Tuesday, May 24, 2016

தலைவர் வித் சொப்பன சுந்தரி , தலைவர் வித் அவுட் சொப்பன சுந்தரி

தலைவரே! நம்மை எதிர்க்கறகட்சியை எல்லாம் பணத்தால அடிக்கறீங்களே? ஏது இவ்ளோ பணம்?
ஊழல்லசம்பாதிக்கும்போதே 5% இப்டி 3ம்படை வேலைக்கு ஒதுக்கிடுவேன்


============

2 தலைவரே! அமலா பால் சம்பளம் 6 லட்சம் குறைக்கப்படுமா?

ஆமா, ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபா குறைக்கறோம்ல?
அமலாபால் இப்போ நடிக்கறதே இல்லையே?


================


3 நாங்கள் சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்

என்ன சொன்னீங்க? செஞ்சீங்க?

ஊழலை ஒளிப்போம்னு சொன்னோமே?


=====================


4  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கரண்ட் பில்லை நீங்க கட்டவே தேவை இல்லை

ஏன் தலைவரே? நீங்களே கட்டிடுவீங்களா?

கரண்ட் இருந்தாத்தானே கரண்ட் பில் வரும்?


====================

5 தலைவரே! உங்க தேர்தல் அறிக்கைல இலவசம் என்ற சொல்லே இல்லைய்ஏ , ஆச்சரியமா இருக்கே?திருந்தீட்டீங்களா?

தமிழன் அதை ( இரட்டை) இலை வசம்னு படிச்சுடறான், சகுனம் சரி இல்ல====================

6 தலைவரே! மாணவர்களுக்கு 4 ஜி திட்டம் கொண்டு வருவது சமுதாய முன்னேற்றத்துக்காகவா?

இல்லை, 2 ஜி ஊழல்ல அடிச்ச அளவு 2 மடங்கு அடிக்கலாமில்ல?


================

9 தலைவரே! கல்விக் கடன் எப்டி ரத்தாகும் ...அது மத்திய அரசு கட்டுப்பாட்டில் தானே வரும் ?

“கை” ல இருந்து கொடுப்போம்

உங்க கைல இருந்தா?

நாம என்னைக்கு கைக்காசு நட்டப்பட்டிருக்கோம்?


==================

10 தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தா எல்லா லோன் -ம் தள்ளுபடியா? எப்டி?

விஜய் மல்லைய்யா ஃபார்முலாதான். எல்லாரையும் ஃபாரீன் அனுப்பிடலாம்னு ஐடியா==================


11 தலைவரே! டான்னு 9 3/4 க்கு உங்க உரையை முடிச்சிடறீங்களே?

டாஸ்மாக் 10 க்கு க்ளோஸ் பண்ணிடுவாங்க இல்ல?

================

12 கட்சிகளின் குடும்ப ஆதிக்கத்தை நாங்க எதிர்க்கிறோம்’’ 

நாங்கன்னா யாரு?

நான், என் சம்சாரம், என் மச்சினன்

====================


13 தலைவரே! அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவேன்னு 2/9/1999 அப்போ சொன்னீங்க,இன்னும் ஏன் நிறைவேற்றலை?

நீ அதிமுக ஆளா?


===============


14 அவருக்கு கட்சியே நடத்தத்தெரியல.சந்திரகுமார் தனியா பிரிஞ்சுட்டாரே?

கொஞ்சம் திரும்பிப்பாருங்க தலைவரே! அழகிரி கண்ணுக்குத்தெரியறாரா?.


=================


15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மியான்மர் தீவை மீட்போம்

எதுக்கு?

சும்மா எதுனா அடிச்சு விடறதுதான், ஜனங்க அதை எல்லாம் பார்க்க மாட்டாங்க


===================


16 தலைவரே! 15 விஜய் பட டிவிடி உங்க வீட்ல இருக்கே?

இதைத்தான்யா 1500 கோடி வாங்கிட்டதா சொல்லிட்டு இருக்காங்க ( 15* 100 கோடி =1500 கோடி)


===================


17  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளச்சாராயம், கள்ளக்காதல், ஒழிப்போம்,,மேலும்
தலைவரே! நம்ம 7 வது சின்ன வீடு சொப்பன சுந்தரி கிட்டெ இருந்து கால்
===================


18சலுகை விலையில் கைப்பேசி வழங்கப்படும்னு சொன்னீங்களே? எப்டி சாத்தியம் தலைவரே?


தங்கர் பச்சான் -ன் அம்மா வின் கைப்பேசி டிவிடியை 10 ரூபாய்க்கு கொடுப்போம்


===============

19 தலைவரே! கச்சத்தீவை எப்போ மீட்பீங்க?

 5 வருசத்துக்கு ஒரு வாட்டி ( தடவை)====================


20 தலைவரே! மக்களோட எல்லா கஷ்டத்தையும் எந்த தலைவரும் போக்க மாட்டேங்கறாங்களே அது ஏன்?

மக்கள் கஷ்டம் போக்கிட்டா எங்களுக்குத்தான்யா நஷ்டம்


=====================

0 comments: