Tuesday, May 17, 2016

ஒரு ஜட்ஜோட தீர்ப்பை இன்னொரு ஜட்ஜ் மாத்திட்டா அப்புறம் ஜனங்க எப்டி சட்டத்தை மதிப்பாங்க?

விஜய் மல்லையாவுக்கு மீண்டும் சம்மன் -செய்தி # மீண்டும் மீண்டும் சம்மன் வாங்கி சம்”MAN"ஆஃப் த மேட்ச் பட்டம் பெறுகிறார்



================




மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் நடத்துகிறார் – பிரேமலதா # கூட்டணி பேரம் நடந்தப்போ கேப்டன் ரொம்ப காஸ்ட்லியான அரசியல் பேசினாராமே?




===================



3 விமர்சனங்கள் பற்றி கவலையில்லை:வைகோ # சில அரசியல்வாதிகளுக்கு விமர்”சனங்கள்” பற்றி கவலை இல்லை, சிலருக்கு சனங்கள் பற்றி  கவலை இல்லை



==================




நாளை வருகிறார் குலாம் நபி ஆசாத்.. சந்தோஷ செய்தி வரலாம்.. ஸ்டாலின் தகவல் # சந்”தோஷ” செய்தி , குறியீடு




================

மக்களுக்கு ஒன்றும் செய்யாத ஜெ. அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம்-EVKS # ஏன் செய்யலை? ஸ்டிக்கர் ஒட்டுனாங்களே?


===========


6 நாளை வருகிறார் குலாம் நபி ஆசாத்.. சந்தோஷ செய்தி வரலாம்.. ஸ்டாலின் தகவல் # சந்தோஷச்செய்தியா? SUN தோஷ செய்தியா?


==============


7 முதல்வராக விஜயகாந்த்துக்கு என்ன தகுதி உள்ளது... உதயக்குமார் தாக்கு # மீடியாக்களை மதிப்பதில்லை,குடும்ப அரசியல். இது போதாதா?


==============

8 மதுவிலக்கு கொண்டு வருவோம்' என, முதலில் அறிவித்தவர், கருணாநிதி தான்.-ஸ்டாலின்: # யார் முதலில் சொல்வது என்பது முக்கியம் இல்லை,  யார் போட்டியில் வெல்வது என்பதுதான் முக்கியம்




=================



9 மதுவிலக்கு கொண்டு வருவோம்' என, முதலில் அறிவித்தது DMK தான்.-ஸ்டாலின்# '2006 டூ 2011 , 1996 டூ 2001 ல் ஆட்சியில் இருந்தப்போ ஏன் கொண்டுவர்லை?




==================




10 அன்புமணி, சி.பி.ஐ., நீதிமன்றத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார். ஊழல், ஜெ பற்றி பேச, இவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.-கோகுல இந்திரா # அப்போ ஜெ-ன்னாலும் ,ஊழல்னாலும் 1 தானா?




=================




11 இன்றைய தமிழக அரசியலில் சுயநல அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அதில், சரத்குமாரும் ஒருவர் - பொன் ராதா # அதிமுகவில் துரத்தி விட்டுட்டா மீண்டும் வருவார் பாருங்க




====================




12 திமுக, அதிமுக  50 ஆண்டுகளில் செய்யாததை, ஐந்து ஆண்டுகளில் நான் செய்வேன்.-அன்புமணி # அவங்க தான் நல்லா வெச்சு செஞ்சுட்டாங்களே?ஊழல் செய்யாமயா இருந்தாங்க




====================



13 ஆளுங்கட்சியின் தவறுகளை உரக்கச் சொல்லுவோம்: தமிழிசை சவுந்தரராஜன்  # அப்போ  பாஜக கூட ஆளுங்கட்சி தான். தப்பா நினைக்க மாட்டாங்க?




========================



14 தேமுதிக வினர் திமுக வில் இணைவது தொடரும் - ஸ்டாலின்

# இதைச்சொல்ல நீங்க வெட்கப்படனும் சென்றாயன்.பெருமையா சொல்லிக்கறீங்க?

=============


15 திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் # 41 = 4+1 = 5 கூட்டுத்தொகை 5, வருது.அஞ்சி கிடைக்கனும்.5,தான் ஜெயிக்கனும்


=============

16 ஜெயலலிதா ஒரு கொலு பொம்மை... இளங்கோவன் # நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை


============

17 திமுக கதவு அடைக்கப்பட்டது.. இனி எந்த கட்சிக்கும் கூட்டணியில் இடமில்லை: ஸ்டாலின் #24 மணி நேரமும் மெடிக்கல்ஷாப் போல் கதவு திறந்தே இருக்குமே


=============


18
தமிழக கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதி உத்தரவு ரத்து # ஒரு ஜட்ஜோட தீர்ப்பை இன்னொரு ஜட்ஜ் மாத்திட்டா அப்புறம் ஜனங்க எப்டி  சட்டத்தை மதிப்பாங்க?


=================


19
பத்து கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய என்னை முதல்வராக்குங்கள்-அன்புமணி # முதல்வர் ஆக இந்த ஒரு தகுதி “பத்து”மா?


================

20

====================

0 comments: