Thursday, May 12, 2016

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?பந்தம் கொளுத்திக்கக்கூடாதா?

விஜயகாந்த் 500 கோடி பேரம் : விசாரணை தேவை அன்புமணி.# வெற்றி மாறனிடம் சொன்னா டிவிடி தருவார்


============

2 ஊழல் வழக்குகளில் கருணையே காட்டக் கூடாது: ஜெ. வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் சு.சுவாமி வாதம் #சுகர் இருக்குன்னு சொல்லி தண்டனையை குறைக்கக்கூடாது


===========

3 நாக்கை அறுத்துவிடுவேன்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை மிரட்டிய நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ # சொல்லாமலே படம் பார்த்துட்டாரா?


==============

4 இனி போலீஸ் பற்றி கவலை வேண்டாம். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றலாம்”- சுப்ரீம் கோர்ட் # இந்த தீர்ப்பை எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு நகல் அனுப்பிடுங்க


==========

5 மார்ச்31 வங்கிகள் இரவு 8.00 மணி வரை இயங்கும்.. ஆர்பிஐ அறிவிப்பு..! # அவங்கவங்க அவங்கவங்க வேலையைப்பார்ப்பாங்க, கஸ்டமர்ஸ் வரலாமா?


===========

6 முதல்வரான பின்தான் சட்டப்பேரவைக்குள் கால்வைப்பேன்-விஜயகாந்த் # அப்போ இன்னும் 15 வருசம் வீட்லயேதான் இருப்பீங்களா?


===============

7 கேப்டன் அம்பியாகவும் இருப்பார், தேவைப்பட்டால் அந்நியனாகவும் மாறுவார்

- பிரேமலதா # நல்லவேளை ரெமோவா மாற மாட்டாரில்ல?


===============

8 ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய தடை விதிக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு  #  பாலை வீணடிக்கும் வீணர்களுக்கு சவுக்கடி, அது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்


==============

விஜயகாந்த் தெளிவாகத்தான் இருக்கிறார்: எதிர்க்கட்சிகள் புகாருக்கு பிரேமலதா பதில் # இதை அவரையே சொல்லச்சொல்லுங்க, அப்போதான் நம்புவோம்===============


10 

தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்று பாமகவே திமுக அல்ல: ராமதாஸ் # பழம் கனிந்து கொண்டிருக்கிறதுன்னு தலைவர் சொன்னதே உங்களைத்தானா?==============


11 சிஎம் வேட்பாளர்கள்  1எழுந்திரிக்க முடியாதவர், 2 நடக்க முடியாதவர், 3 நிலையாக நிற்க முடியாதவர்-அன்புமணி # 4 நீங்க தான், முடி சூட முடியாதவர்


===============


12 கூட்டணிக்கு தமாகா வந்தால் பரிசீலனை செய்வோம்-அன்புமணி # அப்போ தனித்துப்போட்டி என்ற உங்கள் பேச்சு, அப்பா பேச்சு காத்தோட போச்சு?


=============


13 35 சுறாக்களுடன் கடலுக்கு அடியில் ஒரு இரவை கழிக்க போட்டியாளர்கள் தேர்வு # ஒரு சுறா கூட 2 1/2 மணி நேரமே நம்மால கழிக்க முடியலை.இவங்க 12 மணி நேரம் , 35 சுறா


================


14 பீகாரில் நாளை முதல் மதுவிற்கு தடை. மீறினால் /கள்ள சாராயம் காய்ச்சினால் 10 ஆண்டு சிறை # ஏப்ரல் ஃபூல்னு நாளை சொல்லாம இருந்தா சரி


===============


15 கேப்டனிடம் சவால்விட்டதால் ஜெ சிறைக்கு சென்றார்.- பிரேமலதா
# ஜட்ஜ் குன்ஹாவே குழம்பி இருப்பாரு இதைக்கேட்டா


===============16  தேவைப்பட்டால் கேப்டன் காந்தியாகவும் மாறுவார், கோட்சேவாகவும் மாறுவார் -பிரேமலதா# காந்தியான்னா  சோனியா காந்தியாவா? ராகுல் காந்தியாவா?=================

17  உலக கோப்பையை ஜெயிக்காவிட்டால் டோணி, கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன்: நடிகை ஆர்ஷிகான் மிரட்டல்  # சுத்தம், இந்தியா ஜெயிச்ச மாதிரிதான்


==============


18 ஏப்ரல் 15 முதல் ஜூன் 30ஆதார் அட்டை இருந்தால்தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும்
# பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?பந்தம் கொளுத்திக்கக்கூடாதா?


===================


19 நீங்க செத்துட்டீங்களா...? கன்பார்ம் பண்ணுங்க தேர்தல் கமிஷன் கடிதத்தால் பெண் ‘ஷாக்’# கண்மணி அன்போட தேர்தல் கமிசனர் எழுதும் லெட்டர்


===========;.20 தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவு # கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கருத்து னு யாரும் கிளம்பலையா?


===============

0 comments: