Wednesday, May 04, 2016

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்

துர்கா ஸ்டாலின் காஞ்சி கோவிலுக்கு விஜயம்: திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து பூஜை # பகுத்தறிவுப்பகலவா!உங்க வீட்டிலேயே கொள்கையை விட்டு விலகலா?


=============


2 ஓ.பி.எஸ், நத்தத்திடம் ரூ. 30,000 கோடி பறிமுதல்' # அடேங்கப்பா.பறிமுதலே இவ்ளோவ்னா கொள்முதல் எவ்ளவோ?


============


3 விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ # கேப்டன் 750,கோடி கேட்டதும் உண்மை னு அவங்க சொல்வாங்ளோ?


===============

4 பொதுஇடங்களில் சிறுநீர்கழித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதியுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு # போலீஸ்க்கு செம வருமானம்=========

5 தமிழ்நாட்டில் வைகோவை போல சுயநலமிக்க தலைவர் யாருமில்லை: சி.பி.ராதா # அப்போ வை கோ வின் குரு கம் தலைவரை நீங்க பார்த்ததே இல்லையா?


============

6 நடிகர்சிரஞ்சீவிமகளுக்கு2-வது திருமணம் # அவருக்கு.2 வது மாப்பிள்ளை கிடைத்தது இதுவே முதல் முறை?

==========

7 துணி துவைப்பதில் இருந்து விடுதலை - சூரிய ஒளியில் கறைகளை நீக்கும் புதிய தொழில்நுட்பம்
# நல்ல நாள்லயே தமிழன் துணி துவைக்க மாட்டான்

===========


8 மக்கள் நலக்கூட்டணியை விமர்சிக்காத குஷ்பு - செய்தி # என் கிட்ட மோதாதே கேப்டன் குஷ்பூ ஜோடி யா நடிச்ச படம்.குறியீடு


===========

9 மக்கள் சேவகராக அன்புமணி இருப்பார்: டாக்டர் ராமதாஸ் # சேவகன் னா அர்ஜூன் படம்.அர்ஜூன் னா மக்கள் நலக்கூட்டணி பஞ்ச பாண்டவர்கள்


============


10 DMKதான் DMDKவுடன் பேரம் பேசியதே தவிர DMDK DMKவுடன் பேரம் பேசவில்லை - வை.கோ.# பேரம் பேசுன தலைவர்கள் 2 பேரும் கம்முனு இருக்காங்க. நீங்க ஏன் ?


=================


11 தேமுதிக- பாஜக பேரமா?- வைகோ மன்னிப்பு கேட்க எச்.ராஜா வலியுறுத்தல் # மன்னிப்பு - தமிழ்ல கேப்டனுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை-னு சமாளிங்க

==============


12

அதிமுக விடம் 1500 கோடி ருபாய் வாங்கினீர்களா? கேள்விக்கு வைகோ டி வி பேட்டியில் பாதியில் ஓட்டம் # புதுசா புதுசா கிளப்பறாங்களே! பணம் விளையாடுது மொத்தத்துல


================

13 டெல்லியில் கேஜ்ரிவால் ஜெயித்தது மாதிரி விஜயகாந்த் வெல்வார்: பிரேமலதா # அர்விந்த் கேஜ்ரிவால் தப்பாப்பேசினாலும் தெளிவாப்பேசுவாரே மேடம்?


===============


14 கூட்டணிக்காக கடந்த நான்கு மாதங்களாக தேமுதிகவை நோக்கி வராத கட்சிகளே கிடையாது.  -பிரேமலதா # ஓஹோ, வர்றவங்க கிட்டே  எல்லாம் பேரம் பேசுனீங்களா? ஒரு ஆளைக்கூட விடலையா?


=================

15 வைகோவுக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியது தலைகுனிவானது - பிரேமலதா # ஆமா, வை கோ வுக்கு இது தலைக்குனிவுதான்


===============


16 கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டேன்- ப.சிதம்பரம்  # பிரச்சாரம் செய்யலைன்னா கேட்கும் தொகுதிகள் தர மாட்டேன் - ராகுல்


=================17  தேமுதிக+ ம.ந.கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி..... பிரேமலதா காட்டம் # மறுபடியும் விலை பேச வந்துட்டாங்களா?


=============

================
19  தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் : சீமான் தெரிவிப்பு # எப்பவோ நடந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு இப்போ ஏன் எதிர்ப்பு தெரிவிக்கறாரு? அதான் முடிஞ்சிடுச்சே?

===============

20

வைகோவும், வாசனும் நேரில் சந்திப்பு: அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு # இரட்டை இலைல கேட்ட இடம் கிடைக்கலைன்னா இங்கன வந்துடுங்க, வேணும்கறதை எடுத்துக்குங்க


=================

0 comments: