Sunday, May 13, 2018

நடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்

Image result for mahanathi movie 2018எம் ஜி ஆர் வாழ்ந்த காலத்தில் அவர் கரெக்ட் பண்ண முடியாத நாயகிகள் ரெண்டெ பேரு , 1 பானுமதி , 2 சாவித்ரி அப்பெர்ப்பட்ட சாவி3 யையே  ஜெமினிகணேசன் கரெக்ட் பண்ணி  அவரை ஏமாத்தி அவரோட சாவுக்கும் காரணமா இருந்திருக்கார் என்ற மறு பக்கத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் படம் இது

நடிகையர் திலகம் சாவி3 யோட உண்மைக்கதை தான் படம், இது மகாநதி எனும் டைட்டில்ல தெலுங்குல ரிலீஸ் ஆச்சு. அதனோட தமிழ் டப்பிங் தான்  இது


நாயகியா கீர்த்தி சுரேஷ், இவரோட கேரியரில் இது வரை வந்ததில் பெஸ்ட் பர்ஃபார்மென்ஸ் இதுதான், பல சாவி3 படங்களின் டிவிடி போட்டுப்பார்த்து ஹோம் ஒர்க் பண்ணி நல்லா நடிச்சிருக்காரு, கமல் , விக்ரம், விஜய் சேதுபதி இவங்க கிட்டே பார்க்கற டெடிகேஷனை இந்தப்படத்தில நாம இவர் கிட்டே பார்க்க முடியுது


நாயகனா சாரி வில்லனா ஜெமினி கணேசன், நம்ம தானைத்தலைவராவது சம்சாரங்க சம்மதத்தோடதான் அடுத்தடுத்து  பாகம் 1 பாகம்  2  பாகம் 3 -னு பல படங்களை எடுத்தாரு, ஆனா ஜெமினி அவருக்கு ஒரு படி மேலெ போய் அவருக்குத்தெரியாம இவரு , இவருக்கு தெரியாம இன்னொருத்தருனு பலரை கரெக்ட் பண்ணி இருக்காரு, இவரை எல்லாம் புடிச்சு ஜெயில்ல போட்டிருக்கனும். இந்த வில்லத்தனம் மிக்க ரோலை துல்கர்  பண்ணி இருக்காரு


கீர்த்தி சுரேஷ் பண்ண அளவுல பாதி கூட துல்கர் பண்ணலை, ஏன்னா ஜெமினியோட பாடி லேங்குவேஜ் , டிரஸ்ஸிங் இது எல்லாம் மேட்ச் ஆக அவர் ஏதும் மெனக்கெடலை. அடிக்கடி நான்சென்ஸ் அப்டினு ஜெமினி சொல்வாராம், அதை மட்டும் அப்பப்ப கடமைக்கு சொல்றாரு.


சமந்தா  ரிப்போர்ட்டரா  வர்றாரு , அவர் தான் சாவி3 வாழ்க்கையை கட்டுரையா தொகுப்பவர். இவருடைய கேரக்டரை  திக்கு வாய் மாதிரி காட்டி இருக்க வேண்டிய அழசியம் என்னவோ? 


பிரகாஷ் ராஜ் பட தயாரிப்பாளராக கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கார் , குட்


 கீர்த்தி சுரெஷின் ஆடை வடிவமைப்பாளரா  3 பேரு மெகா உழைப்பை கொட்டி இருக்காங்க , சபாஷ்/


 மிக்கி ஜெ மேயர் தான் இசை. பின்னணீ இசையில் அந்தக்கால இசையை அந்தந்த  கால  கட்டத்துக்கு ஏற்ற வாறு போட்டிருந்தாலும் பிஜிஎம் மேஜிக் இல்லை. இதுவே இளையராஜா இந்தப்படத்துக்கு இசை அமைச்சிருந்தா இது ஒரு மைல் கல் படமா அவரோட இசைல அமைஞ்சிருக்கும்






 படத்தோட இயக்குநர் மார்க்கெட்டிங்க்க்காக  தமிழ்ல எதும் மெனக்கெடலை  என்பது தியேட்டருக்கு வரும் ஆடியன்சின் எண்ணிக்கை சொல்லுது. பத்திரிக்கை விமர்சனங்கள் வந்து  மக்கள் கூட்டம் வரும் முன் அடுத்த படம் ஆக்ரமிச்சிடும்

Image result for mahanathi movie 2018

நச் டயலாக்ஸ்


1  ஒரு நிருபருக்கான செய்தி சம்பவம் நடந்த வீட்ல கிடைக்காது,எதிர் வீட்லயோ ,பக் வீட்லயோதான் கிடைக்கும்



கற்பனை ங்கறது வான்ல இருந்து வர்ற மழை மாதிரி,நாம குடை எடுத்துட்டுப்போறப்ப வராது,குடையை மறந்துட்டுப்போறப்பதான் கொட்டோ கொட்டுனு கொட்டும்


திறமைசாலிங்க பிடிவாதக்காரரா இருப்பாங்க,அது தப்பில்ல (dialogue edited)


4 நாட்டியம்ஆடச்சொன்னா நாட்டுக்கோழி மாதிரி ஆடறா



உங்க பொண்ணு சினிமா ல நடிக்க 1 வருசம் காத்திருக்கனும்

இப்ப இலை போட்டு அடுத்த வருசம் பாயாசம் கறீங்க


கல்யாணம் நான் கேட்காமயே நடந்தது
ஆனா காதல் நான் கேட்டும் கிடைக்கல


நீ கண்ட கனவை என் கண்ல வெச்சிருந்தேன்,அதை சிதைச்சுட்ட



8  திறமை வீட்டுக்குள்ளேயே இருந்தா வாய்ப்பு காட்டுக்குள்ளயா நிற்கும்?


9  பெண்களின் அழுகைக்கான காரணம் இந்த பாருக்கே (உலகு)தெரியும்,ஆண்களின் அழுகைக்கான காரணம் BAR க்கு தான் தெரியும்


10  எதைக்கொண்டாடறதா இருந்தாலும் குடிகாரன் சரக்கு
அடிச்சுதான் கொண்டாடுவான்


11 நம்ம சரீரத்துல(உடல்வாகு)ஒரு மாற்றம் வந்ததுன்னா நம்ம வாழ்க்கைல ஏதோ மாற்றம் வரப்போறதா அர்த்தம்


12  நான் ஹாஸ்பிடல்ல இருந்தாதான் நீங்க என்னைப்பாக்க வருவீங்கனு முன்னமே தெரிஞ்சிருந்தா எப்பவோ இங்கே வந்திருப்பேன்


13 சின்ன வயசிலிருந்தே ஒரு பழக்கம்,யார் கிட்டயும் எதுக்காகவும் உதவி கேட்டு நின்னதில்ல


14 இது கலி காலம்.சோறு போடற கை யோட கை விரல் மோதிரத்தை உருவிடுவாங்க




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  சாவித்திரி ஓப்பனிங்க் சீன் ஒயிட் & பிளாக் ல காட்டி இருக்கலாம்



சாவித்திரியாக கீர்த்தியின் நடிப்பு கனகச்சிதம்,ஆனா சாவித்திரியின் கம்பீரம்"கொஞ்சம் மைனஸ் ,அதுக்குப்பதிலா கொஞ்சம் குழந்தைத்தனத்தை சேர்த்து சரிக்கட்றார்


3  ஜெமினி கணேசன் காதல் மன்னன் னு தப்பா சித்தரிச்சிருக்காங்க.ஆனா முதல் மனைவி உயிரோட ,ஆரோக்யமா உடன் இருந்தப்பவே சாவித்திரியை பிரெய்ன் வாஷ் பண்ணி ஏமாத்தி மோசடி மன்னன் ஆக வாழ்ந்திருக்காரு


4  ஜெமினிகணேசனை "சாம்பார்" னு கிண்டல் பண்ணுவாங்களே அது பத்தி படத்துல எதும் காணோம்.


5  சாவித்திரியின் ஒயிட் & பிளாக் பாடல் காட்சிகள் அபாரம்,ஆனா ரசிகர்களிடம் பிரமாதமான வரவேற்பு இல்ல,இதே போல் ஒரு சம்பவம் பல வருடம் முன் மிஸ்டர் பாரத் ல ரஜினி சத்யராஜ் போட்டி பாட்டு "என்னம்மா கண்ணு சவுக்யமா?" க்கு நிகழ்ந்தது.குமுதம் விமர்சனத்தில் குறிப்பு வந்தது









சபாஷ் டைரக்டர்


1   சாவி3 யின் வாழ்க்கை வரலாறு அவர் பாடி லேங்குவேஜ் , அவர் காலகட்டத்தில் நடந்த சின்னசின்ன சம்பவங்கள்னு ரொம்பவே மெனெக்கெட்டு  திரைக்கதை அமைச்சிருக்காரு


2   ஆர்ட் டைரக்சன் , காஸ்ட்யூம் டிசைனிங்  என டெக்னிகல் அம்சங்கள் எல்லாம் பிரமாதம்



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1 − சொந்தப்படம் எடுக்க பணம் பத்தாம கடன் வாங்குனதா ஒரு நியூஸ்,அடுத்த ஷாட்லயே இன்கம்டாக்ஸ் ரெய்ட்ல வீட்ல நகை ,பணம்னு கைப்பற்றல்.இவ்ளோ பணம் கேஷா வீட்ல வெச்ட்டு ஏன் கந்துவட்டிக்கு வெளில பணம் வாங்கனும்?



2  சாவித்திரி பலருக்கு தான தர்மம் பண்ணுனதா , ஏழைகளுக்கு உதவுனதா வசனங்கள் வருது , ஆனா அவர் தன் சொந்தக்காரர்கள் பேரிலோ தன்னை வளர்த்தவர்கள் பேரிலோ சொத்துக்கள் வாங்காமல் தோழி பேர்ல  ஏ கப்பட்ட சொத்து வாங்கி ஏமாந்தது ஏன் என்பதற்கு பதில் இல்லை


3  பிளாக் மணி , பினாமி சொத்து என சட்டமீறல் பண்ணி இருக்கும் இவர்  எப்டி  அவ்ளோ கடன் பட்டார் என்பதற்கு  விளக்கம் இல்லை


4  ஜெமினி கணேசன் காதல் மன்னன் என்பது தெரிந்தும் அவரை எப்படி நம்பி எமாந்தார் என்பதும் தெரில


5  ஜெமினி என்னதான் காதல் மன்னனா இருந்தாலும் தன் வீட்டில் மனைவி இல்லாத டைமில் இன்னொரு பெண்ணை கில்மா பண்றார் என்பது நம்பற மாதிரி இல்லை.  இந்த மாதிரி “கலைஞர்”கள் எல்லாம் ஹோட்டல் , அவுட்டர் ப்ளேஸ், அல்லது அந்த பெண்ணின் வீட்டில் தான் கில்மா பண்ணீக்குவாங்க என்பது வரலாறு



6  சிவாஜி பற்றிய பெரிய குறிப்புகள் எதும் படத்தில் இல்லை. ஒரெ சீனில் வசனம் வருது.,



சி.பி கமெண்ட்  -நடிகையர் திலகம் −சாவி3 யின் உண்மைக்கதை,ஏ செண்ட்டர் ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் ,முன் பாதி ஸ்லோ ,பின் பாதி நீளம் அதிகம்.கீர்த்தியின் நடிப்பு ,திரைக்கதை +
சமந்தா போர்ஷன் , BGM -
விகடன் 41 ( தெலுங்கு டப் என்பதால் விமர்சனம் போடறது டவுட்) ரேட்டிங் 3/ 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)-41


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)- 4/5



பெருந்துறை தேவிசித்ரா




=========










0 comments: