Friday, May 20, 2016

அப்போ திமுக வால் தனியா அந்த வேலையைச்செய்யமுடியாது?

தேமுதிக பிளவால் BJP வெற்றி எந்த விதத்திலும் பாதிக்காது-H.ராஜா.# அதெப்டிங்க எஸ் வி சேகர் மாதிரி சிரிக்காமயே ஜோக் சொல்ல முடியுது?


=========2 அசாம் தேர்தலில் பா.ஜ., தோற்றாலும், மத்திய அரசின் உதவிகள் தொடரும் - நிதின் கட்காரி  # நிதி கட் ஆகாதுன்னு நிதின் கட்காரி சொல்றாரு தோற்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே-ன்னு நிரூபிக்க முயற்சியா?


===================


ஜெ மற்றும் ஸ்டாலினை திட்டி தீர்த்து பேட்டி அளித்த பிறகே, விஜயகாந்தை சந்திக்க, தே.மு.தி.க., நிர்வாகிகள் அனுமதி # அப்போ விஜய்காந்த்தை திட்டினா ஜெ, ஸ்டாலினை சந்திக்கலாமா?


=================


நாடு முழுவதும் 'தாமரை' மயம்: அமித் ஷா # தாமரைக்குளங்களை எல்லாம் பார்க்கவே முடியலை, தாமரை மாயம்னு வேணா சொல்லலாம்=================

சந்திரகுமார் கூட்டம், கட்சியைக் கெடுக்கும் என, தே.மு.தி.க.,வில் இருந்தபோதே நான் எச்சரித்தேன்; -சுந்தரராஜன் #நீங்க அதிமுக போய்டுவீங்கனு சந்திரகுமார் எச்சரிச்சாராம்=============


த.மா.கா.,வை நம்ப வைத்து, அ.தி.மு.க., மோசம் செய்து விட்டது. .-இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன்# பாலிடிக்ஸ் ஜி கே கம்மியோ ஜி கே வாசனுக்கு?================


7 தி.மு.கவுடன், தே.மு.தி.க., கூட்டணி சேர வேண்டும் என்று, 95% பேர் கூறினர் - :சந்திர குமார்:  # அப்புறம் சார், பேசுனபடி பணம் 100% வந்துடுச்சா?


================


மக்கள் நலக் கூட்டணி, தேர்தலுக்கு முன் உடைந்து, காணாமல் போய்விடும். -தமிழிசை # என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா? இது ஜோசியமா? யூகமா? சாபமா?=================

BJP-கு செல்வாக்கு இருந்தால்,DMK,ADMKஇந்நேரம் கூட்டணிக்கு அழைத்திருக்குமே-ஜவாஹிருல்லா #  அப்போ அவங்க கிட்டே இருப்பதெல்லாம் செல்லாவாக்குதானா?


============

10  

 தி.மு.க.,வின்ஆதரவில்லாமல், அ.தி.மு.க., ஆட்சியை  தேமுதிக அகற்ற முடியாது.-


தமிழக காங்., ஊடகத்துறை தலைவர் கோபண்ணா # அப்போ திமுக வால் தனியா அந்த வேலையைச்செய்யமுடியாதுன்னு ஒத்துக்கறீங்க?


===========================


11 பலமுனைப் போட்டியால்,ADMKவுக்கு எதிரான ஓட்டுகள்,  சிதறும்ADMK  வெற்றி பெறும் -தமிழருவி மணியன்  # ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் 80% இருந்தா?


===============

12  கருணாநிதி மகாத்மா காந்தி போல வாழ்கிறார் -கனிமொழி
சமயம் வந்தால் விஜயகாந்த் கோட்சேவாக மாறுவார்-பிரேமலதா #அப்போ 2 பேருமே மற்றவர் போல்தான் வாழறாங்களா?


==================

13  நாடு முழுவதும் 'தாமரை' மயமாகும் -அமித் ஷா சபதம் : # அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்ட மாதிரி தாமரை குளங்களை வெட்டினா சாத்தியம் ஆகும்==================


14 கூண்டோடு ராஜினாமா சேலம் தே.மு.தி.க., மிரட்டல் # சேலம் தான் கேப்டனோட கோட்டைன்னு பிரேமலதா சொல்லுச்சு, கோட்டையே ஆட்டம் கண்டுடுச்சு போல


==================


15 உடல்நலம் பாதிப்பு: ராமதாஸ் கூட்டம் ரத்து # நமக்கு உடம்பு சரி இல்லைன்னா டாக்டர்ட்ட போலாம், டாக்டர்க்கே உடம்பு சரி இல்லைன்னா அவர்  யார் கிட்டே ;போவார்?


===================


16 'தே.மு.தி.க.,வின் பி.ஆர்.ஓ., வைகோ' சந்திரகுமார் பாய்ச்சல் #  திமுக வின்  பி ஆர்  ஓ  நீங்கன்னு அவர் சொல்றாரே?


============


17  எனக்கும் ஜெ.வுக்கும் தான் போட்டி - அன்புமணி # அப்போ நீங்களும் வேட்பாளர் லிஸ்ட்டை டெய்லி மாத்திட்டே இருப்பீங்களா?

========================


18

======================


19  

================

20 

==================

0 comments: