Monday, May 09, 2016

இது தான் என்னுடைய கடைசி தேர்தல் - கருணாநிதி

திமுக, அதிமுக என இரு கூட்டணிகளிலும் வாசன் பேசி வருவதாகத் தகவல்" # நல்ல கொள்கை.யார் அதிக சீட் தர்றாங்களோ அவங்க கூட கூட்டணி


=============

2 விஜய்காந்தின் முதல்வர் ஆசையைப்பார்த்து எனக்கு சிரிப்பு வருது -அன்புமணி # உங்க நிலைமையை நினைச்சா அழுகை வருது

============


3 ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தா விரட்டி அடிங்க: கனிமொழி
தர மாட்டாரு

தர்றவங்களையும் தர விட மாட்டாரு.

============

4 தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் பாஜக யாரையும் ஆதரிக்காது - தமிழிசை # 
1 எப்பவும் தமிழன் ஒரு பக்கமா தான் சாய்வான் 
2 பிஜேபி க்கு அதிக பட்சம் 2 சீட் வந்தாலே அதிகம்


===============

5 திருமாவளவன் இல்லை என்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் -பிரேமலதா ஆவேசப்பேச்சு# நேத்துத்தான் எங்க அணியை யாராலும் பிரிக்க முடியாதுன்னீங்க அண்ணி==========


6 தென்னந்தோப்பு சின்னத்தில் தமாகா போட்டியிடும்- ஜி.கே.வாசன் அறிவிப்பு # சின்னம் ராசி இல்லை, பேர்லயே “தோப்பு” இருக்கே?தோல்விதானோ?


===========


7 ஆதரவாளர்களுக்கு சீட்.. கருணாநிதியிடம் பட்டியல் கொடுத்த அழகிரி.. கலக்கத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் #இனிதான் அறிவாலயம் களை கட்டும்

=============

8 ஏழைகளுக்கும் இண்டர்நெட் சேவை- மோடி # இது ஏழைக்கு செய்யும் உதவியா? நெட் கம்பெனி முதலாளிகளுக்கு செய்து தரும் மார்க்கெட்டிங்க் உதவியா?


===================]

9 கேப்டன் ஓட்டும் வண்டியில் நாங்கள் பயணிக்கிறோம் - வைகோ

# எப்டியும் 8 சீட் நிச்சயம்?னு சிம்பாலிக்கா சொல்றீங்களா

===========

10 இந்தியாவின் ஒப்பற்ற ஒரே தலைவர் அம்மாதான்:ஓ.பி.எஸ்- தமிழ் நாட்டில் உப்புசப்பற்ற ஒரே அமைச்சர் இவர் தான்


============

11 234 தொகுதிக்கும் ரூ.2340 கோடி அ.தி.மு.க. ஒதுக்கி உள்ளது: வைகோ அர்ஜூனருக்கு அவதூறு வழக்கு பார்சல்.
==============

12 மத்திய அரசின் UDAY திட்டம் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும்  நன்மை பயக்கக்கூடிய திட்டம் இல்லை  -நத்தம் விஸ்வநாதன்# அதுவுமில்லாம உதய் என்பது உதயநிதியை நினைவு படுத்துது


================

13 மக்கள்நலக்கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்படும்-பாஜக வானதிசீனிவாசன் # பல கட்சிகளால் அப்படி தவறாக கணிக்கப்படும்


==============


14 தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்:கார்த்தி சிதம்பரம் # எந்தத்தொகுதில?


=============

15 ராமதாஸ் தனது மகனுக்காக பா.ம.க. கட்சியை நடத்துகிறார்: நடிகை விந்தியா தாக்கு # விந்தையா இருக்கு உங்க அங்கலாய்ப்பு. எல்லா அப்பாவும் அப்டித்தானே?


==============

16 ஹிட்லரைப் போல் இந்தியாவை ஆள மோடி முயற்சிக்கிறார்: அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் # ஹிட்லர் இப்டியா டூர் போய்க்கிட்டு இருந்தாரு?

================

17 ம ந கூ வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது- அன்புமணி # லாஸ்ட் ரேங்க் வாங்கற பையன் 3 வது ரேங்க் வாங்கற பையனை கலாய்ச்சானாம்


==============

18 கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி விடுதலை; முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை - ஷாக் தீர்ப்பு# நல்லவேளை சகாயம் ஐஏஎஸ் மீது குற்றம் சுமத்தலை இன்னும்

============

19  கேப்டன் ஆட்சி அமைந்தால் ரமணா பட ஸ்டைலில் ஊழல் எதிர்ப்பு படை உருவாக்கப்படும் - பிரேமலதா # நல்லா படம் காட்றீங்க=================


20 இது தான் என்னுடைய கடைசி தேர்தல் - கருணாநிதி # தலைவரே! இப்படிச்சொல்வது முதல் முறை அல்ல

=================

0 comments: