Wednesday, May 25, 2016

எங்க ஆள் படம் 10 வருசத்துக்கு ரிசர்வேசன் முன் கூட்டியே ஃபுல் ஆகிடுச்சு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...னு பெரியவங்க சொல்லி இருக்காங்க என்பதற்காக மாடி வீட்டு மாடப்புறாக்களை மட்டும் தான் சைட் அடிப்பேன் என அடம் பிடிக்காதீர்=============================
2 இடது கையால எழுதும் பழக்கம் உள்ள எழுத்தாளர் ரைட் டரா? லெஃப்டரா?================
ஒரு பொண்ணு தெரியாத்தனமா மென்சன் போட்டு ஒரு கேள்வி கேட்டா நெட் தமிழன் 10 கிமீ தூரத்துக்கு அந்த கான்வோ ரயிலை இழுத்துட்டுப்போய்டுவான்
==============எங்க வீட்ல இன்னைக்கு இட்லி னு FB ல ஸ்டேட்டஸ் போட்ட ஆன்ட்டி கிட்டே 4687 பேர்.ஐ!!,எங்க வீட்லயும் அதே இட்லி தான் கறான்.டேய் எமோசனைக்குறை
============5 நம்ம படமே ரிலீஸ் பண்ண முடியாம 40 பேர் கைல கால்ல விழுந்துட்டிருக்கோம்

இதில் அடுத்தவங்க படத்தை ரிலீஸ் ஆக விடமாட்டாராம் # விஷால் மதகஜராஜா

============

6 விஷால் சொன்னதா வந்த செய்தி பேக் நியூசாம்.எதுக்கும் அழிக்காம வெச்சிருப்போம்.பிற்காலத்தில் யூஸ் ஆகும்

===========

7 யார் என்ன சொல்லப்போறாங்க என்பதை யூகித்து முன் கூட்டியே செய்தியும் அதுக்கான கமெண்ட்டும் ரெடியாக வைத்திருப்பவர் உங்கள் அபிமான சிபி

==========

8 பாரதி ராஜா பாலா விவகாரத்தில் பாலா பக்கமே நியாயம்.பாரதி ராஜா உணர்ச்சி வசப்பட்டு தவறாகப்புரிந்து கொண்டார் # குற்றப்பரம்பரை

============

9 ஜெ திரைக்கு அறிமுகம் வெண்ணிற ஆடை.
எம் ஜி ஆர் க்கு அறிமுகம் ஆயிரத்தில் ஒருவன் # தீர்ப்போம் குழப்பம்

============

10 தமிழ்மாநில காங்கிரசை தங்கள் கூட்டணியில் தக்க வைக்காமல் கை நழுவ விட்டது கலைஞர், ஜெ இருவரும் செய்த வரலாற்றுப்பிழை,அது ம நா கூ கூடப்போனது இருவருக்கும் இழப்பு==================
11 குடிகாரர்களுக்கு ஒரு அறிவிப்பு


1 உடனடி மது விலக்கு-பாமக
2 டாஸ்மாக்கை மூடி கள்ளச்சாராயம்,கள்ளு-திமுக
3 எப்போதும் போல் குடித்து சீரழிய-அதிமுக

==============


12 ஆபீசில்/கம்பெனியில்/கட்சியில் உனக்கு அடுத்த இடத்தில் இருப்பவனே உன் இடத்துக்கு குறி வைக்கும் துரோகியாக இருப்பான்


=============


13 உன் தொழில் ரகசியத்தை ,வெற்றி அடைந்த பார்முலாவை யாருக்கும் சொல்லித்தராதே!,கற்றவன் உனக்கே ஆப்பு வைக்கக்கூடும்

===========

14 கோவிலோ ,அரசியல் கூட்டமோ நெரிசலான இடங்களில் இருப்பதைத்தவிர்ப்பது வீட்டுக்கு உயிருக்கு நல்லது

===============


15 234 மீ ரன்னிங் ரேசில் முதலில் வரப்போகும் நபர் கிளம்பி விட்டார்.2 வதாக வரப்போகும் நபர் 3 வதாக வரப்போகும் நபர் முந்தி விடுவாரோ எனும் பயத்தில்.

================

16 குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவா ட்வீட் போட்டு (வாக்கு சேகரிப்பு) உதவினா ஒரு ட்வீட் க்கு 250 ரூபாயாம்.நல்ல வருமானம் தான்


============

17  சொந்த டிபி யே வைக்காத பொண்ணை நெட் தமிழன் உங்களுக்கு இன்னொசெண்ட் ஃபேஸ்ங்க அப்டினு அடிச்சு விடறான், ரொம்ப இன்னொசண்ட்டா அந்த பொண்ணும் அதை நம்புது
=================
18  உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கும்  பூச்சிக்கொல்லி மருந்தான பெப்சி ,கொக்கோகோலாவை 50 ரூபாய்க்கு வாங்கும்  தமிழன் உடல்நலனுக்கு நன்மை பயக்கும் இளநீர் 30 ரூ எனில் மலைப்பது ஏனோ?
================19  எங்க ஆள் படம் 10 வருசத்துக்கு ரிசர்வேசன் முன் கூட்டியே ஃபுல் ஆகிடுச்சு ஒரு கூட்டம் இந்நேரம் கிளம்பி இருக்குமே?==============20 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி. எய்ட்சால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகம் னா அப்போ உங்களுக்கும் எய்ட்ஸ் இருக்கா? என்பான்===================

0 comments: