Tuesday, May 15, 2018

பெண் புத்தி பின் புத்தி னு ஏன்"சொல்றாங்க?

தலைவரே!உங்க கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாமே சினிமா ல வசனம் எழுதி சம்பாதிச்சதுனு உடன்பிறப்புகள் அடிச்சு விடறாங்க.அது உண்மையா?அதுவும் நான் எழுதித்தந்த வசனம்தான்.
=============


2 டியர்,எனக்கு சிந்த்தடிக் புடவை நல்லாருக்குமா? காட்டன் புடவையா?சிந்தடிக்

ஆனா,பக் வீட் ஆண்ட்டி காட்டன் தான் னு சொல்லுதே?
அப்போ நாளை அந்த ஆண்ட்டியை யே துவைக்க,அயர்ன் பண்ண சொல்லிடு,அப்பதான் கஷ்டம் தெரியும்===============3 மாமா,தைரியமா நீங்க பொண்ணு தரலாம் ,மாப்ளை ரொம்ப ஓப்பன் டைப்,எதையும் மறைக்க மாட்டார்நிஜமாவா?ஆதாரம்?

எப்போ தண்ணி அடிச்சாலும் FB ல ஸ்டேட்டஸ் ஷேர் பண்ணுவார்,எத்தனை பொண்ணுங்க கிட்ட 143 சொன்னாலும் 3 மாசத்துல கழட்டிவிட்டுடுவார்===============4 குருவே!பொண்ணுங்க எந்த டிரஸ் போட்டா நல்லது?சுடிதார் ,சல்வார் கம்மீஸ் ,துப்பட்டா போட்டா அவங்களுக்கு நல்லது

சேலை கட்னா நமக்கு நல்லது
=============5 திருக்குறளை படித்து அதன்படி செயல்படுங்கள்நீங்க மொத படிச்சிருக்கீங்களா தலைவரே?

நான்தான் முத வகுப்பே படிக்கலையே?
============6 ஏம்மா மின்னல்?என்ன இட்லி இது?பணியாரத்துல பாதி கூட இல்லை?இட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கணும் னீங்களே!அதான் அந்த"சைஸ்

================7 மேடம்,மெத்தை"வீட்டானை"ஏன்"அன்"பாலோ பண்ணீட்டீங்க?அவரை பாலோ"பண்ணீட்டு போனா அஞ்சாவது மெத்தை வரை போறாரு.எனக்கு"2 வது"மெத்தை லயே மூச்சு வாங்குது

==========8 மிஸ் ,ஐ லவ் யூசாரி,எனக்குப்பிடிக்கல

அப்டியா?பாண்டிச்சேரி ட்வீட்டப்ல பைனலா ரிசல்ட் சொல்லுங்க

ஏன்?

இப்பவெல்லாம் நீதிபதியோட மனசே தமிழ்நாட்ல ஒரு மாதிரி ,பாண்டிச்சேரி ல வேற மாதிரி னு மனசு"மாறுது
==============9 கழக ஆட்சியிலே த்ரிஷா பீல்டுக்கு வந்தார் ,பின் ஆட்சி மாறியது,ஆனால் காட்சி மாறவில்லை.இன்னும் அவருக்கு திருமணமே ஆகவில்லை,.நாங்கள்"ஆட்சிக்கு வந்தால் இது போன்ற சமூகத்துக்கு முக்கியமான பிரச்சனைகளை சரி செய்வோம்===============10 18+ Tweets போடுறவங்க

அத RT பண்றவங்க யாராவது இருந்தா தயவுசெஞ்சு என்னை அன் பாலோ பண்ணிடுங்க


ஓஹோ,நான் டெய்லி 20 ட்வீட் போடுவேன்,அவ்ளவ் ஏன்,இங்கே இருக்கற எல்லாருமே டெய்லி 18 ட்வீட்க்கு மேலே போடறவங்கதான்
=============11 டியர்.பங்கஷனுக்கு சேலை கட்டிட்டுவரவா?சுடி போட்டுட்டு வரவா?சுடி

ஏன்?அதுதான் எனக்கு அழகா?
அதெல்லாம் இல்லை,சேலை"கட்டிட்டு வா ன்னா. இந்த saree fleets சரியா flat பண்ணி விடுனு என்னை தொந்தரவு பண்ணுவ
===============
12 மேடம்.அந்த டீம் ஜெயிச்சா சொந்த டிபி வைக்கறதா வாக்கு கொடுத்தீங்களே?ஏன் இன்னும் வைக்கலை?சொந்த"டிபி வைக்கறேன்னுதானே சொன்னேன்?எப்போ வைக்கறேன்?னு சொல்லலையே?


=============13 டியர்,ஆணுக்கு

குழந்தை மனசுனு
நம்பி ஏமாந்துட்டேன்

குழந்தை குடுக்கற மனசு னு"நம்பவும்
=========
14 தலைவரே!5 பவுன் ல ஒட்டியாணம் செஞ்சு கொண்டு வந்துட்டேன்.இதை யார்கிட்ட தரனும்?


வைகாசி பொறந்தாச்சு படத்துல பிரசாந்த்க்கு ஜோடியா நடிச்ச நடிகை காவேரி க்கு தந்துடுங்க

எதுக்கு?

காவேரிக்காக நாம எதுவுமே செய்யலைங்கற அவப்பெயர் இனி வராதில்ல?


===========15 இந்த ட்விட்டர்லயே நா குண்டு என் ட்விட் குண்டுன்னுட்டு இருக்குறது நான் மட்டும்தான் போல😖


எப்டி?
எல்லாரும் 140 லிமிட்ல முடிச்சிடறாங்க,நான் மட்டும் தான் 280 லிமிட்ல ட்வீட்றேன்


============
16 கோவிலில் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி தருபவனே சிறந்த கணவனாகவும் காதலனாகவும் இருந்திட முடியும்னு பொண்ணுங்க சொல்றாங்களே அது நிஜமா?


சினிமா தியேட்டர் இடைவேளைல கேண்ட்டீன் போய் இவங்களுக்கு ஐஸ்க்ரீம்,பப்ஸ்,பாப்கார்ன் வாங்கிட்டு வர்றதும் பாவப்பட்ட இதே ஆண் இனம் தான்==============17 இந்தியா முழுவதும் அனைத்து கிராமங்களுக்கான மின்சார இணைப்பை 97% காங் ஆட்சில தந்துட்டோம்,ஆனா இப்போ 100% பாஜக ஆட்சிலனு பெருமை பேசிக்கறாங்க


மேடம்.கிரிக்கெட் மேட்ச்ல யார் எவ்ளவ் ரன் எடுத்தாங்க அப்டீங்கறதைவிட பினிஷிங்க் பண்றப்ப வின்னிங் ஷாட் அடிச்சவங்களுக்கு தான் பேரு


===============


18 குருவே!திருமணமானவங்களுக்கு மட்டும்.

இன்னுமோர் வாய்ப்பு கிடைத்தால் இப்போதிருக்கும் துணையையே தெரிந்தெடுப்பீர்களா?ங்கற கருத்துக்கணிப்புல ஆமாம்னு"பலர் வாக்களித்திருக்காங்களே?

அதுவும் துணைக்கு பயந்துதான்.நம்மாளுங்க கலைஞர் மேடைப்பேச்சுக்கு கை தட்டிட்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடறவங்க


=============19 நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது.. கொந்தளித்த தமிழிசை! "பூரா பாஜக"தீபாவளி"கொண்டாடினாலும் தமிழ்நாட்ல,நமக்கு பொங்கல்"தாண்க்கோவ்


============20 பெண் புத்தி பின் புத்தி னு ஏன்"சொல்றாங்க?


பின்னால (எதிர்காலத்துல)நடக்கறதை முன்கூட்டியே கணிச்சுடுவாப்டி

அதெல்லாமில்ல.சேலையோ ,சுடியோ எந்த டிரஸ் போட்டாலும் சேப்டி பின் குத்திக்கறாங்களே?


=============


0 comments: