Sunday, May 08, 2016

அழகு மலர்னாலும் 1 தான்.க்யூட் புஷ்பான்னாலும் 1 தான்

1  என் தனிமையைப் போக்க உதவியது இளையராஜாதான்.. ராமதாஸ் # கூட்டணி சேர யாரும் வராம தனி மரமா நிற்கறேன்னு பூடகமா சொல்றாரு

============


2 அமாவாசைக்கு அப்புறம் ஏப். 11ல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்.. "அம்மா" திட்டம்! # அமைதிப்படை அமாவாசை மாதிரி ஓபிஎஸ் உருவாகிடுவாருனு பயமோ என்னமோ?


===============


3 குற்றச்சாட்டுகள் மூலம் சுயவிளம்பரம் தேடுகிறார் வைகோ-ஸ்டாலின் # அவதூறு வழக்குன்னு நோட்டீஸ் விட்டதையும் அப்டி சொல்லலாமா தளபதி

==============

4 பழம் நழுவி ‘தேனில்’ விழுந்து விட்டது...: பிரேமலதா # மதுரைக்குப்பக்கமா இருந்ததால தேனில விழுந்துடுச்சு போல


==============


5 சட்டசபை தேர்தலில் தி.மு.க. தான் ஹீரோ: துரைமுருகன்  #  அப்போ விஜய்காந்த்தும் , வை கோவும் தான் உங்களுக்கு வில்லன்{கள்}


========================


மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தை முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவித்ததில் தவறு இல்லை:-திருமாவளவன் # நமக்கு வேறு வழி இல்லை என கொள்க


===============

2ஜி விவகாரம்: சுய விளம்பரத்துக்காக வைகோ உளறுகிறார் - மு.க.ஸ்டாலின் # பழசை எல்லாம் எதுக்குக்கிளறுகிறார்? என தளபதி பதறுகிறார்


===============

எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது: மதுரை கூட்டத்தில் பிரேமலதா # வெளில இருந்து யாராலும் பிரிக்க முடியாது என பொருள் கொள்க


===================


234 தொகுதிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும்: -ஜெ # ஆசை, பேராசை, நப்பாசை இவையே துன்பத்திற்குக்காரணம்

===============


10 ’என்னைப் பற்றியோ, நமது கூட்டணி குறித்தோ பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' -விஜய்காந்த் # சுருக்கமா  என்னை நம்ப வேணாம் -னு அர்த்தம் புரிஞ்சுக்கப்போறாங்க ஜனங்க


======================


11 

விஜய் மல்லையாவுக்கு அருண் ஜேட்லி கடும் எச்சரிக்கை # ஆள் நாட்லயே இல்ல பாஸ், சும்மா வடிவேலு மாதிரி உதார் விட்டு என்ன
பயன்?ஆளை தப்பிக்க விட்டுட்டு


==============

12 

எங்கள் கூட்டணிக்கு தமாகா வந்தால் தேமுதிக தனது தொகுதிகளை கொடுக்கும்-வைகோ # தாமக  தாமாக வரும் பொறுமை=================

13 

காங்கிரஸுக்கு 25, தமாகாவுக்கு 25: திமுக முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி # தலைவரே! பழம் கை நழுவிப்போனது போல் ”கை”யும் கை நழுவிப்போய்டும் போல இருக்கே?===================


14  


மநகூவில் மீதியிருக்கும் 110 தொகுதியிலிருந்து 35 தொகுதி வேண்டும் - திருமா # கேப்டன் = அங்கே என்ன சத்தம்? திருமா = சும்மா குருமா வைப்பது பற்றி பேசிட்டு இருந்தோம் மாமா=================


15

தமிழக விவசாயிகள் வேதனை தீர ஆட்சி மாற்றம் தேவை: கருணாநிதி # ஆட்சி மட்டும் மாறுனா போதுமா தலைவரே! நம்ம ஆட்சியேதான் வரனும்னு அவசியமில்லைல?


===================

16 

‘குண்டு யானை’ என்று மனைவி திட்டியதால் விவாகரத்து: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு  $ குண்டுச்சட்டிலயே குதிரை ஓட்டிட்டு இருப்பார், கோர்ட்டுக்குப்போகமாட்டார்னு நினைச்சிருப்பாப்டி


===================
17 விஜயகாந்த்தை இழுக்கும் புரோக்கர் வேலையில், வைகோ வெற்றி பெற்றுள்ளார்-ஜெ.அன்பழகன் # அப்போ நம்ம தானைத்தலைவர் அந்த வேலைலயும் தோத்துட்டார்னு ஒத்துக்கறாரா?=================
18  அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும் சுயநலம் உள்ள கட்சிகள். -

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி # பேரில் இருக்கும் மதி ( அறிவு)  பேச்சில் இருந்தா நல்லாருக்கும்


=================


19 பாண்டவர்கள் தோற்றதாக வரலாறு இல்லை.-பிரேமலதா # வரலாறை நல்லாப்படிங்க, பாண்டவர்கள் முதல்ல தோத்தாங்க, ராஜ்ஜியத்தை இழந்தாங்க,அப்புறமாதான் ஜெயிச்சாங்க=================


20 தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: திருமாவளவன் # அழகு மலர்னாலும் 1 தான்.க்யூட் புஷ்பான்னாலும் 1 தான்


==============

0 comments: