Sunday, May 22, 2016

எல்லா பொண்ணுங்களும் ஏன் நயன்தாரா போட்டோவையே டிபி யா வைக்குறாங்க ? அம்பலம்

1  இண்ட்டர்வ்யூவில்உன் பேரென்ன ?

செந்தில் குமார்ங்க.


சாரி.துரோகம் செய்வே.
சார்.அது சந்திர குமார்.


=============

2 உங்க கம்பெனில 1980 ல இருந்து ஒர்க் பண்றேன்.எதுக்கு டிஸ்மிஸ் பண்றீங்க?இப்பவெல்லாம் துரோகிங்க 36 வருசம் கழிச்சுத்தான் முக மூடியைக்கழட்றாங்க

===============

3 மிஸ்! காலைல ஆஃபீஸ் வரும்போது  மைனர் செயின் போட்டிருந்தீங்க, இப்போ நெக்லஸ் போட்டிருக்கீங்க?

 முற்பகல் செயின் பிற்பகல் நெக்லஸ், ஹிஹி


=================


யுவர் ஆனர், என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பு 67 லட்சம் தான்

 அப்டியா? அப்போ மீதி இருக்கும் 10,000 கோடி ரூபாயையும் அரசாங்கம் எடுத்துக்கலாமா?ஜப்தி பண்ணிடலாமா?


================எனக்கு கிடைத்த தகவல் சரின்னா ஜித்து ஜில்லாடி சாங் ல 1000 டான்சர்ஸ்ஓஹோ.999 இருந்தா?
எனக்குக்கிடைத்த தகவல் தப்பு னு அர்த்தம்


=============

6 டியர்.நீ தான் என் இதயக்கனி.ஐ.எப்போ நம்ம மேரேஜ்?
லூசு.இதயத்தில் மட்டும் தான் இடம் உண்டு.கல்யாண மண்டபம் வரைக்கும் போக கைல துட்டு வேணும்ல?


==========

7

தலைவரே! எதுக்காக லட்சுமிமேனன். லட்சுமிராய் இவங்களை கட்சிக்கு கூப்பிடறீங்க?


 சி ஆர் சரஸ்வதிக்கு டஃப் காம்ப்பட்டிசன் தரனுமில்ல?


==============மேடம், ஃபேஷன் ஷோ வில் கலந்துக்கிட்டப்ப உங்க மேலாடை விலகிடுச்சாமே?


ஸ்ருதி கமல்- என்னமோ கட்சியை விட்டு விலகின மாதிரி ஏன் பதர்றீங்க?

===============

9 மாண்புமிகு முட்டாள் அவர்களே....
மானமிகு மாக்கான் அவர்களே..
என்னய்யா இது?


வீரம் மிகு வீணாப்போனவரே

மேடைல மரியாதையா பேசனும்னீங்களே ?


============

10

தலைவரே! சமூக சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தீங்களாமே?


ஆமா, என் சாதி, என் சமூகம் இப்டி சேவை செய்ய...


==================

11 ஜெ  குற்றம் அற்றவர், சொத்து சேர்க்கலை, சொத்தே இல்லை,மேலும் அவர் மிக ஏழை என்பதால் வழிச்செலவுக்கு 5000 ரூபாய் கொடுத்து  இந்த கோர்ட் அவரை விடுதலை செய்கிறது ( கற்பனை)


================

12 நத்தையின் ஆயுள் எத்தனை காலம்?


.........
10 டூ 15 வருசம்னு சொல்ல இவ்ளோ நேரமா?

டீச்சர். நத்தை பற்றி கேள்வி, மெதுவா தான் பதில் வரும்

============

13 மேடம், ஷூட்டிங் டைம்ல கேரவுன் வேன்ல இருந்து வெளில வந்ததும் தலைக்கு குளிக்கறீங்களே ஏன்?

இன்று உலக சுகாதார நாள்

===============

14 எங்க கூட்டணில இடம் உண்டு,ஆனா எங்க கட்சி சின்னத்தில் தான் போட்டி போடனும்

சாரி

எங்க கூட்டணிக்கு வந்துட்டீங்க. இன்னும் என்ன வெட்கம்?

================

15 எதுக்காக டெய்லி கடல்ல  குளிக்கறீங்க?

 கடல்ல உப்பு இருக்கு. உப்பு உடம்பில் சேர்ந்தா சர்க்கரை சேராதில்ல?சுகர் வராம இருக்க குறுக்கு வழி


==================


16  டாக்டர், சுகர் கரைய எதுனா குறுக்கு வழி இருக்கா?

 டெய்லி மூணு வேளை குளிங்க. 3 லிட்டர் தண்ணி குடிங்க. ஒரு வேளை கரைஞ்சாலும் கரையலாம்


=====================17 மிஸ்! இந்த டிபி நல்லாருக்கா?

நல்லாருக்கு, ஆனா பிடிக்கலை

எது? டி பி பிடிக்கலையா?

இல்லை, ஐடியா குடுத்த உங்களை பிடிக்கலை


=============


18 மிஸ்! தீப்பெட்டி இருக்கா?

யோவ், லேடீஸ் கிட்டே எதுக்கு அதை கேட்கறே?

நாங்க எல்லாம் முதல்ல மேட்ச் பாக்ஸ் இருக்கா? பார்ப்போம், அதுக்குப்பின் தான் மேட்ச் ஆகுமா? பார்ப்போம்


=============


19 எல்லா பொண்ணுங்களும் ஏன் நயன்தாரா போட்டோவையே டிபி யா வைக்குறாங்க
அதுதான் ட்விட்டரின் ”புதிய நியமம்”


=================


20  டாக்டர் , ஏ சி ரூம்ல தான் அம்மை நோய் வேகமா பரவுமாமே?

ஆமா, அதனாலதான் ஆபரேசன் தியேட்டர், மார்ச்சுவரி எங்கயும் நான் ஏ சி யே வைக்கலை


=======================

0 comments: