Friday, May 06, 2016

நீங்க மக்களை நம்பிட்டீங்க சரி, மக்கள் உங்களை நம்பனுமில்ல?

1  சட்டசபை தேர்தலில் மக்களை நம்பி பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது: - ராமதாஸ் # நீங்க மக்களை நம்பிட்டீங்க சரி, மக்கள் உங்களை நம்பனுமில்ல?


===============
2 'ஸ்பெக்ட்ரம்' ஊழல் பின்னணியில் ஸ்டாலின் - :வைகோ  .# இதை ஏன் முன் கூட்டியே முன்னணிக்கு நீங்க கொண்டு வர்லை?================

ஊழல், வறுமையை ஒழிக்க பிரதமர் மோடி உறுதி # இந்தியாவில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும், ஏழைகளையும் ஃபாரீன் அனுப்பிடுவார்னு நினைக்கேன்


==================

மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியவை  திராவிட கட்சிகள்:- அன்புமணி #  அம்மா தாயே-ன்னு அதிமுக கட்சிக்காரங்க மட்டும் தானே  கூப்பிடறாங்க? மக்களுமா?


==================


 'பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன் கண்டிப்பு:கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு # ஸ்லிப்லயே கட்சி சின்னம் பிரிண்ட் அடிக்க வழி இல்லை இனி


=================


====================


=====================


டெல்லியில் 21 ஆண்டுகளாக திருடி வந்த இளைஞர் கைது: 500 வீடுகளில் கொள்ளையடித்தவர் # அரசியல்வாதியா வர எல்லா தகுதியும் இருக்கே?===============

மகளிர் முன்னேற்றத்தைப் பொருத்தே சமுதாய வளர்ச்சி அமையும்- உச்ச நீதிமன்ற நீதிபதி வெ. கோபால்# அப்போ சிஎம் வேட்பாளரா  துர்கா ஸ்டாலின், பிரேமலதா,  ஜெ  இவங்களை மோத விட்ரலாமா?===============

10 

2ஜி பின்னணியில் ஸ்டாலின் எனக் கூறிய வைகோவுக்கு 'நோட்டீஸ் # நோட் திஸ் யுவர் ஆனர், இந்த தெர்தல் முடிவதற்குள் வை கோ வுக்கு நோட்டீஸ் மேல் நோட்டீஸ்===================


11

தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் கடற்கரையில் யாகம் நடத்திய பாஜக # ஆளாளுக்கு யாகம் பண்ணினாலும்  அரோகரா அரோகரா தான்=================


12 

தொகுதிப் பங்கீடு: திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி # இந்த பழமும் கை நழுவிடாம பார்த்துக்குங்க, எப்படியும் காங் 1 சீட் கூட ஜெயிக்காது==============

13 

தேர்தல் சமயத்தில் வைகோ எந்த நேரத்திலும் சரியான பஸ்ல ஏறுவதில்லை #கீ.விரமணி # இருந்தாலும் அவருக்கான மதிப்பு என்றும் இறங்கியதே இல்லை================14
  • யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை: பொன்.ராதா # பாவம், ரொம்ப பரிதாபமான நிலை தான், யாரும் வர்லை போல


===================


15

வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேச்சு: பிரேமலதா மீது வழக்குபதிவு # இந்த தேர்தல் முடியும் வரை வக்கீல்களுக்கு செம லாபம்=================


16 மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது-ஜி.ராமகிருஷ்ணன் # சரி அழைக்க வேணாம் மனசுக்குள்ளேயே சொல்லிப்பார்த்துக்குங்க


===========17 திமுகவில் 80% இந்துகள் உள்ளனர் - #,தப்பு.திமு க வில் இருப்பவர்களில் 80%, இந்துக்கள் என்பதே.சரி
===========
18 அதிமுக MPக்கள் நாடாளுமன்றத்தில் வாய் திறப்பதே இல்லை

- பியூஷ் கோயல் # வாய் திறந்தா அப்புறம் எம் பி பதவியே இருக்காதே?


================

19

ஜெ.வை ஒரு முறை கூட சந்திக்க இயலவில்லை... மத்திய மின்சாரத்துறை அமைச்சர் "ஷாக்" புகார் # BJP கூட கூட்டணிப்பேச்சுனு நினைச்ட்டேன்னு சமாளிப்பாரோ?


================


20

கார் விபத்தில் உயிர் தப்பினார் "ஆர்ஜே" பாலாஜி   # தர்மம் தலை காக்கும் தக்க  சமயத்தில்  உயிர் காக்கும்னு சும்மாவா சொன்னாங்க  நம் முன்னோர்?


================0 comments: