Monday, May 23, 2016

மாடர்ன் பிகர் vs திருக்குறள்

அம்மா செல்லமா? அப்பா செல்லமா? என குழந்தையிடம் கேட்கும் முன் உங்களில் யார் அதிக நேரம் குழந்தையுடன் செலவழிப்பீர் என்று பெற்றோரிடம் கேட்கவும்


============
2 நான் 86 பேர மியூட்ல போட்ருக்கேன், எப்பூடி?


மிஸ்! அந்த நேரத்தில் அழகா 86 ட்வீட்ஸ் போட்டிருக்கலாமில்ல?


==============

3 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான். பொண்ணுங்களாப்பார்த்து மென்சன் போட்டு டிபி இதை வைங்க, இவரை வெச்சுக்குங்க-னு ஐடியாகுடுக்கறான் ( வெச்சுக்குங்க-குறியீடு)


===============


4 சந்திரகுமார் விவகாரத்தால் தேமுதிக வாக்கு வங்கி குறையும் என சிலர் நினைப்புக்கு மாறாக அனுதாப ஓட்டு விழும் எனவும் அது திமுக வாக்கு வங்கியில் கழியும் எனவும் எதிர்பார்க்கிறேன்


===============


5 அரவக்குறிச்சிப்பட்டி திமுக கோட்டைன்னு தெரிஞ்சும் ஜோதிமணி அங்கன தான் நிப்பேன்னு அடம் பிடிச்சா கட்சித்தலைமை என்ன செய்யும்?தலைமை சொல் கேளீர்


==================


6 கலைஞர் ஒரு சாணக்கியர் என மீண்டும் நிரூபித்து விட்டார். அதிமுக வோட 40 தொகுதில காங்கிரசை மோத விட்டு ஒரு சீட் கூட வர முடியாம பண்ணிட்டார்


==============

9 வீட்டில்  டைனிங் டேபிள் இருந்தாலும் தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து உணவு உண்ணுவதே உடல் நலனுக்கு நல்லது, பூமித்தாயுடன் நேரடித்தொடர்பில் இருப்பீர்==================
10 குடிநீரை மண் பானை  அல்லது செம்புக்குடத்தில்  சேமித்து வைத்துப்பருகுவது உடல் நலனுக்கு நல்லது. ஃபிரிட்ஜ் வாட்டர் தவிர்ப்பீர்
==================11 கடலில் நீச்சல் அடிச்சுப்பழகியவர்கள் தான் கடல் கன்னி யின் ஃபாலோயர்சாக இருக்கனும் என அவசியம் இல்லை
=================
12   வாழ்க்கை என்பது விஜய் படம் ரிலீஸ் ஆவது போல். எப்பவும் ஏதோ ஒரு தடை வந்துட்டே இருக்கும்.நாம் தான் போராடி ஜெயிக்கனும்
==============13 உங்கள் பக் வீட்டில், / ஆஃபீசில் பக் சீட்டில் ஆந்திரா ஃபிகர் இருந்தால் டக்னு கையைப்பிடிச்சு குலுக்கி வாழ்த்து சொல்லவும். இதான் சாக்கு.யுகாதி தினம்
=================14 நான்  ரொம்ப பிசி  அப்டினு ட்விட்டர்ல ஃபேஸ்புக்ல இருக்கறவங்க அடிக்கடி சொல்லிக்கறாங்க, பிசியா இருக்கறவங்களுக்கு அ(இ)ங்கன என்ன வேலை?


================

15  டீச்சரா இருப்பதில் உள்ள ஆகச்சிறந்த சவுகர்யம் என்னான்னா மேரேஜ் ஆகி இருந்தாலும் காலம் முழுக்க மிஸ் னு தான் கூப்பிடுவாங்க


=============
16 பிகரைத்தேடி அலையாதே.மெயின் பஸ் ஸ்டாப்பில் 1 மணி நேரம் நீ நின்றால் ஓராயிரம் பிகர்கள் உன்னை கிராஸ் செய்யும்- பஸ் ஸ்டாப் பிலிருந்து பரந்தாமன்
=============
17 ஏ சி ரூமில் அதிக நேரம் இருப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக்குறைக்கும்.எனவே ஏ சி தவிர்ப்பீர்/குறைப்பீர்==============18 மாடர்ன் பிகர்களின் கூந்தல் (நீளம்) திருக்குறள் போல் 2,அடிக்குள் அடங்கி விடுகிறது
=============19 உகாதி வாழ்த்து சொன்ன பொண்ணை ஜடையை இழுத்து நெட் தமிழன் உகாதின்னா இன்னா னு கேட்கறான்

அடுத்ததா வாழ்த்துக்கு அர்த்தம் கேட்பான்னு நினைக்கேன்


================

20 நல்லா பழகிட்டு ப்ளாக் பண்ணாதீங்க

ஓக்கே மிஸ், இனிமே பிளாக் பண்ணிட்டு அப்புறமா நல்லா பழகறோம், உங்க வாட்சப் நெம்பர் குடுங்க


===================

0 comments: