Thursday, May 26, 2016

ஆடியன்ஸ் சீட் ல உக்காந்து படம் பார்க்காம ஜாகிங் போய்ட்டே பார்க்காறாங்களே.ஏன்?

தலைவரே! சரக்கு அளவு எப்படி அளக்கறாங்க?

180 மில்லி, 375 மில்லி,750 மில்லி இப்ப்டி

அப்போ மதுவிலக்கை படிப்படியா குறைப்போம்னு எப்டி சொல்வீங்க? மில்லிமில்லியா குறைப்போம் தானேசரி?


====================

ராஜாஜி என்னை சந்தித்தபோது மழை பெய்ததாக அவர் சொன்னது கட்டுக்கதை. எனக்கும் மழைக்கும் ராசியே இல்லை. அப்போ மழையே பெய்யவில்லை.நாட்டில் வறட்சிதான் இருந்தது


=====================  தலைவரே! தமிழ்நாட்டில் சாராயக்கடையை முதன் முதலில் திறந்தது யாரு?

அது வந்து.. 1971 ல சென்னை ராயப்பேட்டை ஒயின்ஷாப் ஓனர் மைக்கேல்


=================

4  
  • சார் , இள நீர் அரை டம்ளர் தானே இருக்கு?

 பிரசாதம் எப்பவும் கம்மியா இருந்தாதான் டேஸ்ட். கலப்படம் இல்லாம இருக்கில்ல?


====================


5  மிஸ்!நீங்க 6 வது மாடில குடி இருக்கீங்க, நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல. எப்டி என்னை காதலிப்பீங்க?


மதுவிலக்கு மாதிரி தான். படிப்படியா மேலே வாங்க


==============


6 மறுமலர்ச்சி மச்சினி இல்லம்னு பேர் வெச்சிருக்கீங்களே?


சொந்த சம்சாரம் பிரசவத்துக்கு ஹாஸ்பிடல் போனப்போ கட்னது


===============


7 என் அபிமான ஹீரோவுக்கு மானசீகமா லிப்லாக் கிஸ் தர்றேன்

மிஸ் உங்க வயசு என்ன?
16
அவருக்கு 40 . உங்க அப்பா வயசு.நல்ல வேளை உங்க அம்மா ரசிகை இல்லை

===============


8 என் ஹீரோ ரொம்ப சிம்ப்ளிசிட்டிங்க. ஸ்பூன்ல சாப்பிடமாட்டார். வலது கைல தான்
‘’ ஏம்மா நாங்க மட்டும் அன்னக்கரண்டிலயா எடுத்து சாப்பிடறோம்?

================

9 தியேட்டர்ல ல இருக்கும் 1200 பேரை ஏன் அரெஸ்ட் பண்றாங்க?

 FDFS  ஷோ க்கு டிரஸ் கோடா போலீஸ் யூனிஃபார்ம் போட்டு நிஜ ரிவால்வரும் கொண்டு வந்தாங்களாம்


====================


10  சார், ஹீரோ  எல்லாப்படத்துலயும் ஹீரோயினை தடவு தடவுனு தடவறாரு, ஆனா சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் எப்படி வாங்கறாங்க?

 சிம்ப்பிள்.வாங்கறாங்க!

=================


11    டைரக்டர் சார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் பண்றதுன்னா என்ன?

 மத்தவங்க  யாரும் காப்பி அடிக்கும் முன் ”சத்ரியன் ” போல் முன்னேறி ”தெறி ” க்க விடனும்====================

12 ஆட்சி மாற்றத்துக்கு எனக்கே ஓட்டுப்போடுங்கள்

தலைவரே! நடப்பதே நம்ம ஆட்சி தானே? ஆட்சி தொடர என்பதுதானே சரி
.அடுத்த ஆட்சி என்பதே மாற்றம் தானே?


===============

13 டாக்டர். ரொம்ப நேரம் ஒரே இடதில் உட்கார்ந்தா piles வந்துடுமா?

ஆமா.நர்ஸ் மடில இருந்து எந்திரிங்க.எனக்கு கோபம் வந்துடும்


===============


14 தலைவரே! பிரச்சாரத்துக்கு வாகனம் இல்லாம நடந்தே கிளம்பிட்டீங்க?

கூட சிம்ம வாகனி வருது.அப்டியே கை கோர்த்துட்டே

===============

15 95% பேர் என் பக்கம்

ஓஹோ.கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாங்க?
300
அப்போ அது 0.3% கூட வர்லையே?


================

16 சார்.டிக்கெட் வேணுமா?500 ரூபா.

சாரி.நான் அந்த மாதிரி டைப் இல்லை.
யோவ்.FDFS டிக்கெட்யா

============


17 என் காதலர் செங்கிஸ்கான் போல.

அப்டின்னா?
மீட் பண்ணும்போதெல்லாம் செம்மையா ஒரு கிஸ் குடுத்துட்டுப்போய்டுவான்.செம்மை+கிஸ்+GONE


===============

18 நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்.

அப்டியா?
ஆமா.எல்லாம் பிரசாதத்துக்குத்தான்


=================


19 லெமன் சாதம் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்காம சாப்பிட முடியுமா?

வாய்ல குடிச்சுக்கலாமில்ல?


================

20 ஆடியன்ஸ் சீட் ல உக்காந்து படம் பார்க்காம ஜாகிங் போய்ட்டே பார்க்காறாங்களே.ஏன்?

படம் செம ஸ்பீடாம்


============


0 comments: