பொண்ணு கொலை செய்யப்பட்டிருப்பதைப்பார்த்து ரிட்டர்ன் வர்றாரு. அதே சமயத்தில்  அதே வில்லனால் பாதிக்கப்பட்ட இன்னும் 2 பேரு அந்த வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். போலீஸ் ஹீரோவை சந்தேகபடுது. யார் கொலையாளி? என்பதை  ஒரு சுத்தல்ல்ல விட்டு திரைக்கதை அமைச்சிருக்காங்க



ஹீரோவா அருள்நிதி, கலைஞர் குடும்பத்துல இருந்து வந்தாலும் எந்த விதமான பந்தாவோ , பில்டப்போ பண்ணாத நல்ல மனிதர். இதே இவர் பொசிஷன்ல வேற யாராவது இருந்தா எனக்கு நயன் தாரா தான் நாயகியா வேணும், ஓப்பனிங் சாங் வேணும் அப்டி எல்லாம் பந்தா விட்டிருப்பாரு, அதை நிறைவேற்ற அவர் கிட்டே பணபலமும் இருக்கு , ஆனா அவர் நடிக்கற எல்லாப்படங்களுமே வித்தியாசமான கதைக்களம், ஹீரோயிசம் அதிகம் காட்டாத அடக்கி வாசிக்கும் ஹீரோ நடிப்பு  வெல்டன்.  ஆக்சன் காட்சிகளில் சைன் பண்றார் , இயக்குநர் சொல்படி நடிச்சிருக்கார்


ஹீரோயினா மகிமா நம்பியார். பெரிய ஃபிகர் ஒண்ணும் கிடையாது , ஆனாலும் ஹோம்லி லுக்.படத்தில் கிளாம்ர் காட்சிகள் ஏதும் இல்லை நல்லவேளை 


வில்லியாக பிக்பாஸ் சுஜா வருணி , பெரிய வாய்ப்பில்லை, இன்னும் இவர் பாத்திரம் நல்லா டெவலப் பண்ணி  இருகலாம், ஒரு வேளை எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கலாம்


 சாயா சிங் சின்ன கேரக்டர்ல வந்து போறார். ரைட்டரா லட்சுமி ராமகிருஷ்ணன் , இடைவேளை பிளாக் சீனுக்கு , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்கு பயன்பட்டிருக்கார்

 படத்தில் முக்கியமான இரு விஷயங்கள்  திரைக்கதை அமைத்த விதம் , பிஜிஎம் 2 ம் அருமை.. ஆனாலும் ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் வேணும்னு ஒரு லிமிட்டை தாண்டி தலை சுத்த வைக்கறாங்க

 ஜான் விஜய் காமெடியும் பண்ணிட்டு வில்லத்ஹ்டனமும் ரசிக்க வைக்கும் அளவு பண்றவர். இதிலும்  டிட்டோ

 ஆனந்தராஜ் எல்லாம் எப்டி கம்பீரமான வில்லன் ரோல் பண்ணுனவர், அவரை வடிவேல் மாதிரி காமெடி பீஸ் ஆக்கி வெச்சது கொடுமை. 


 போலீஸ் ஆஃபீசரா வர்ற அந்த  லேடி யாரு?னு தெரியல ., நல்ல கட்டைனு பெஞ்ச் ஆடியன்ஸ்ல இருந்து சில குரல்கள் எழுந்தன ( இப்டி சொல்லிட்டா பிரச்சனை இல்லை, நாமா கமெண்ட் பண்ணுன மாதிரி இருந்தா 4 பேர் 4 விதம பேசுவாங்க, 484 = 16 விதம் ஆகிடும் அப்றம் )




 எடிட்டிங் , ஒளிப்பதிவு எல்லாம் கனகச்சிதம்

Image result for mahima nambiar

நச் டயலாக்ஸ்

1  இப்டி தான் உறுத்தற மாதிரி ஒரு பொண்ணை பார்ப்பீங்களா?

உறுத்தற மாதிரி பார்க்கல,மனசுல இருத்தற மாதிரி பார்க்கேன்


இதுக்கு முன்னால நீ பொண்ணுங்களைப்பார்த்ததே இல்லையா?
பாத்திருக்கேன்,ஆனா உங்களை மாதிரி அழகான பொண்ணை பாத்ததில்ல


ஞாபக மறதி க்கு ஒரு போட்டி வெச்சா நான்தான் நெ1



Image result for suja varunee
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பங்களா வீட்ல குடி இருக்கற தம்பதி.புருசன் கொடுமைப்படுத்தற மாதிரி யும் பொண்டாட்டி பயந்து நடுங்கற மாதிரியும் காட்றாங்க.இதெல்லாம் புரியாத புதிர் ரகுவரன் காலத்தோட முடிஞ்சுது.இப்பவெல்லாம் புருசன்தான் பொண்டாட்டியைப்பாத்து பம்மறான்


2  புலன்விசாரணை,மாநகரக்காவல் கெத்து வில்லன் ஆனந்த்ராஜ் வடிவேல் பாணி காமெடி நடிப்பு ட்ரை பண்றாரு,சில இடங்களில் சிரிப்பு ,பல இடங்களில் கடுப்பு


3  வில்லன் அஜ்மல் பண்ற மிரட்டல்கள் ,பணம் பறிப்பு எல்லாம் பச்சைக்கிளி முத்துச்சரம் ல எப்பவோ வந்தாச்


Image result for suja varunee


சபாஷ் டைரக்டர்


1  ஒரு சிறுகதையோட முதல் வரிலயே கதையை ஆரம்பிச்சுடனும்னு அமரர் மேஜிக் ரைட்டர் சுஜாதா சொல்லி இருக்கார், அந்த மாதிரி படத்தோட முதல் சீனிலெயே கதை ஆரம்பிச்சுடுது


2  ஒரு கில்மா , சைபர் க்ரைம் த்ரில்லராக படத்தை எடுத்திருந்தாலும் வல்கரான காட்சியோ , பெண்கள் முகம் சுளிக்கும் வசனமோ ஒரு சீனில் கூட இல்லை, சபாஷ் இயக்குநர்


3  ஆடியன்சில் யாருக்காவது ஃபோன் கால் வந்தால் கூட அதை அட்டெண்ட் பண்ண குறுக்க வெளில போக முடியாதை அளவு ரொம்ப டைட்டான ஸ்க்ரீன் ப்ளே அமைச்சது. 10 நிமிசம் வெளில போய்ட்டு வந்தாலும் புரியாது (உள்ளேயே இருந்தாலும் சரியா சிலது புரியலைங்கறது வேற விஷயம் )


4 இயக்குநர் ராஜேஷ் குமார் , பட்டுக்கோட்டை பிரபாகர் ரசிகர் போல . திரைக்கதை அமைத்த விதம் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல் உத்தி . நாயகன் பேரு பரத் , நாயகி பேரு சுசீலா ( பிகேபி )


Image result for saya singh hot


லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


லாஜிக் மிஸ்டேக் 1 − ஒரு பெண்ணை கரெக்ட் பண்ண நல்லவன் வேஷம் போடறவன் தன் நோக்கம் நிறைவேறும் முன் தன் சுயரூபத்தைக்காட்டி அவனா மாட்டிக்குவானா?


லாஜிக் மிஸ்டேக்2 − பொண்ணுங்களை ஏமாத்தி வீடியோ க்ளிப் எடுத்து பென்ட்ரைவ்ல ஏத்தி வெச்சிருக்கும் வில்லன் ஒரு சேப்டிக்கு 1+1 காப்பி எடுத்து வெச்சுக்க மாட்டாரா?அந்தக்கால ரஜினி பில்லா க்ளைமாக்ஸ் டைரி பைட் மாதிரி பென்ட்ரைவ்க்கு அடிச்சுக்கறது ஏனோ?


3  நாயகியை நிர்வாணமா வீடியோ எடுக்கும் வில்லன் ஏன் மயக்க நிலைல இருக்கும் நாயகியை வாய்பிருந்தும் ரேப்பலை?


4  லாஜிக் மிஸ்டேக் 4 −நாயகியை போலீஸ் ஆபிசர் அடிச்சு விசாரிக்கறாரு.சட்டப்படி பெண் போலீஸ் மூலமா தான் விசாரிக்கனும்


லாஜிக் மிஸடேக் 5 − பலர் ரகசிய க்ளிப்கள் அப்லோடின சிஸ்டத்துக்கு பாஸ்வோர்டு லாக் போடாம வில்லி அனாமத்தா விட்டு வைக்குமா?


6 க்ளைமாக்ஸ்ல ஒரு டயலாக், ஹீரோ சொல்றாரு “ என் ஆளை நிர்வாணமா வீடியோ எடுத்த விவகாரம் அவளுக்கு தெரிய வேண்டாம்.  அதெப்டி அவருக்கு தெரியாம இருக்கும். ஒரு சமயம் நாயகியை வில்லன் ஸ்ப்ரே அடிச்சு மயங்க வைக்கறார். நினைவு வந்ததும் வில்லன் மிரட்டி அனுப்பறார். அப்போ நாயகிக்கு தன் உடைகளை ஒருவன் களைந்து பின் அணிவித்த விஷயம் தெரியாம இருக்குமா? ஒரு சந்தேகம் கூடவா வராது


7  வில்லன் கோ படத்துல இயற்கையான நடிப்பை வழங்கினவர் இதுல செயற்கையா சிரிக்கறாரு, எடுபடலை


8  க்ளைமாக்சில் லட்சுமி ராம கிருஷ்ணன் கொலை செய்யப்படுவது , அப்போ க்ளோசப்ல அவர் புருசன் ஃபோட்டோவைக்காட்டுவது தேவை இல்லாத எக்ஸ்ட்ரா குழப்படிகள், ஆடுகளம் நரேன் பாத்திரைப்படைப்பிலும் சில தெளிவுகள் இல்லை

Image result for saya singh hot


சி.பி கமெண்ட்- இரவுக்கு 1000 கண்கள் − ராஜேஷ்குமார் நாவல் போல 3 லேயர்களில் கதை சொல்லும் உத்தி அருமை.ஆனால் ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கு மட்டுமே புரியும்.விகடன் 42 !ரேட்டிங் 3 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= 3.5 / 5



ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்

0 comments: