Wednesday, May 11, 2016

போக்குவரத்துத்துறை அமைச்சரின் சின்ன வீடு

18+ ட்விட் போடலாமா வேண்டமா?

போடுங்க

++++++
++++++
++++++-- 


==================

2  மெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் தெரியுமா?

தெரியும், ஆனா இப்போ சொன்னா அதையும் ஜாதிக்கலவரம் ஆக்கிடுவாங்க


==================


3 டியர், டபுள் மீனிங்க் ல பேசுவீங்களாமே?பேசுங்க பார்ப்போம்

உனக்கு சிங்கிள் மீனிங்க்ல ஜோக் சொன்னாலே புரிஞ்சு சிரிக்க 2 நாள் ஆகும்================


4 மேடம்.பிஸ்னெஸ் ல நல்லா டெவலப் ஆனதால பேரை மாத்திக்கிட்டீங்களா? எப்டி?


"LAKSH"ME to CROREME


===============

5 அரசியல் அறிவு அவசியமா?"


வேட்பாளர்களுக்கு தேவை இல்லை.வாக்காளர்க்கு நிச்சயம் தேவை===========


6 தலைவரே!500 கோடி பேரம் நடந்ததுன்னு அவர் சொன்னதும் ஏன் பதறீட்டீங்க?


அந்த 500 கோடிக்கு இன் கம்டாக்ஸ்ல கணக்கு கேட்பாங்க.ரெய்டு வரும்=================


7 ஜட்ஜ் = உங்க 7000 கோடி கடனை செப்டம்பர் மாசம் அடைக்கறதா சொன்னீங்களா?எப்டி அடைப்பீங்க?


இப்போ தான் புது பேங்க்ல லோன் அப்ளைடு.சேங்சன் ஆகட்டும்


===========

8 ஏன் டாக்ஸ் கட்டலை?


இப்போதான் ஈஸ்"வரி"யை கட்னேன்.போன வருசம் புவனேஷ்"வரி"கட்னேன். அடுத்த வருசம் தான் வருமான வரி கட்ட முடியும்===========

9 தெறி க்கு யு சர்ட்டிபிகேட் னு எப்டி தெரியும்?


பெரும்பாலான சமீபத்திய விஜய் படங்கள் யு தான்.அதை வெச்சு அடிச்சு விட்டேன்==============


10 தலைவரே! நம்ம கட்சி வளருதுன்னு எப்டி சொல்றீங்க?


கேப்டன் கட்சி ஆளுங்க 24 பேரை விலை குடுத்து வாங்கிட்டேன்.எப்பூடி நம்ம சாணக்கியத்தனம்?===============

11பிஏ = சார்.செப்டம்பர் மாசம் கடனை அடைச்சிடறதா சொல்லீட்டீங்களே?எப்டி?


மல்லய்யா = மாசத்தை சொன்னேன்.எந்த வருசத்தில்னு சொன்னேனா?

============

12

 பரு வராம இருக்க ஜாதிக்காய் அரைச்சு தேய்க்கனும்


 டாக்டர், உயர் ஜாதிக்காயா?  தாழ்ந்த ஜாதிக்காயா?


====================

13 

டாக்டர்,ஊசிப்போன பலகாரம் சாப்பிட்டா கெடுதலா?


ஆமா, ஊசி நாக்குல குத்திடும்


=====================

14 எங்கள்.தலைவர் சொல்வதை யாரும் சீரியசா எடுத்துக்க வேணாம்

ஓஹோ.அப்போ அவர் என்ன காமெடி பீசா?


===============

15 குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்கனுமா?பாரதிராஜா இயக்கனுமா?ஒரே சர்ச்சையா இருக்கு.

யார் வேணா இயக்கட்டும்.வசனம் நம்ம தலைவர்தான் எழுதனும்


==============

16 உங்க BP  குறையனும்னா உப்பு, புளி , காரம் இவற்றை உணவில் சேர்ப்பதை பாதியா குறைக்கனும், ஃபீஸ் 250 ரூபா

டாக்டர், ஃபீஸையும் பாதியா குறைச்சுக்குங்க. இந்தாங்க 125 ரூபா


=================


17 மிஸ் சவுமியாவ், நீங்க சோறு, டிஃபன் எதும் சாப்பிட மாட்டீங்களா?

 ஏன்?

 மாத இறுதியில் சாப்பிட காசு இல்லாத வாழ்க்கைனு புலம்புனீங்களே? காசை எப்டி சாப்பிட?


===============

18 தலைவரே! போக்குவரத்துத்துறை அமைச்சரா இருக்கும் நீங்க உங்க சின்ன வீட்டை ஏன் இடது பக்கமா கை கோர்த்துட்டு போறீங்க?

 கீப் லெஃப்ட் , ஒபே ட்ராஃபிக் ரூல்ஸ்


==================

19 பேங்க் லோனை அக்டோபர் மாசம் கட்றேன்

 ஓஹோ, எதுக்கு அவ்ளோவ் அவகாசம்

 செப்டம்பர் மாசம் கட்றதா சொன்ன மல்லய்யா கட்றாரா?னு செக் பண்ணனும்ல?


====================


20 டாக்டர் , குங்குமப்பூவை பால்ல கலந்து சாப்ட்டா என்ன ஆகும்?

 அது கம்யூனிஸ்ட் பால் ஆகிடும், வேற யூஸ் எதும் இல்லை===================

0 comments: