Thursday, May 05, 2016

பிந்து மாதவி யை கட்சில சேர்ப்போம், சமாளிப்போம்

1  தலைவரே! நீங்க 1500 கோடி வாங்கினீர்களா?

இல்லை

அப்போ டி வி பேட்டில ஏன் பாதிலயே ஓடி வந்தீங்க?, தில்லா வாங்கலைனு சொல்லலாமில்ல?

==============


2 தலைவரே! உங்களை எல்லாரும்  பி டீம்னு சொல்றாங்க


சரி, பிந்து மாதவி யை கட்சில சேர்ப்போம், சமாளிப்போம் 

=============


3  தலைவரே! இந்துப்பண்டிகைக்கு வாழ்த்தாம மற்ற மதப்பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் வாழ்த்தறீங்க?

 இந்துக்கள் ஓட்டு எப்படியும் கிடைச்சிடும், சிறுபான்மையினர் வாக்கு ஐஸ் வைச்சாதான் கிடைக்கும்


==============

தலைவரே! ஒற்றை இலக்கத்தில் தான் சீட் கிடைச்சுதா? நீங்க எவ்ளோ கேட்டீங்க? அவங்க எவ்ளோ கொடுத்தாங்க?

100  சீட்  கேட்டேன், 1 தான் தந்தாங்க


=================

5   தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தா தமிழ் நாடு இந்தியாவுலயே முதல் மாநிலம் ஆக்குவீங்களா? எப்டி?

  சிம்ப்பிள். இந்தியா மேப்பை தலைகீழா பார்க்கச்சொல்வேன் ஆங்


=================தலைவரே!  உங்களுக்கு அசட்டுத்துணிச்சல் , அசட்டு தைரியம் ஜாஸ்தின்னு சொல்றாங்களே  எப்படி? புரியல.

 தமிழ் நாட்ல இருக்கும் பாதி asset நம்முதுதான், அந்த “அசட்”டு தைரியம் தான்

==============


7   தலைவரே! பால்கனில யே நின்னுட்டு இருக்கீங்களே? பெட்ரூம் போய் தூங்கலை?

பழம் கனிந்து பால் ல விழுமா?ன்னு இன்னும் காத்திருக்கேன்


===================


8    டியர். எங்க அம்மா போட்ட காஃபி மாதிரியே டேஸ்ட்டா உன்னால ஏன் போட முடியல?

 சாரி. எனக்கு காப்பி அடிப்பது பிடிக்காது


================

9 டாக்டர், ஐஸ்வர்யா தனுஷ்க்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் சில சமயம் எனக்கு வித்தியாசம் தெரியாம  போய்டுது

 நல்ல வேளை, அருந்ததிராய்க்கும், ஐஸ்வர்யாராய்க்கும் வித்தியாசம் தெரியலைனு சொல்லலை


=================


10 டியர், பாவாடை , சட்டை போட்டுட்டு ஆத்துல  குளீக்கக்கூடாதா? ஏன்?

 லூசு , பாவாடை சட்டையை ஆத்துல  போட்டுட்டா ஆறு அடிச்ட்டுப்போய்டுமில்ல?


=====================


11 வாழ்க்கையில் இலக்கை நிர்ணயித்து வைத்து ஓடுங்கள்,

டியர், என் இலக்கே உன் கூட ஊரை விட்டு ஓடிப்போவதுதான்


=================

12 டியர், மேரேஜ்க்கு முன் கிஸ்ஸா? சாரி, அது எல்லை தாண்டிய பயங்கரவாதம்

 நோ, எல் லை தாண்டாத ரசவாதம். KISS  என்பதில் K   L  லை தாண்டவே இல்லையே?================


13  சாரி , டியர், மேரேஜ்க்கு முன் உங்க கூட அவுட்டிங்  வர  எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க
-- 

லூசு, உங்க அம்மாவையா கூப்ட்டேன், உன்னைத்தானே கூப்ட்டேன்?

=====================


14 அந்த ஹீரோவை கலாய்க்க 30,000  ரூபா பணம் வாங்குனீங்களாமே?

 யோவ்,  வெறும் 30 ரூபா குடுய்யா, அவரையே நல்ல நடிகர்னு வாழ்த்தி ட்வீட்டறேன்


================


15
  • டியர், என்னைப்பார்த்து பூசணி அல்வா செஞ்சு தா-ன்னு தோழி கேட்டா, ஏன்?

நீ ஒல்லியா இருந்திருந்தா கேரட் அல்வா கேட்டிருப்பா


================


16
  •  டியர், கார்னர் சீட் போய்டலாமா?

அய்யய்யோ நான் மாட்டேன், நான் தான் நடுநிலை வாதி ஆச்சே?


==================

17 மாப்ளை.என் பொண்ணை பூ போல் பாத்துக்கறீங்களாமே?

ஆமா மாமா.விடிஞ்சு.8,ஆனாலும் எந்திரிக்றதில்லை
டெய்லி தண்ணி தெளிச்சு எழுப்பிட்டிருக்கேன்

============


18 கேப் கிடைச்சா போதும்.சந்துல.சிந்து பாட ரெடியா இருக்காங்க.

யாரு?
சிந்து தான்


==============

19 Play store ல டவுன் லோடு ஆகாம பாதில ஸ்டாப் ஆகுது என்னவா இருக்கும்???

ப்ளே ஸ்டோர் சின்னது.ப்ளே டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல.ட்ரை பண்ணி பாருங்க


=========


20  5 வருசம் அந்த கட்சி, 5 வருசம் இந்தக்கட்சின்னு தமிழன் மாற்றி மாற்றித்தானே குத்திட்டு இருக்கான்?

4 வருசத்துக்கு ஒரு டைம் லீப் வருசம் வருது தலைவரே! அந்த மாதிரி இந்த தேர்தல்


====================

0 comments: