Tuesday, May 24, 2016

சார்! நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே?

1  தலைவரே! உங்களை முத்தமிழ் வித்தவர் அப்டினு சொல்றாங்களே?

தமிழ்னு இல்லை. கைக்கு எது கிடைக்குதோ அதை முதல்ல பட்டா போட்டுக்குவேன், பின் வித்துடுவேன்


===================


2 தமிழ் மிஸ் தம்புராட்டி = கிஷ்கிந்தா காண்டம் சிறுகுறிப்பு வரை


டீச்சர்.அது தெரில.கிஸ் ,காண்டம் பற்றி வேணா சொல்றேன்


==============


3 மாப்ளை.ரைட்டர்னீங்களே? இதுவரை என்ன எழுதி இருக்கார்?


45,கேஸ்.எழுதி இருக்கார்.
வாட்?
போலீஸ்ஸ்டேஷன் ல ரைட்டர்ங்க


==============


4 தலைவரே! பனாமா பேப்பர்ஸ் விவகாரம் பற்றி கருத்து சொல்லுங்க.


இனாமா எதும் சொல்ல மாட்டேன்.எதுனா பணமா பரிசா தந்தா சொல்றேன்=============

5 சாரி.நான் யாருக்கும் சோப் போடும் பழக்கம் இல்லை.


யோவ்.கட்ன பொண்டாட்டிக்கு முதுகுக்கு சோப் போடச்சொன்னா இது சால்ஜாப்பா?============

6 விஜய் ரசிகை =பத்தாவதே பாஸ் ஆகாமா எப்டிங்க வாத்தியார் ஆக முடியும் ?

MBBS படிக்காமயே டாக்டர் ஆகறாங்க்ளே அது போல் கவுரவ பட்டம்


===========
7 பிளஸ் 2 ல ஏண்டா ஃபெயில் ஆகிட்டே?


 டாடி, மீண்டும் ஒரு டைம் +2 படிக்க வெச்சா படிப்படியா பாஸ் ஆகிடுவேன் # ஜெ வின் மது விலக்கு வாக்குறுதி 2016


=====================

தலைவரே! கேரளா.வெடி விபத்தைப்பார்த்தீங்க இல்ல?

ஏன்?
மத்த கட்சிக்கு வெடி வைக்கறதும் ஆபத்துதான்


================

9 ஸ்ருதியை எதுக்கு குற்றாலம் கூட்டிட்டுப்போறீங்க?

ஸ்ருதி சுத்தமா பாடனும்னா ஸ்ருதி முதல்ல நல்லா குளிக்கனும் இல்ல?


=================

10 சார்.நீங்க சரியான நாட்டுப்புறம் னு சிலர் சொல்றாங்களே?

நல்லது தானே? தப்பான நாட்டுப்புறம்னு சொல்லலையே?


===============


11 தலைவரே! மேடை ஏறுனா 2 வரிக்கு மேல தொடர்ச்சியா உங்களால பேச முடியாதா?

ஆமா.ஏன்?
திருக்குறள் போல் பேசுவார்னு சொன்னாங்க

===============


12 தலைவர் தமிழ்ல தானே பேசறாரு?எதுக்கு மொழிபெயர்க்க.ஒரு ஆளு?

அவர் பேச்சு திருக்குறள் போல் இருக்கும்.ஒருத்தர் விளக்கிச்சொல்லனும்

================

13 பிரேமலதாவைப்பார்த்தா வாசுகி போல் உள்ளது.

எப்டி?
கேப்டனைப்பார்த்தா வள்ளுவர் போல் தெரியறப்ப பிரேமலதா வாசுகி போல் தெரியக்கூடாதா?

==============


14 கல்யாண மண்டபத்துக்கு வந்த க்யூட் புஷ்பா வை காணோமாம்.

நல்லா பாருய்யா.ரிசப்சன் ல பன்னீர் தெளிச்சதும் பன்னீர் புஷ்பமா மாறி இருக்குமோ என்னமோ?


===============

15 தலைவரே! பெரியப்பா பையன் உணவகம்னு ஒரு திட்டம் வருதாமே?

 ஆமா, அம்மா உணவகம், அண்ணா உணவகம் வரும்போது இது வரக்கூடாதா?==================

16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடியை தமிழ் நாட்டு வாக்களர்களுக்கு பங்கு பிரித்து தருவோம்., இதை விட பெரிய ஆதாயம் கிடைக்கும் வாக்குறுதியை யாராவது தர முடியுமா?


=================

17  தலைவரே! நம்ம தேர்தல் அறிக்கை 75 பக்கம் வருதே ? எதுனா குறியீடா?

 75 வருசமா நான் ஊரை ஏமாத்தி உலைல போட்டிருக்கேன்ல


=====================

18  சார்! நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே?
ஊர்ல ஏகப்பட்ட பொண்ணுங்க காதலிச்ச பையனை கழட்டி விடும்போது அண்ணா தான் சொல்றாக, முதல்ல அதை கவனிங்க்ணா


===================


19   சார், நீங்க கேப்டன் கிட்டே ,  ஜெ கிட்டே பணம் வாங்கிட்டீங்களாமே?

 அப்டியா? அப்பொ ஏன் திமுக வை மட்டும் மிச்சம் வைக்கனும், குடுங்கோ அதையும் வாங்கிக்கறேன்==================

20   தலைவரே! கச்சத்தீவை எப்போ மீட்பீங்க?

தினத்தந்தி ல கன்னித்தீவு கதை முடிஞ்ச அடுத்த நாளே  மீட்டுடலாம்னு இருக்கேன்


=========================

0 comments: