Saturday, May 28, 2016

விஜய் மல்லய்யா பேங்க் எக்சாம் எழுத முடியாதா?

'நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெ ஆட்சி': பா.ஜ., தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு # அப்போ ஆட்சியை அப்பவே கலைக்காம ஏன் கூட்டணி பேரம் பேசுனீங்க?


==============

2 த.மா.கா., விரைவில் காலியாகும்'த.மா.கா.,விலிருந்து விலகிய, மூத்த துணை தலைவர், பீட்டர் அல்போன்ஸ் -வேற எங்கனயாவது மீட்டர் போட்டுட்டீங்களா?


===========

3

25 தொகுதிகளில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டி: 10 வேட்பாளர்கள் அறிவிப்பு # இதென்ன புதுசா இருக்கு? SBI  மாதிரி இது ஒரு பேங்க்கா? ஜாதிக்கட்சியா?


==============

தேர்தலில் புதிய சாதனை: அசாமின் 14 தொகுதிகளில் 90 சதவீதம் வாக்குபதிவு # அசாம் அசா(த்திய)ம் ஆஸம் ஆசம்==============

மதுவிலக்கு பற்றி கருணாநிதி பேசக்கூடாது: தர்மபுரியில் ஜெ., பிரசாரம்

# சரி, சசிகலா பற்றி , அந்த 1000 கோடி தியேட்டர் வாங்கின விவகாரம் பற்றி பேசலாமா?


=================


6 மகனுக்கு கான்ட்ராக்ட் வழங்கல் ; கர்நாடாக முதல்வர் மீது புகார் # இனி வாரிசே இல்லாத வேட்பாளருக்குதான் வாக்களிக்கனும் போல====================

169 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி # 1+6+9 =16=1+6=7 . கூட்டுத்தொகை 7 வருது. 2 பேர்ல யாருக்கு ஏழரை வருதுன்னு தெரியல
=================


திமுக தேர்தல் அறிக்கை ஒரு மாயா ஜாலம்: தமிழிசை # அப்போ கலைஞர் மாயா ஜால வித்தை தெரிஞ்சவர்னு ஒத்துக்கறீங்க?==================


விவசாயிகளின் உண்மையான காவலன் பிரதமர் மோடி -: தமிழிசை # விவசாயி எப்பவும் சொந்த மண்ணில் தான் இருப்பாங்க, மோடி அயல் மண்ணில் தான் 364 நாள் இருப்பாரு

=================


10  அழகிரி கருணாநிதி சந்தித்ததில் அரசியல் இல்லை: ஸ்டாலின் # கண்ணாடிக்கு முன் நின்னு அவருக்கு அவரே சொல்லி ஆறுதல் பட்டுக்கறார் போல


=====================

11 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் தொலைக்காட்சி: விஜயகாந்த் தொடங்கி வைத்தார் # ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது தான் டிவி தீம் மியூசிக்கா?


==============

12 தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இல்லை: விஜயகாந்த் பேட்டி.. # தொகுதி மக்கள் அளிக்கப்போகும் பங்களிப்பில், ஓட்டில் தான் பிரச்சனையா?

==============


13 கருணாநிதியை பழிவாங்கவே ம.ந.கூ., ஆரம்பிக்கப்பட்டது: பீட்டர் அல்போன்ஸ் # நாங்க கூட தேர்தலில் வாக்கு வாங்க அப்டினு நினைச்ட்டோம்


============

14 எந்தத் தாய் டாஸ்மாக்கை திறந்து வைத்து, மகன்களை குடி எனச் சொல்வார்? -சீமான் # நாட்டின் குடி”மகன்”கள் தான் அம்மாவின் குல மகன் கள்

==============


15 கடல் சூழலை பாதிக்காத வகையில் வர்த்தக போக்குவரத்து மற்றும் வாழ்க்கை முறை இருக்க வேண்டும்-மோடி # கடல் கடந்து ஃபாரீன் போய்டனுமா?

============

16 விகடன் இணையதளத்துக்கு தடை- கோர்ட் உத்தரவு # ஏன் தடை?ன்னு 11 காரணங்கள் இருக்காம், நத்தம் சொல்வார்


===========

17 வங்கி தேர்வில் பங்கேற்க கடனாளிகளுக்கு தடை: எஸ்.பி.ஐ அறிவிப்பால் சர்ச்சை! # அப்போ விஜய் மல்லய்யா பேங்க் எக்சாம் எழுத முடியாதா?


============

18 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு பரிதாப ஓட்டாவது போடுங்கள்- சீமான்.# அடப்பாவமே, சிங்கம் போல் கர்ஜிப்பாரு,இப்டி பரிதாபமா இறங்கி வந்துட்டாரே?ஜனங்க இரங்கி வருவாங்களா?

=================

19 வறட்சி காரணமாக ஐபிஎல் போட்டிகளை மகராஷ்டிராவிலிருந்து இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவு # தண்ணிப்பிரச்சனை இல்லாத ஊரு சிரபுஞ்சி, பாண்டிச்சேரி

===============

20 தேர்தல் அரசியலுக்காக என்னை தனிமைப்படுத்தும்
முயற்சிகள் நடைபெற்றன -திருமாவளவன்#தனியே தன்னந்தனியே நான்...

================

0 comments: