Thursday, May 03, 2018

லஞ்ச்"பிரேக்"

நகைச்சுவை நடிகராகிவிட்டார் கமல் - அமைச்சர் செல்லூர் ராஜூ
# நாமளே"ஒரு"காமெடி பீஸ்!


============


2 காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.. பொன் ராதா # கலைஞரா இருந்தா"தசாவதாரமே போடுவாரு=============


3 வைகை ஆற்றில் எருமை மாட்டை கழுவினால் கூட கூட்டம் கூடும் - செல்லூர் ராஜூ # நோட் பண்ணுங்கப்பா.இனி"கட்சி"கூட்டத்துக்கு குவாட்டர் பிரியாணி செலவு தேவை இல்லை.மேடைல எருமை மாட்டை குளிப்பாட்னா"போதும்


============4 மோடியைப்போல்
தமிழுக்கு முக்கியத்துவம்
அளித்தவர்கள் யாரும் இல்லை
- பொன்.ராதா
தமிழிசை க்கு முக்கியத்துவம் குடுத்தாரு.தமிழிசையை சுருக்கமா தமிழு னு"கூப்பிடுவோம்============


5 சீமான் இளைஞர்களை
தவறாக வழி நடத்துகிறார்
-எச்.ராஜா
# இந்தியாவையே மோடி"தவறா வழி நடத்தறார்னு"ஜனங்க"பேசிக்கறாங்களே?


============


6 தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராடுவது கெட்ட பழக்கம்-தமிழிசை
# சாதாரணமா கிடைக்க வேண்டிய உரிமைகளையே போராடி பெற வைக்கும் நிலைக்கு"தள்ளியது யார் குற்றம்?==============7 கமல்ஹாசனை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக கூடப்போட முடியாது -ஹெச். ராஜா
# இவரு எப்போ இருந்து எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச் சேர்மேன் ஆனாரு?============


8 நான் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகளால் தாங்க முடியவில்லை: மோடி
# பேங்க்ல"லோன் வாங்குன"தொழில் அதிபருங்க எல்லாம் இந்தியால தங்க முடியலைனு பாரீன் எஸ் ஆகிடறாங்க,அந்த"நஷ்டத்தைக்கூடதான் பேங்க்குகளால தாங்க முடியல


===============


9 கறுப்பு மங்களகரமானது - ஹெச்.ராஜா #
# அப்போ இனி"கல்யாணமுகூர்த்தப்புடவை கறுப்புப்பட்டு சேலை தயாரிச்சடலாமா?முகத்துக்கு மஞ்சளுக்குப்பதில் பொண்ணுங்க ஐ டெக்ஸ் மை பூசிக்கலாமா?


=============10 தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்பு கொடி காட்டினால் அதிமுகவினர் பச்சை கோடி காட்டுவோம் - ராஜேந்திர பாலாஜி
// நெட்டிசன்கள் பச்சை பச்சையா திட்டுவாங்களே பரவால்லியா?


=============11 இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: உத்திரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. சகோதரர் கைது
# பாதிக்கப்பட்ட"பொண்ணோட"பெற்றோரை,பத்திரமா பாத்துக்குங்க.சமீபத்துலதான் ஒரு"அப்பாவை"போலீஸ்"போட்டுத்தள்ளுச்சு=============12 ஐ.பி.எல் போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் என சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். |போலீஸ்"ஸ்டேஷன்ல"கொள்ளை அடிப்போர்"கவனத்துக்கு============13 இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன் ஆதாரம் இருக்கு - ஸ்ரீ ரெட்டி
// இப்போ அதுக்கு"நிவாரணம்"வேணுமாக்கும்?=============


14 | அவசரத்தில் அம்ப்யரை அழைத்து செல்ல மறந்தது ஐபிஎல் நிர்வாகம்...
அம்பயர் தங்கியுள்ள விடுதிக்கு கார் அனுப்பபட்டுள்ளது...
# அம்ப்பயர் அரண்டு"போய்"எங்காவது ஒளிஞ்சிக்கிட்டு இருப்பாருனு நினைக்கறேன்============15 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10க்கு விற்பனை; பாட்டில்கள் விற்பனை இல்லை 15 ரூபாயாம்",அண்ணாந்து குடிச்சாதான் 10 ரூபாயாம்,அவ்ளோ கஷ்டப்பட்டு அதை பாக்கப்போகாட்டி என்ன?===============


16 கல்லூரிக்கு செல்வது போல் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு சென்று வருகிறார்-டி.ஆர்# ஸ்கூல்க்குப்போற மாதிரி சிம்பு ஷூட்டிங்க்கு போகாம கட் அடிக்கற மாதிரி இவரும் வெளிநடப்பு னு கட் அடிச்சுடறாரு===============


17 தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்துவருகிறது” - அமைச்சர் காமராஜ்
தமிழகத்திற்கு 54000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 17500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்குகிறது",உங்களையும் கே சி பழனிச்சாமி மாதிரி கட்சியை விட்டு நீக்கிடப்போறாங்க


=========18 என்னை பற்றி குறை கூறுபவர்களுக்கு, நான் யார் என்று தேர்தல் நேரத்தில் காண்பிப்பேன் - விழுப்புரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேட்டி.
# கொட்டுவேன் னு படிச்ட்டேன்.காட்டுவேன் னா? சரி சரி==============19 விடுதலைப்புலிகள் பெயரைச்சொல்லி ஏமாற்றி வருகிறார் சீமான்...
வைகோ ஆவேசம்..# விடுதலைப்புலிகளுக்கு யாரும் இன்னும் பேடண்ட்"ரைட்ஸ்"எடுக்கல நல்ல வேளை


============20 மக்களுக்கு உழைக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க..! அமைச்சர் செங்கோட்டையன்
# அதே மாதிரி"உண்ணாவிரதப்போராட்டத்துல லஞ்ச்"பிரேக்"எடுத்துக்கறதும் நம்ம கட்சி தான்===========

0 comments: