Wednesday, May 18, 2016

நான் இன்னைக்கு தலைக்குக்குளிக்கறேன்னு ஒரு பொண்ணு FB ல போட்ட ஸ்டேட்டஸ்


நமக்கு வர்ற பாலோயர்ஸ் பூரா ஆம்பளைங்களா இருக்கு.அன் பாலோயர்ஸ் பூரா பொண்ணுங்களா இருக்கு.என்ன குமாரசாமி கணக்கோ?=============2 எதிர் ல தட்டுப்படும் எல்லா ஜோடியும் அன்யோன்யமா கை கோர்த்துட்டுப்போறாங்களே.புருசன் பொண்டாட்டி சண்டையே வராதா?நல்லா இருங்கடே==============3 சதுரங்கத்தில் வெள்ளை காயின்


கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி

அரசியலில் வேட்பாளர் பட்டியல் முதலில் வெளியிடும் அணி - வெற்றி வாய்ப்பு அதிகம்


==============


4 இந்த பொண்ணு J Jenisha mary ‏@jenisha_mary அம்மா கிட்டே பேசும்போது

அம்மா
சமையல் 
 ரெடி 
ஆகிடுச்சா?
 வரலாமா?

- கவிதாயினி ஜெனி


===============


தோல்விகள் முகத்தில் கரி பூசினால்.வெற்றிகள் முகத்தில் கொஞ்சம் கறி பூசினால் எல்லாவற்றையும் மறைக்க மஞ்சள் பூசி குளிக்கவும்==========6 குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சொம்பு அடிப்பவர்கள் தேர்தலில் அக்கட்சி படு கேவலமா தோற்ற பின் எந்த முகத்தை வெச்ட்டு வெளில வருவாங்களோ பாவம்
=============
7 நீங்க பன்ற காமெடி மொக்கையா இருக்குன்னு அவர் சொல்றாரே?
1 நான் எந்த பொண்ணுங்க கிட்டயும் டெய்லி திட்டு வாங்கல

2 பேக் ஐடி லவ் பெய்லியர் ஆள் இல்ல


==========

8 சந்திர குமார் சந்தி சிரிக்க வைத்த குமார் ஆகிட்டாரே -கேப்டன் மைன்ட் வாய்ஸ்


===========


9 தானைத்தலைவர் சாணக்கியத்தனம் னு நினைச்சுட்டு பண்ணிட்டு இருப்பது எல்லாமே சால்னாத்தனம் தனம் தான்


============

10 தானைத்தலைவர் மைன்ட் வாய்ஸ் = நமக்குக்கிடைக்காத பழம் யாருக்கும் கிடைக்கக்கூடாது.அதுவும் நம் எதிரிக்கு கிடைச்சுடவே கூடாது


===========


11 அன்பே மச்சினி!
ஆயில் இழுக்காத ஆனால் ஆளை சுண்டி இழுக்கும் ஆனியன் பஜ்ஜி நீ!

================


12 காபி,டீ மூளை நரம்புகளை பாதிக்கும், நொறுக்ஸ் தொப்பையை ஏற்படுத்தும், வாக்கிங்க் போறது வீணாகிடும். பழங்கள் தான் நல்லது

==================

13 உன் பார்வை மட்டும் போதும்னு டயலாக் விடற லவ்வர்ஸை அன்ன ஆகாரம் இல்லாம ஒரு ரூம்ல 10 நாள் அடைச்சு வெச்சுடனும் எதிர் எதிர் சேர்ல கட்டிப்போட்டு


=================


14 ஒரு மாற்றம் வரட்டும் என மக்கள் மாற்றி ஒட்டு போட்டாலும்  இரு திராவிடக்கட்சிகளும்  அவர்களை விலைக்கு வாங்கி கொல்லைப்பக்கமாக ஜெயிப்பார்கள் என்பது கண்கூடு================
15 கேப்டன் கட்சியை பண பலத்தால் உடைப்பதால் பலவீனம்  அடையப்போவது பண பலக்கட்சியே! மக்கள் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் பண பல கட்சிக்கு தராமல் போகும் நிலையும் ஏற்படலாம்
=================
16 எதிரி கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கலாம், தொலை தூரத்தில் இருக்கலாம், ஆனால் துரோகி மட்டும் உன் அருகிலிருந்தேதான் உருவாவான்


=================


17 நயன் தாரா  ஃபோட்டோ பார்த்து ட்டு நெட் தமிழன்  பெண் ட்வீட்டர்கிட்டே அது நீங்களா?ன்னு கேட்கறான். அப்பாவி மாதிரி நடிக்கக்கூடத்தெரியலியே


===================


18  போராளிக்கு தோல்வி வரும், ஆனால் போராட்டங்கள் எப்போதும் தோற்காது================


19 நான் இன்னைக்கு தலைக்குக்குளிக்கறேன்னு ஒரு பொண்ணு FB ல போட்ட ஸ்டேட்டஸ்க்கு 1860 லைக்ஸ். புருசன் பார்த்தா இன்னையோட தலை முழுகிடுவான்னு நினைக்கேன்


===============

20 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் ஃபோன் பண்ணா எங்கே இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?ன்னு தான் கேட்கறாங்க. யோசிச்சு யோசிச்சு பொய் சொல்லவேண்டியதா இருக்கு===================

0 comments: