Saturday, May 05, 2018

அம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போடச்சொன்னாரா?

1  எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது , என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் # கொள்ளுப்பேரன் எடுத்தவங்க ஜொள்ளுப்பார்ட்டியா இருக்கமாட்டாங்கனு எதுனா விதி இருக்கா?


===========2 சந்தானம் விசாரணை கமிஷனால் போலீஸ் விசாரணையில் பாதிப்பு இல்லை−ஆளுநர் # அந்த சந்தானம் IAS ட்விட்டர் அக்கவுண்ட்ல அவர் பாலோயர்ஸ் 75% பாஜக VIPங்களா இருக்காங்களே,அதான் டவுட்டா இருக்கு


============3 எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது-ஆளுநர் # பறவையை விடுங்க,ஒரு பாவை அணுக முடியும்தானே?அதுக்கு பதில் சொல்லுங்க=============4 செய்தியாளர் சந்திப்பில் பெண் செய்தியாளரை கன்னத்தில் தட்டி சென்றார் பன்வாரி # பப்ளிக் ப்ளேசில் பெண்ணின் பிரைவேட் ப்ளேசை தட்டுவது தவறில்லையா?கேட்டா அவருக்கு தாத்தா வயசு,பேத்தி முறைம்பாங்க============


5 மான் வேட்டை வழக்கில்
5 ஆண்டு சிறை தண்டனை
பெற்ற சல்மான்கான் வெளிநாடு செல்ல
அனுமதி
# 5 வருசம் கழிச்சுத்தான் வருவாராம்


===============6 ஆகாயத்திலேயே பறக்கும் பிரதமர் தேர்தல் வரும்போது கீழே இறங்கி வந்துதான் ஆக வேண்டும். - ஸ்டாலின் # ஆகாயத்தாமரை"யா இருந்தா"நல்லதுக்கில்ல,நல்லதில்ல ங்கறாரா?=============7 மோடி பங்கேற்கும் கூட்டத்தில்
செருப்பு அணிய தடை
-செய்தி
# மோடி மேடை கோயில் மாதிரினு சொல்ல வர்றாங்க போல=============8 பிரதமர் வரும்போது தமிழகம் இருண்ட கண்டமா தெரியனும் : ஸ்டாலின் # அதுக்கு"வாய்ப்பில்லையே?நம்ம,ஆட்சின்னா கூட கரண்ட் அடிக்கடி கட் ஆகும்


===========9 வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்
,அப்போ சீருடை,அணிந்த"காவலர்கள் கர்ப்பிணிப்பெண்ணை"தாக்கியது ?


=============10 ஆர்.கே நகரில் ஏற்பட்ட நிலை திமுகவுக்கு அனைத்து தொகுதிகளிலும் ஏற்படும்- எச்.ராஜா# நோட்டா விடம் மல்லுக்கட்றவங்க இப்போ திமுக வுடன் ஏன் மல்லுக்கட்றாங்க?============


11 தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் ரஜினியின் மாஸ்டர் ப்ளான் - தமிழருவி மணியன் # ஓஹோ!அதுவும் ரஜினியோட பிளான் இல்ல?ரஜினியோட"மாஸ்டர்"மோடியோட பிளான்?==========12 தேர்தல் முறைகேடுகளை தடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை: தேர்தல் ஆணையம் - அப்டியே அதிகாரம் இல்லைன்னாலும்"இப்டி ஓப்பனாவா சொல்வது?இனி இன்னும் அதிகமா முறைகேடு பண்ணுவாங்களே?


=============13 மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், திமுகவை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் - பொன்.ராதா # காவேரி மேலான்மை விஷயத்தில் பாஜக வையும் மக்கள் மறக்க மாட்டார்கள்


===========14 ஒரு போதும் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்த மாட்டேன்- ஜெ.தீபா# சரி,தூங்குங்க,தேர்தல் வர்றப்ப எழுப்பி விடறோம்


==============15 காங்கிரசை குறை கூற மட்டுமே மோடி வாயை திறக்கிறார்- குஷ்பு கடும் தாக்கு
# இல்லையே! டெய்லி 3 வேளை சாப்பிடும்போது"திறக்கறாரே?


============16 கவர்னர் மாளிகைக்கு மெத்தை, தலையணை வாங்கியதில் ரூ.10 கோடி மோசடி - 2 பேர் கைது # அடேங்கப்பா ,மோசடியே 10 கோடின்னா மொத்த செலவு 100 கோடி இருக்கும்போல


=========17 நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா? - சீமான் # அதானே?நமக்கு ரஜினியை மேடைல தாக்கவே டைம் சரியா இருக்கு


=============


18 தமிழக மக்களோடு நாங்கள் இருக்கிறோம் - தமிழிசை #
மேலாண்மை வாரியம் அமைக்காம முதுகில் குத்தத்தானே?


============19 அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையால்தான் ஏழைக்குடும்பத்தில் பிறந்த நான் பிரதமராக முடிந்தது.....மோடி # அம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போடச்சொன்னாரா?


==========20 காவிரி மேலாண்மை வாரியத்திற்காக காலவரையற்ற போராட்டம்.- ஜெ.தீபா.
# ஓஹோ ,எப்போ போராடப்போறீங்க?
அதான் கால வரையறை அற்ற னு சொல்லிட்டனே?எப்போ ?னு எனக்கே தெரியாது


===========

0 comments: