Sunday, May 20, 2018

வாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.

வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் போல அதிமுக கட்சியும், ஆட்சியும் இருக்கின்றன - முதல்வர் பழனிசாமி
#, வாகன ஓட்டுனர் பிரதமர் மோடி னு மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் ஓட்டீட்டு இருக்காங்களே?


==========


2 நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மக்கள் பாஜக வை ஆதரிக்க வேண்டும் - ஸ்மிரிதி இராணி # நாடு கிடக்குது.நாட்டு மக்களை காப்பாத்த நாங்க யாருக்கு வாக்களிக்கனும்னு சொல்லிடுங்க============


3 செய்தி: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும்.- மோடி. # விவசாயிக்கு ஏதுங்க வருமானம்?வரவுக்கு செலவுக்கும் சரியா இருக்கே?ஜீரோ தான்


அதான் .ஜீரோ ×2 = ஜீரோ=========


4 ஜெயலலிதா சொத்துக்கள் விரைவில் முடக்க நடவடிக்கை , முடக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.10000 கோடி # கோடிக்கணக்குல கொள்ளை அடிக்கற எல்லா தலைவர்களுக்கும் ஜெ ,சசிகலா,நடராஜன் வாழ்க்கை ஒரு பாடம்.


================


5 சித்தராமையா 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரம் அணிந்துள்ளார், அவர் ஊழல் வாதி என்பதை இதுவே காட்டுகிறது: அமித் ஷா
# என்னங்க அநியாயமா இருக்கு?எங்க தானைத்தலைவர்"கூடத்தான் வெறும் மஞ்ச துண்டு தான் போட்டிருக்காரு,அதுக்காக அவரு சொத்து சேர்க்காதவர்,நேர்மையானவர்னு சொல்லிடுவீங்களா?


============6 கோவில்பட்டி மக்கள் கடலை மிட்டாய் போல இனிப்பானவர்கள் -CM EPS # இதே துண்டுச்சீட்டை நம்ம செயலு எப்டி படிப்பார்?


கடலைப்பட்டி மக்கள் கோவில் மிட்டாய் போல் இனிப்பவர்கள்


===========


7 வதந்தி பரப்பினால் ஓர் ஆண்டு ஜெயில்-போலிஸ் எச்சரிக்கை
க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.SV சேகர் கணக்கா இனி மறைஞ்சு வாழனும்

===========


8 ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். # 10 டூ 5 ஒர்க்கிங் டைம் சம்பளம் 40,000 டூ 50,000,இது பத்தலை?அவனவன் 8am to 9 pm கடுமையா உழைச்சு 10,000 தான் வாங்கறான்.ஏசி ல உக்காந்து வேலை பாக்கறாங்க.பத்தலையாம்


===========

9 ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் மீது சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது. # பேமிலி ஜெயில் னு புதுசா 1 உருவாக்கனும் போல.


===========


10 ஜெயலலிதாவை விட சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
# ஜெ மேல 65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு,அதை விட சிறப்புன்னா இவரு ஒரு 130 கோடி வழக்குல மாட்டுவாரா?=============


11 1  தமிழகத்தில், 50 ஆண்டுகளாக, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள், ஆட்சியில் இருந்தனர். அவர்கள் இல்லாததால், வெற்றிடம் இருப்பது போன்ற மாயை இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் புதிய தலைவர்கள் உருவாவர் -  அ.தி.மு.க., -- எம்.பி., மைத்ரேயன்: 

# அப்போ மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் இப்போ கட்சில இல்லைனு ஒத்துக்கறீங்க?================12  :எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை, தோப்பூரில் கட்டாயம் அமையும். அப்படி அமையாவிட்டால், பதவியை ராஜினாமா செய்யும் என் முடிவில், எந்த மாற்றமும் இல்லை  -  தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் # 2021 ஏப்ரல் லயா?=============13   :ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், பிரதமர் கனவு காண முழு உரிமை உள்ளது-   சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்  # யாருக்குத்தான் அரசு செலவில் உலகம் சுற்றும் வாலிபன் ஆக ஆசை இருக்காது?


================
14  இந்நாட்டில், மடாதிபதியாக இருப்பதற்கும், வருவதற்கும் கூட, சிறந்த ஞானம், அனுபவம், நிர்வாகத்திறமை தேவைப்படுகிறது. ஆனால், விவேகமுள்ள நபர் தான், பிரதமராக வர வேண்டும் என்பதில்லை. - விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலர் ரவிக்குமார்  # "விவேகம் “ சினிமாலயும் எடுபடல, அரசியல்லயும் எடுபடாதுங்கறாரா?============
15  பிரதமராக வருவதற்கு, எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை. பார்லிமென்டில் பெரும்பான்மை இருந்தாலே போதும்-.விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலர் ரவிக்குமார் #   அப்போ நீங்க பெரும்பான்மையை நிரூபிச்சு பிரதமர் ஆகலாமில்ல? யார் தடுத்தா?

=================


16   தான் வளைத்து வளைத்து திட்டும் நரேந்திர மோடி வந்தபோது கூட, வரவேற்க வீட்டு வாசலில் சென்று நின்றார் ஸ்டாலின். ஆனால், நான் கருணாநிதியை பார்ப்பதை மட்டும் தடுப்பது ஏன்?-  விஜயகாந்த் #  ஏற்கனவே அவரு வை கோ வைக்கண்டு மிரண்டு இருக்காரு, நீங்களும் அங்கே போய்ட்டா ம ந கூ கதை ஆகிடும்னு நினைக்கறாரோ?


=============17    . நாங்கள், பா.ஜ.,வுக்கு வலிமை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் - ஹெச் ராஜா # வலி தான் மிச்சம் போல


==============18    ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளாரே தவிர, இன்னும் கட்சியை துவங்கவில்லை. அவரது அரசியல் பாதை, ஆன்மிக அரசியலாக இருக்கும் என, அவர் கூறியதன் மூலம், அது நாத்திகவாதத்திற்கும், இந்து விரோத அரசியலுக்கும் எதிரானதாக இருக்கும் என்ற வகையில், அதை வரவேற்பதாக தெரிவித்தேன் -எச்.ராஜா  # ராஜா + ராஜாதிராஜா கூட்டணி எற்படுமா?


=============


19   இன்றுவரை, எந்த ஒரு பதவிக்காகவும், யார் வீட்டுக் கதவையும் நான் தட்டியது இல்லை.- தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் #  அதிமுக ல இருக்கீங்க, யார் கால்லயும் விழுந்ததே இல்லைன்னா யாருங்க நம்புவாங்க?=================


20 தலைவர்கள் யாரும், திட்டமிட்டு உருவாக்கப்படுவது இல்லை, வளர்க்கப்படுவது இல்லை. அது, காலத்தின் தேவையைப் பொறுத்து தான் உருவாகும். குடும்ப வாரிசை நியமிப்பது போல், கட்சிக்கு வாரிசை தலைவர்கள் நியமிக்க முடியாது. இரண்டாம் நிலை தலைவர்கள், தேவை வரும்போது வெளிப்படுவர்    -  திருமாவளவன்  # அண்ணன் தம் கட்றது உதயநிதி ஸ்டாலின் அரசியல் எண்ட்ரிக்கு போல: 


============

0 comments: