Sunday, May 22, 2016

சாணக்கியன் VS சத்ரியன்

சமத்துவ மக்கள் கட்சியின் துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஆர்.கே. காளிதாஸ் நீக்கப்பப்பட்டுள்ளார் # கிடைச்ச ஒரு சீட்ல பாதி சீட் கேட்டுட்டாரா?===============2 ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு அறிமுகம்...

உங்கள் வீடியோக்களை லைவ்வாக பதிவிடலாம்.!! # இனி கிளுகிளுப்பான பதிவுகள் வரும் வரும் வரூம்

============

3  இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட ஜி கே வாசன் மறுப்பு # ஏம்மா, எல்லாரையும் சரத்குமார் மாதிரின்னு நினைச்ட்டீங்களா?

==============


4  தமாகவுக்கு தமிழிசை சவுந்திரராஜன் அழைப்பு! # தாமரைப்பூவுக்கு வாசமும் இல்லை,(கம்மி) ஜி கே வாசனும் இல்லை==============


5  திமுகவுடன் சேர்ந்து ஊழலை ஒழிப்பேன்- சந்திரகுமார் # மெட்ராஸ் ஐ வந்த ஆள் கண்ணை உத்துப்பார்த்தே அதை குணம் ஆக்கிடுவேன்னு சொல்ற மாதிரி இருக்கு, தொத்திக்கும்


================


6 'பனாமா பேப்பர்ஸ்' விவகாரத்தில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக உறங்கமுடியாது -அருண்ஜெட்லி # பதுக்கின பணம் காணாம போக ஏற்பாடு பண்ணிட்டீங்களா?


===============

7 கூட்டணி பேரம் குறித்து வைகோவின் கருத்துக்கு விளக்கம் தேவை -கங்கை அமரன்# காங்கிரஸ் ல சேர்ந்துட்டாரா கங்”கை”அமரன்?


============

8 அனைத்து தேர்தல்களிலும் வெல்லும்படி பிஜேபியை மாற்றவேண்டும் -அமித்ஷா# குஷ்பூ நக்மா மாதிரி நீங்களும் புது நடிகைகளை களம் இறக்குங்க


==============


9 பனாமா லீக்ஸ் விவகாரத்தில் எனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது-அமிதாப்# அமிதாப் பச்சன் க்கு பதிலா அமிதாப் பாட்சா-ன்னு போட்டுட்டாங்களா?

===============


10 விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை கமிஷனரிடம் புகார் # சத்ரியன் டைரக்டர் கே சுபாஷே கம்முனு இருக்கார், இவங்களுக்கு என்ன?

================

11 5 நிமிட பேச்சு; 26 முறை 'அம்மா'என கூறி அ.தி.மு.க., வினரை மிஞ்சிய தனியரசு # 300 நொடியில் 150 தடவை அம்மா-ன்னு சொல்லலாமே? யாராவது அடிமைங்க ட்ரை பண்ணவும்


===================


12 ராகுலுக்கு கற்றுக்கொள்வதில் வேகம் இல்லை: அருண் ஜெட்லி #  ஸ்லோ & ஸ்டெடி வின் த ரேஸ் அப்டினு நினைக்கறாரோ?


===============

13 மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகளுக்கு மோடி அழைப்பு # ஞானிகளாலயே முடியல, விஞ்ஞானிகள் என்ன செய்வாங்க?


==================

14    தே.மு.தி.க., வால் நான் நாசமாய் போனதுதான் மிச்சம்:-சந்திரகுமார்  # நேசமணி பொன்னையா  நெசமா  நீ நாசமா தான் போனியா? திமுக வுக்கு போனியா?==================

15  வாசனின் த.மா.கா., கட்சியின் நிலை திரிசங்கு: அ.தி.மு.க., - தி.மு.க., கதவடைப்பு # கேப்டன்  வீட்டுக்கதவை தட்டுங்க, முரசு கொட்டுங்க

======================


16  விஜயகாந்தை தோற்கடிக்க, அவர் பெயரை கொண்ட, 10 பேரை சுயேச்சை வேட்பாளர்களாக நிறுத்த, தி.மு.க., முடிவு  #ஓஹோ, இதுக்குப்பேருதான் சாணக்கியத்தனமா?சத்ரியன் கிட்டே பலிக்காது==================


17  விஜயகாந்த் வீட்டில் நள்ளிரவு யாகம்: முதல்வர் பதவிக்காக  # ராத்திரி நேரத்துப்பூஜையில்-னு அன்னைக்கே ஆபாவாணன் பாட்டு மனோஜ்கியான் இசைல போட்டுட்டாரே?


===================

18 'அ.தி.மு.க., தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் சுயநலமான கட்சிகள்' -அமைச்சர் வளர்மதி #  உங்களுக்கு அறிவோ அறிவுங்க, வளர்ந்துட்டே இருக்கு


==================

19  தி.மு.க.,  தே.மு.தி.க.,பா.ஜ., போன்ற கட்சிகள், டெபாசிட் வாங்க முடியாது-கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு:# நீங்க கட்சித்தலைமையிடம் பாராட்டுப்பத்திரம் வாங்கிடுவீங்க?


==================


20   தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள கனிமொழியும், மு.க.அழகிரியும், தே.மு.தி.க.,வுக்கு வருவர் என்று எதிர்பார்க்கிறேன்-
தே.மு.தி.க., பொருளாளர், ஏ.ஆர்.இளங்கோவன்-- #  சந்திரகுமார் & கோ வை அவங்க இழுத்ததுக்கு தானிக்கு தீனி?


===================

0 comments: