Wednesday, May 11, 2016

டிராஜடி காமெடி

1

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை: டிகேஎஸ் இளங்கோவன் # எப்டி இருக்கும்? இருக்கறது 2 கட்சி, கேட்டது கிடைக்கும்==============


பள்ளிகளில் அரசியல் தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள், விளம்பரங்கள் இருக்கக் கூடாது: கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு #காமராஜர் , வள்ளுவர் ஃபோட்டோ எல்லாம் அகற்றிடாதீங்க


==================

பாண்டவர் அணி இல்லை.. பரமார்த்த குரு அணி: விஜயகாந்த் அணி குறித்து நடிகை விந்தியா கிண்டல் # அப்போ கேப்டன் குருன்னு ஒத்துக்கறீங்க?==============

திமுக கூட்டணியில் சமூகசமத்துவப்படை கட்சிக்கு1தொகுதி ஒதுக்கீடு-கருணாநிதி
# பதுக்கீடு ,ஒதுக்கீடு எல்லாவற்றிலும் முன்னிலை

=============


5 முதலமைச்சர் வேட்பாளர்களில் நான் மட்டுமே ஓடி உழைக்கக்கூடிய நபர்- அன்புமணி # யூத் படமா.வந்தப்பவும் எடுபடலை

=============

6 நாங்கள் அபாயகரமானவர்கள் எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்" வைகோ
# அபாய"கரம்" ஆனவர்கள் காங்கிரஸ் தானே? இரும்புக்கை மாயாவியா?


==============


7 கேப்டன் ஓட்டும் வண்டியில் நாங்கள் பயணிக்கிறோம் - வைகோ
# எப்டியோ மீடியாவும் மக்களும் மீம்ஸ் போட்டே ஓட்டிட்டு இருக்கப்போறாங்க


===========8 உடன்பிறப்பே , உன்னால் திமுகவை ஜெயிக்க வைக்க முடியும் - கருணாநிதி
# "ஜெ" யிப்பு.குறியீடு.வெற்றி பெற வைக்க முடியும்னு சொல்லி இருக்கலாம்


=============


9 துரோகிகளையும் , விரோதிகளையும் மன்னிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி -ஸ்டாலின்
* தேர்தல் சமயத்தில் மட்டும்


===========


10 மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எந்த பதவியும் ஏற்கப்போவதில்லை-வைகோ
மொட்டை வெச்சா குடுமி..வந்தா சிஎம் மாதான் வருவாராம்

==========

11 ஜெ சொத்து குவிப்பதை தொடர்கிறார்,'' , சுப்ரீம் கோர்ட்டில், பா.ஜ., சுப்பிரமணியன் சாமி வாதிட்டார்.# தப்புக்கு தண்டனை கிடைக்கலைன்னா அதே தப்பை தொடர்வான் திருடன்===============


12 

ரூ.4,000 கோடியை திருப்பி தர தயார் - விஜய் மல்லய்யா # ஆனா ஒரு  கண்டிசன்,ஏதாவது ஒரு பேங்க் 8000 கோடி லோன் தரனும்
===================

13  

பழம் நழுவி பாலில் விழும் என்பது ஒரு அரசியல் வசனம்.  அதை சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.-ஜெ.அன்பழகன் # காமெடியா எடுத்துக்கனுமா? டிராஜடி காமெடி?================


14 

 '2ஜி' வழக்கு தொடர்பாக, பல்வேறு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன-வைகோ  # ஆதாரங்கள் இருந்தால் கோர்ட்டில் சமர்ப்பிக்கவும், இல்லாவிட்டால் அதுவே சட்டப்படி குற்றம்
==================


15 

 தமிழகத்தில் கூட்டணிக்காக, பா.ஜ., யாரிடமும் தொங்கவில்லை.-பொன்.ராதா # ச்சீ ச்சீ இந்தப்பழம்  புளிக்கும் நரிக்கதை படிச்ச மாதிரி இருக்கு================

16 

 வைகோ இருக்கும் கூட்டணி, பஞ்ச பாண்டவர் கூட்டணியல்ல; பஞ்சத்திற்கான கூட்டணி- பொன் ராதா # திமுக, அதிமுக வுக்கு மாற்றுக்கட்சியே இல்லையா? எனும் பஞ்சத்தை போக்க வந்த கூட்டணி=================


17 

அரசியலிலேயே இருப்பதற்கு அருகதை அற்ற விஜயகாந்த் கும்பலிடம், வைகோ உள்ளிட்டவர்கள் சிக்கியிருக்கின்றனர்-நாஞ்சில் சம்பத் # இப்டிப்பேசுனா இன்னொரு இன்னோவா கிடைக்கும்னாங்களா?================

18 

விஜயகாந்த் எப்போதும், எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர்.-பிரேமலதா # அடிக்கடி தண்ணிலயே இருப்பார் போல================


19 

விஜய்காந்த்தை எதிர்த்த வர் யாரும்,நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை-பிரேமலதா # ஜெ, சரத்குமார், மன்சூர் அலிகான் எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க?=================


20 

0 comments: