Sunday, May 01, 2016

ராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைன்னா

எனக்குத் தெரிஞ்சி திமுகதான் நல்ல கட்சி! - கண்டுபிடித்தார் இமான் அண்ணாச்சி!! # ”எனக்கு தெரிஞ்சு” ட்விஸ்ட்ட்டே அது ல தான்


=============

2 டிக்கெட் இன்றி ரெயிலில் பயணம் செய்துவிட்டு ‘மல்லையாவை பிடியுங்கள், பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன்’ என்றவர் கைது # மனசுல கலைஞர்னு நினப்பு


==========

3 மே 23ம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பார் - திருமாவளவன் #,அப்போ எலக்சன் நடத்தத்தேவை இல்ல?


==========

4 திமுகவால் மட்டும் தான் ஊழலை ஒழிக்க முடியும்-கனிமொழி
# ஒளிக்க முடியும்.ஆனா ஒழிக்க முடியாது

=========

5 தேமுதிக-மநகூ வால்் திமுகவுக்கு பாதிப்பு் இல்லை -ஸ்டாலின் # எனக்குப்பேயைக்கண்டா பயம் ஏதும் இல்ல.ஆனா நடுராத்ரி சுடுகாட்டுக்குப்போகமாட்டேன்

==========

6 அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தது
சமத்துவ மக்கள் கட்சி.! - சரத்குமார் அறிவிப்பு.. தாமரையோட வாழ்க்கை?

============

7 நாங்கள் பாண்டவர்கள் தர்மரிடம் எதிரிகளை நெருங்க விடமாட்டோம் -வைகோ, # நல்லவேளை.இதை எல்லாம் கேட்க தர்மர் உயிரோட இல்ல


==========

8

மது பழக்கம் உள்ளவர்வர்கள் கட்சியை விட்டு விலகலாம்.. - வைகோ # தலைவா! நம்ம கட்சில இருக்கறதே கொஞ்ச நஞ்சம் பேரு, அவங்களையும் விரட்டிட்டா எப்டி?


=================

9 நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு # அப்போ திமுக பக்கம் நோ பார்க்”கிங்க்”?

=================

10 

நான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் # அநியாய விலை   சொல்லி இருப்பாரோ என்னவோ?


=============


11 

மோடி கை காட்டினால்தான் விஜயகாந்த்தே முதல்வர்'- தமிழிசை  # சோனியா மேடம் தானே “கை” காட்ட முடியும்?மோடி ”தாமரை” தானே காட்டனும்?================

12 

ம ந கூ  வில் சேர்ந்தது விஜய்காந்த் அவருடைய அரசியல் வரலாற்றில் செய்த  மிகப்பெரிய பிழை - தமிழிசை #  எப்டியோ உங்க வாயாலயே கேப்டன் ஒரு அரசியல் வரலாறுன்னு சொல்லீட்டீங்க===============


13 

அறிவாலயத்தினுள் காலில் விழுந்தால் தி.மு.க, பார்க்கும் இடத்திலெல்லாம் காலில் விழுந்தால் அதிமுக - சீமான் # தலை மேல மடேர்னு 1 போட்டா  தேமுதிக?


=================


14  

கேரளாவில் ஓட்டு போட்டால்  குலுக்கலில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு!- கேரள தேர்தல் கமிசன் அறிவிப்பு # இதுவும் மறைமுக ஊழல் தான், தப்புதான்==================


15  தமிழகத்தில்யார்ஆட்சிஅமைத்தாலும் BJPபங்குஇருக்கும் - SVசேகர்  # யார் CMஆனாலும் பங்கு ( பங்காளி)னு உரிமையா தோள் மேல கை போட்டு பாராட்டுவீங்க?


=================


16 சட்டசபை தேர்தலில் ஜெவுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி: ராமதாஸ் # ராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைன்னா ராம்தாஸ்னு வெச்சுடலாம்

===============

17 மக்கள் நல கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என அழைக்கப்படும் - வைகோ # அப்போ கேப்டன் நல்லாருந்தா மக்கள் நல்லாருப்பாங்கன்னு அர்த்தமா?


==============

18  

கட்சியை வளர்க்க அதிமுகவுடன் கூட்டணி..-சரத்#   உங்க வயிறை வளர்க்கன்னு சொல்லுங்க


=================

19 எங்க கூட்டணியை அறிவிக்க இன்னும் காலமிருக்கு..- ஜிகே வாசன் # உங்களுக்கு அரசியல் ஜி கே பத்தலைண்ணே, வெத்தலை பாக்கெல்லாம் எதிர்பார்க்காதீங்க

=============


20  இது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.- சீமான் # இவரோட பெரிய அக்கப்”போர்”

===============

0 comments: