Friday, May 04, 2018

இவரு"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபின்தான் சந்திப்பாராம்

நித்யானந்தாவின் பீடத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ள மனைவி மற்றும் மகனை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு # ஆசிரமங்களில் இருக்கற எல்லா பெண்களையும் ரிலீஸ் பண்ணி ஆசிரமத்துக்கு சீல் வைக்கனும்.


============


2 அம்பேத்கர் கண்ட கனவுகளை நாடு முழுவதும் இன்று நனவாக்கி வருபவர் பிரதமர் மோடி - தமிழிசை # அத்வானி கண்ட பிரதமர் கனவை வேணா நனவாக்கி தான் பிரதமர் ஆகிட்டாரு,அவரை கழட்டி விட்டுட்டாரு


==========


3 e-வே பில் அமல்படுத்தியதால் சரக்கு பரிமாற்றத்தில் கடும் சரிவு # GST பாதிப்பை விட 2 மடங்கு தொழில் நஷ்டம் இதில் ஆகும்.குறிப்பா தமிழ்நாடு,குஜராத் க்கு


=========


4 ரூ.621 கோடி மோசடி வழக்கில் யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் மீது வழக்கு # லோன் கொடுத்த வருசம் 2015.இதை மோசடினு கண்டுபிடிக்கவே 3 வருசம் ஆகி இருக்கு.முத 3 ட்யூ கட்டாதப்பவே விழிச்சிருக்க வேணாமா?


=========


5 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் டீல் பேசவும், லஞ்சம்
கொடுக்கவும் முயன்றது; நான் ஏற்க மறுத்துவிட்டேன் -பொன்.ராதா # நீங்க நேர்மையானவர்னா அப்பவே இதை சொல்லி இருக்கலாமே?இப்போ பிரச்சனை பெருசான பின் ஏன்?


============6 2016ம் ஆண்டு நடராஜன் அழைத்தே நான் அதிமுக கூட்டணிக்கு சென்றேன் - வைகோ
# நமக்கு சொந்தமா யோசிச்சு முடிவெடுக்கத்தெரியாதா? எடுப்பார் கைப்பிள்ளையா?நிஜமாவே கைப்புள்ளயா?


===========7 ரேசன் கடைகளில்
விலையில்லா அரிசி நகரங்களுக்கு 10 கிலோ, கிராமங்களுக்கு 5 கிலோ வழங்கப்படுகிறது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் # கிராமத்துல இருக்கறவங்களுக்கு சரியா பசிக்கறதில்லை போல


============8 கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல் # பாஜக,+தினகரன் ஏதோ டீலிங் நடக்குது போல============


9 காவிரி போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உளப்பூர்வமான மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் -
* கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க சீமான் வலியுறுத்தல் # நேத்துதான் "எங்களுக்கு இதுல சம்பந்தமே இல்லைன்னாரு

=============
10 தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா கண்டனம் # கொடி பறக்குது படத்துக்கு எப்டியாவது கால்ஷீட் குடுங்கனு ஒரு மானஸ்தர் ரஜினி வீட்டுக்கு போய் கெஞ்சுனாராம் ,அவரை பார்த்தீங்களா? காரியம் ஆகனும்னா "கறுப்பு ராஜகுமாரன்".தேவையில்லைன்னா கறுப்பு ஆடு?


==============11 ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் பார்க்கவில்லை - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் # சசிகலா கால்ல விழவே நமக்கு டைம் சரியா இருந்தது===========12 பேராசிரியர் நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் ,விரைவில் "ஷாக்"கிங் நியூஸ் வரும்


==============13 கோச்சடையான் படத்துக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த லதா ரஜினி க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
# ஜட்ஜ் கமல் ரசிகரா இருப்பாரோ?னு யாரும் இன்னும் கிளம்பலையா?============


14 உயர்கல்வித்துறையில் தமிழகம் சராசரியைவிட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது: அமைச்சர் கே.பி. அன்பழகன் - # நிர்மலா தேவியை சொல்றார் போல


===========15 வட மாநிலங்களில் ATM சேவை முடங்கியது - செய்தி
# நம்மாளுங்க குறிப்பிட்ட தொகையை ரெடிகேஷாக வைத்துக்கொள்ளவும்.எதுக்கும் உதவும்


===========16 நிர்மலாதேவிக்கு அமைக்கப்பட்ட விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்
# போராட்டம் பண்றவன் பூரா புரோக்கரா இருக்கும்.மாட்டிக்கக்கூடாதில்ல


===========17 ஆந்திராவில் இருந்து பெங்களூருவிற்கு தனியார் பேருந்தில்
கர்நாடக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 120 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு.# இனி அடுத்த"டைம் அரசுப்பேருந்துல எடுத்துட்டுப்போவாங்க


===========


18 ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் - ராஜ்பவன்.
# இவரு"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபின்தான் சந்திப்பாராம்


=============19 நான் குற்றமற்றவன்
என் மீது பழி சுமத்தாதீர்கள்
CBI விசாரணை தேவையில்லை!
−கவர்னர் திட்டவட்டம் # எந்த குற்றவாளி ஆரம்பகட்டத்துல குற்றத்தை ஒத்துக்கிட்டு இருக்கான்?==========20 பேராசிரியர் நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் # நாங்க கூடத்தான் பாக்கலை.யாரோ ஜெசி யாம் ,மாத்தி பரப்பி விட்டுட்டாங்க


============

0 comments: