Tuesday, May 31, 2016

சதாம் உசேன் , ஜெ , கலைஞர் - பிரேமலதா

ஜெ வுக்கும், எனக்கும்தான் போட்டி!’ -அன்புமணி முன்னால் ரேசில் ஓடிட்டிருக்கும் கலைஞர்,கேப்டன் 2,பேரை பிடிக்கவே 10 வருசம் ஆகும்

===========

2 அரசியல் பேசமாட்டேன் செய்தியாளரிடம்-ரஜினி.
# கபாலி ரிலீஸ் ஆகற டைம் வேற.கபால்னு எந்தக்கருத்தும் சொல்லிட முடியாது

=============

3 பெண்களை கவர கூடியவர் பீட்டர் அல்போன்ஸ் - EVKS் # ஓஹோ.அப்போ விஜய் சிவகார்த்திகேயன் மாதிரி ஹீரோவா நடிக்கலாமில்ல?ஏன் கட்சி மாறிட்டே இருக்காரு?


===============

4 பிரேமலதா வடிவில் அன்னை தெரசாவை பார்க்கிறேன் - வைகோ # அன்னைக்கு ஜெ வை யும் இப்டித்தான் புகழ்ந்தீங்க


=============

5 கருணாநிதியும் ஏசுவும் ஒன்று- அப்பாவு பேச்சு
# கலைஞர் உங்களை அழைக்கிறார்.பாவிகளை அவர்.ரட்சிப்பார்.சீட் கொடுப்பார்

================
6 அதிமுக ஆட்சியில் மலிவாக கிடைப்பது கூலிப்படைகள் மட்டும் தான். -கீ.வீரமணி
.# பிரமோசன்.சம்பளப்படை.


==============


7

கச்சத்தீவை மீட்பதாக இரு திராவிடக் கட்சிகளும் நாடகங்கள் நடத்துகின்றன: ராமதாஸ் # உங்க ட்விட்டர் அக்கவுண்ட் (DR RAMADAS ) சைக்கூடத்தான் பலர் (DRAMA DAS )டிராமா தாஸ்-னு படிச்சுடறாங்க==============
8  

மதுரையில் ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்: அரசியல் கட்சிகளை அச்சுறுத்தும் தண்ணீர் பிரச்சினை # இது தெரிஞ்சுதான் மதுரைக்குப்போகாதடின்னு விஜய் பாடுனாரு அப்பவே================


25% காலியாக செல்லும் சுவிதா ரயில்கள்: கோடை விடுமுறையில் வசூலிக்க தயாராகும் ரயில்வே துறை # ஸ்வேதா மேனன் ரயில்னு பேர் மாத்துனா கூட்டம் அள்ளிக்கும்


================


10 

வரலாறு தெரியாமல் உளறுவதை பிரேமலதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.. தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை # வரலாறு தெரிஞ்சிட்டு அறிஞ்சிட்டு வந்து அப்புறமா உளறாம்ங்களா?
==============

11

தனித்துப் போட்டியில்லை... கட்சிக்குள் இருந்தே EVKS சை எதிர்கொள்வேன். ஜோதிமணி அதிரடி!# புத்திசாலித்தனமான முடிவு.ஒளிமயமான எதிர் காலம் உண்டு


=============


12 ஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் பயத்தில் உள்ளனர்: கனிமொழி # அவங்க என்ன ஸ்டாலின் மாதிரி சத்தியமா கேட்கறாங்க? பயப்பட

=============

13 நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷாலுக்காக வந்த 'நாட்டாமை' மகள் வரலட்சுமி # தவமின்றி கிடைத்த “வரமே!” என் வாழ்வில் எல்லாம் சுகமே


===============


14 திருப்பூருக்கு ஒரு முறை கூட ஜெ., வரவில்லை: ஸ்டாலின் # வந்தா பனியன் சிட்டி சனியன் சிட்டி ஆகிடுச்சுன்னு சொல்வீங்க,எதுக்கு வம்புன்னுதான் வர்லை போல


================


15 ஜெ மார்க்கெட் போன நடிகை,கலைஞர் மார்க்கெட் போன கதையாசிரியர்- சீமான் # நம்ம படம் மட்டும் 100 கோடியா வசூல் பண்ணிட்டு இருக்கு?


=================

16

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்:-கர்நாடக X CM எடியூரப்பா # தமிழக ஜனங்களாலயே கணிக்க முடியல, நீங்க எப்படி ஜோசியம் சொல்றீங்க?

================

17 தமிழகத்தில் பாஜக வரலாறு படைக்கும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.. # தேர்தல் முடிவுக்குப்பின் வரலாறு படிக்கும், வரலாறு தெரிஞ்சுக்கும்னு வேணா சொல்லுங்க


==============

18 அதிமுக ஆட்சியில் வசந்தம் வீசுகிறது: ஜெயலலிதா. # வெய்யில் காத்து தாங்க அனலா வீசுது,நீங்க ஏ சி ல இருக்கீங்க.வசந்தம் வீசும்


============

19 சதாம் உசேன் மாதிரித்தான் ஜெவும், மு.க வும் சாவார்கள் - பிரேமலதா # ஒரு தலைவர் எதைப்பேசலாம்னு தெரிஞ்சுக்கும் முன் எதை பேசக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கனும்


============

20 பேராசிரியர் அன்பழகனுக்கு வயது அதிகமாகிவிட்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை- கலைஞர் # அவருக்குக்கூட தெரிஞ்சிருக்கு,58 வயசு ஆனா இளைஞர்களுக்கு வழி விடனும்னு

===================

0 comments: