Monday, May 16, 2016

பாலோயர்ஸ்.ஜெர்க் ஆக என்ன செய்யனும்?

பொண்ணுங்க எதுனா தத்ஸ் சொன்னா நெட் தமிழன் என் அறிவுக்கண்ணை திறந்துட்டீங்கனு சொல்றாப்டி.அப்போ இத்தனை நாளா..===========2 செகன்ட் ஹேன்ட் களாகப்பார்த்து கரெக்ட் செய்யும் செகண்ட் ஹேண்ட் பிரபுதேவா விற்க்கு பிறந்ததினம்
=============3 I AM WATCHING WITH OUT WATCH = கவனித்துக்கொண்டுதானிருக்கிறேன், கவனிக்காத மாதிரியே....."
============4 ஜெ வைத்தவிர எல்லா அரசியல்வாதிகளும் கேப்டனைத்திட்டியாச்சு,அப்போ அவங்க எல்லாருக்கும் அவரால பாதிப்பு இருக்கு
============
5 உன்னை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு உன்னைக்கண்டு ஒரு பயம் தோன்றியுள்ளது என அறிக , உதா -கேப்டன்============6 மக்கள் விரும்புவதைப்பேசுவதை விட மக்கள் விரும்பும்படி தன் எண்ணத்தைப்பேசுபவன் தான் நல்ல பேச்சாளன்
============
7   தியாகம் செய்கிறோம் என்பது தமக்கே தெரியாமல் செய்வதே சிறந்த தியாகம்
===========
8 தவம் என்பது தனி நபருக்கான பலன், தர்மம் என்பது எல்லோருக்குமான பலன்.நீ தவம் செய்வதை விட தர்மம் செய்வதே நல்லது=============9 வெளுத்துப்போகாத நிறம் வெண்மைக்கு மட்டுமே கிடைத்த வரம்.

அன்பு காட்டாத மனம் பெண்மைக்கு மட்டுமே கிடைத்த சாபம்


===========

10 எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அவரிடமும் மற்றவர்களுக்குப்பிடிக்காத ஒரு குணம் ஒளிந்திருக்கும்.மனிதனின் பலவீனம் அதுதான்


==============


11 அரசர் ஆண்ட காலங்களில் ராஜ தந்திரம் என்பது ராணி சொல்லிக்கொடுத்த மந்திரமாகவும் இருந்திருக்கக்கூடும்


=============


12 இந்த உலகில் யார் வேண்டுமானாலும் குரு ஆகி விட முடிகிறது, சீடனாக தயாராக இருப்பவர்கள் கிடைப்பதுதான் சிரமம்


=============


13 திமுக வை விட அதிமுக பெட்டர்னு எப்டி சொல்றீங்க?

அதிமுக திருடத்தெரியாம திருடி மாட்டிக்கும், திமுக சாமார்த்தியமா சாட்சி இல்லாம கொள்ளை அடிக்கும்


============


14 இந்தியா பங்கேற்காத மேட்சைப்பார்ப்பதும் பார்க்ல,பீச்ல லவ்வர்சை வேடிக்கை பார்ப்பதும் 1 தான்


==============

15 சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெவும் , 2ஜி ஊழல், 200 கோடி கலைஞர் டி வி ஊழலில் கலைஞரும் ஜெயிலுக்குப்போய்ட்டா அமோகமா இருக்கும் தேர்தல் 2016


=============
16 உனக்கு நிர்ணயிக்கப்படும் இலக்கை அடைவதற்கான கால அவகாசம் குறைவாக இருக்கையில் உன் மூளையின் செயல் திறன்  அதிக பட்ச  சுறு சுறுப்பாக இருக்கும்
==================
17  தான் நல்லாருக்கனும், தன் குடும்பம் (மட்டும்) நல்லாருக்கனும் என்று  பாடுபடுபவன் நல்ல குடும்பத்தலைவன் தான், ஆனால் அரசன் ஆக தகுதி அற்றவன்,மக்களுக்காகப்பாடுபடுவனே மக்கள் தலைவன்
==================
18 
 உங்களை யாராவது கலாய்ச்சு உங்களை வெச்சு ஒரு ட்வீட் தேத்துனா  அதை வெச்சு நீங்க 3 ட்வீட் தேத்திடுங்க==================
19 பர்சனல் காரணத்துக்காக FB கொஞ்ச நாள்.வரமுடியலைன்னா.அபிசியலா ஜெர்மன் போனேன்னு அடிச்சு விடுங்க.பாலோயர்ஸ்.ஜெர்க் ஆகட்டும்===========


20 3 மாசத்துக்கு ஒரு ஹீரோயின் கூட டூயட் பாடிட்டு குஜாலா இருப்பாங்களாம்.வாழ்க்கை பூரா ஒரே ஆள் கூட குப்பை கொட்ற நாம இவங்க கடனை அடைக்கனுமாம்


=============

0 comments: