Thursday, May 10, 2018

சைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்"பண்ணக்கூடாதா?

1  யுவர் ஆனர் விசாரணை தனிப்படை 7 குழுவும் நிர்மலாதேவியைக்கூட்டிட்டு சிம்லா ஹாங்காங் ,சிங்கப்பூர் போகனும்

எதுக்கு?
10 வருச கதையை ஒரே நாள்ல சொல்ல முடியாதாம்.ஒரு வருசம் டூர் போய்ட்டு வந்துடறோம்

=============2 தூய்மை இந்தியா திட்டத்துக்கு எதிரா எச்சில் துப்பும் போராட்டம்"பண்ணா தேசிய பாதுகாப்பு சட்டப்படி 6 மாசம் களி சாப்டனுமாம்"தலைவரே!

அய்யய்யோ.மண்டபத்துல மத்தியானம் வரை வெச்சிருந்து பிரியாணி போட்டு அனுப்பிடுவாங்கனு"நினைச்சேன்================3 சினிமா தியேட்டருக்கு போறப்ப"வைகாசபொறந்தாச்சு"ஹீரோயின் நடிகை காவேரி யை கூட்டிட்டுப்போகனுமா?அது ஏன்?

தெரில , னு டேக் போட்டிருக்காங்களே?==============4 டாக்டர் ,நான் ஒரு ராஜாகூட சண்டை போடறமாதிரி நைட் கனவு வந்துச்சு.. அநேகமா அது அலெக்ஸாண்டரோ இல்ல செங்கிஸ்கானாத்தான் இருக்கனும்.. இந்த கனவு நல்லதா கெட்டதா??

நல்லதுதான்.ஹெச் ராஜா கூட சண்டை போட்டா தான் கெட்டது==============5 மேடம்.அந்த"டைரக்டர்"உங்களை அவர்"வீட்டு கிச்சன் ரூம்க்கு"வரச்சொன்னார்

எதுக்கு?
பெட்ரூம்க்கு"கூப்ட்டார்னு நீங்க புகார் தர முடியாதில்ல?=============6 டியர்.இந்த தோசைக்கல்லுல சுடற"முத தோசையை நம்ம வீட்ல யாருமே சாப்பிட மாட்டேங்கறாங்க ,நீங்களாவது சாப்பிடுங்களேன்

சரி,கொண்டா,நீ சுடற எல்லா தோசையும் முத தோசை மாதிரி தான் இருக்கு============


7 👈நான் பார்ப்பதற்கு நடிகர் விஜய் போல தோற்றம் அளிப்பதாக இருப்பதாக ஒரு தோழி கூறினாள் !
😌😌😌
அப்டியா?உங்க தோழி அடிச்சு விடுதா?நீங்க அடிச்சு விடறீங்களா?தெரில.ஆனா இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கு தெரியாம பார்த்துக்குங்க
அவங்க அடிச்சு விட்றப்போறாங்க============


8 தோசைக்கல்ல உள்ள தோசையை இடது பக்கமா திருப்பி போடனுமா?
வலது பக்கமா திருப்பி போடனுமா?
வலது கையால தோசைக்கரண்டியைப்பிடிச்சிருந்தா இடதுபக்கமா வும் ,இடது கையால தோ.க பிடிச்சிருந்தா வலது பக்கமாவும் திருப்பிப்போடனும்


=============9 சும்மா மேரேஜ் பண்ணிட்டு செட்டில் ஆகிடுனு சொல்லவேண்டியது😠
கல்யாணம் பண்ணிட்டா எப்படி பாஸ் செட்டில் ஆக முடியும்😏 வேலைக்கு போனா தான செட்டில் ஆகமுடியும்..!?
சும்மா இருக்கறவனுக்கு"எவன் பொண்ணு தர்றான்?சொந்த வீடு,கவர்மெண்ட் வேலை னு 1008 கண்டிசன் போடறாங்க==============10 சார் ,உங்க மன்னிப்புக்கடிதம் பார்த்தேன் ,இன்னொரு மன்னிப்பும் கேட்கனும் நீங்க

எதுக்கு?
எக்ஸ் எம்,எல் ஏ வான நீங்க பழைய MLA லெட்டர் பேடு பயன்படுத்தறது சட்டப்படி"தப்பு.


============


11 ஜவுளிக்கடையில்

சார் ,இன்னைக்கு"நியூஸ் பாத்தீங்களா?
சேலை எடுக்கத்தானே வந்தீங்க"மேடம்?
ஆமா,முதல்ல நான் கேட்ட கேள்விக்கு"பதில்"சொல்லுங்க
ஆமா,பாத்தேன்
நிர்மலாதேவியை"போலீஸ்"அரெஸ்ட்"பண்றப்போ கட்டி இருந்த டிசைன் சேலை வேணும்


===============12 நம்ம கோயில் விசேஷத்துக்கு "வில்லு"ப்பாட்டு"க்கு ரெடி"பண்ணிடலாமா?

அது பழைய படமாச்சே?
லேட்டஸ்ட்டா வந்த பைரவா ,தெறி பாட்டு"போட்ருவோமா?


============13 உங்களுக்குப்பிடிச்ச"கோயில் எது?

இளையராஜா ரசிகன் = இதயக்கோயில்
சிம்பு ரசிகன் = கோவில்
விஜய் ரசிகன் = திருமலை ,மதுர
அஜித் ரசிகன் = திருப்பதி
அர்ஜூன் ரசிகன் = திருவண்ணாமலை
ரஜினி ரசிகன் = அண்ணாமலை


=============14 ஜட்ஜ் = ஏம்மா 22 வயசான நீ 15 வயசான பையன் அதுவும் 10 வது"படிக்கற பையனை கடத்திட்டுப்போய் குடும்பம் நடத்தி இருக்கியே?இது தப்பில்லையா?

லேடி= 7 வது படிக்கும்போதே கூப்ட்டனுங்.அவன்தான் இப்ப வந்தா 7 1/2 ஆகிடும் 3 வருசம் போகட்டும்னான்


============
15 சைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்"பண்ணக்கூடாதா?இதென்ன புது உருட்டா இருக்கு?

டக்னு"நம்மை உதா"சீன"ப்படுத்திடுவாங்க


================16 மேடம் ,ஆட்சிக்கு வந்தா உங்க மதுபான ஆலைகளை மூடிடுவீங்கனு சொன்னீங்க
ஆமா அப்றம் வருமானத்துக்கு என்ன பண்ணுவீங்க?
மடத்தனமா பேசாதய்யா,ஆட்சிக்கு வந்துட்டா அதுல வர்ற வருமானமே கோடிக்கணக்குல இருக்குமில்ல?==============


17 நம்மை ஏளனமாக பார்ப்பவரை அடிக்கடி சந்திக்க வேண்டும்..
அப்போது தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.
அதுல ஒரு சிக்கல் இருக்கு,அடிக்கடி சந்திச்சு லவ் ஆகிட்டா?


=============18 நான் டெய்லி 100 கிமீ சைக்கிள்"ல போறேன்
இதெல்லாம் நடக்கற காரியமா?
இல்ல,பெடல் பண்ற காரியம்


===============


19 இன்ஸ்பெக்டர் ,எதுக்காக என்னை கைது பண்றீங்க?
யாராவது அவர் மேல புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்னு சொன்னோமே?அது இது தான்


===============
20 குருவே!நேர்மை இல்லாதவனுக்குத்தான் சாமியும் சாமி பயமும் தேவைப் படுது. னு சொல்லப்படுதே அது உண்மையா?
அப்டி இல்ல் பக்தி இருக்கறவன் கிட்ட குறைந்த பட்ச நேர்மையும் ,ஓரளவாவது மனசாட்சிக்கு பயப்படும் தன்மையும் இருக்கும்.பகுத்தறிவுப்பகலவர்களைப்பார்த்தா பல சம்சாரம்,ஊரான் சொத்து திருடறது


==============


0 comments: