Sunday, May 29, 2016

அரசியலுக்கு வரமாட்டேன்.

அரசியலுக்கு வரமாட்டேன்... தகுதியானவர்களுக்கு ஒட்டு போடுங்கள்: சகாயம் # தகுதியானவங்க இருந்தா போட்டுடுவோம்,ஆனா இல்லையே?


============2 மக்கள் நல கூட்டணியில் உள்ள எந்த கட்சியையும் இனி தி.மு.க. உடைக்க முடியாது: தா.பாண்டியன்# இப்போ எதுக்கு உசுப்பேத்தறீங்க? கலைஞர்க்கு ஓ டி(OVER TIME) ஒர்க் தர்றீங்களா?============
3 'உடைந்து' வரும் மண்பானை தொழில் -செய்தி # ஏதோ ஒரு முக்கியக்கட்சிக்கு மண் பானை சின்னம் கொடுத்துட்டா அவங்க வீட்டுக்கு ஒரு மண் பானை தருவாங்க.தொழில் செழிக்கும்


================

4  நடக்கப் போவது தேர்தல் அல்ல...போர் - பிரேமலதா # அப்போ பாதிக்கப்படப்போவது போர் வீரர்களும் , ஜனங்களும் தான்


=============


தே.மு.தி.க., என்பது சிலந்தி வலை-திண்டுக்கல் லியோனி # அப்போ வலை பின்னும் சிலந்தியோட உழைப்பைப்பாராட்டறீங்க? வெரிகுட்.


==================


இந்தியாவில் வெள்ளைக்காரர்களை விரட்டியது போல, தமிழகத்தில் உள்ள கொள்ளைக்காரர்களை விரட்ட வேண்டும்.-பிரேமலதா # விஜய் மல்லய்யா மாதிரி அவங்களா எஸ் ஆனாத்தான் உண்டு


===================

7  அம்மாவோட திட்டங்களை, 'ரீமேக்' செய்து, கலைஞர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்காரு-அமைச்சர் வளர்மதி #  சினிமாலயும் சரி, அரசியல்லயும் சரி ரீமேக் அதிகமா எடுபடறதில்லையே?


===================


8  த.மா.கா.,விலிருந்து விலகி காங்கிரசில் மீண்டும் இணைத்து கொண்டுள்ளதன் மூலம், அரசியல் தவறுகளைத் திருத்திக் கொண்டுள்ளேன்-பீட்டர் அல்போன்ஸ் # தப்புக்கு மேல தப்பு பண்றீங்க


===================


'பனாமா பேப்பர்ஸ்' மோசடி விவகாரத்தில் தொடர்பா?  நிருபர்கள் கேள்விக்கு ; ஐஸ்வர்யா ராய் மவுனம் # மவுனம் சம்மதம்


==============

10 ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமைப்படுத்தியவர் 
கருணாநிதி-ஜெ # நாம இந்த வருசத்தில் என்ன செஞ்சோம்?படிப்படியா ஏன் இந்த ஆட்சிலயே மதுவிலக்கு கொண்டு வர்லை?

====================


11 6 வருஷம் ஆச்சு... பர்ஸ்ட் நைட்டே நடக்கலை” - புலம்பிய கணவருக்கு டைவர்ஸ் கொடுத்த கர்நாடகா கோர்ட் # 6 வருசமா மிக்சர் சாப்ட்டா போர் அடிக்காது?


============

12 கருணாநிதி, ஜெ வை எதிர்க்காமல்.. ஸ்டாலினை மட்டும் எதிர்க்கும் தேமுதிக.#,சம.வயசுள்ள எதிரியை ஜெயிச்சாத்தான் கிக்

==========

13 துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை: விஜயகாந்த் # தியாகிகள் 40 வயசுக்குள் போய்டறாங்க.துரோகிகள் 100 வயசு வாழ்றாங்க

============

14 நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது: கருணாநிதி வருத்தம் ! #,அழகிரி ,நக்மா ?

==============

15 ஜெ ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மலர்ச்சியல்ல; மக்கள் கிளர்ச்சியே - கருணாநிதி # ஆமா.நிறைய கில்மாப்படம் வாட்சப்ல ரிலீஸ் ஆச்சு.கிளர்ச்சி தான்

============


16 ஜெ மீண்டும் சிறை செல்வது உறுதி - சுப்ரமணியன் சுவாமி
# ஊருக்கு ஒரு குமாரசாமி இருக்கும் வரை நீதிக்கு தலை வணங்கத்தேவை இல்லை


============


17 நடிகர் கார்த்திக் தலைமையில் 4 கட்சிகள் இணைந்து 'விடியல் கூட்டணி'# எந்த கட்சிலயும் சீட் கிடைக்காம அழுது வடியல் கூட்டணி


=============

18

91 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மிகக் குறைவு: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை# மழை நீரை சேமிக்கறதில்லை. இருக்கும் நிலத்தடிநீரை குளிர்பானக்கம்பெனிக்கு வித்துடறீங்க================


19 

இந்தியாவின் ஒப்பற்ற ஒரே தலைவர் அம்மா தான்: ஓ.பி.எஸ்.# அட! இதே டயலாக்கை அன்னைக்கு குமாரசாமியும் சொன்னாரே?================

20 ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த புகாரில், டி.ஜெயக்குமார் மீது வழக்கு. # எல்லாம் பேர் ராசிதான் “ஜெ”யக்குமார் வம்பை( வழக்கை) ஆரத்தி எடுத்து ( விலை குடுத்து) வாங்கிட்டார்

==================

0 comments: